மேரி ஹென்றிட்டா கால்டோர் (Mary Henrietta Kaldor) மார்ச் 16, 1946இல் பிறந்த பிரித்தானிய கல்வியாளர் மற்றும் கீனீசிய பொருளாதார வல்லுநரான நிக்கோலஸ் கால்டோரின் மகளுமாவார். புதிய போர்கள் மற்றும் உலகளாவிய சிவில் சமூகம் பற்றிய கருத்துக்களுக்கு அவர் முன்னோடியாகக் கருதப்படுகிறார். நடப்பு உலகில் மனிதர்களுக்கான பாதுகாப்பினைச் செயல்படுத்துவது குறித்த அவரது கருத்தானது ஐரோப்பிய நாடுகளில் நேரடியான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.
ஜனநாயகமயமாக்கல், சச்சரவுகள் மற்றும் உலகமயமாக்கல் குறித்த அவரது புதுமையான பணிகளுக்காக கால்டோர் மிகவும் கவணிக்கத் தக்க நிலையில் உள்ளார். உலகமயமாக்கல், பன்னாட்டு உறவுகள், மனிதாபிமான தலையீடு, உலகளாவிய சிவில் சமூகம் மற்றும் உலகளாவிய நிர்வாகம் பற்றி அவருடைய எழுத்துக்கள் கவனம் செலுத்தியது, இதனை அவர் “புதிய போர்கள்” என்று குறிப்பிடுகிறார்.
மனித உரிமையின் ஆற்றலிலும், சிவில் சமூகத்தால் அதன் பயன்பாடும் பற்றி கால்டோர் ஒரு நிலையான நம்பிக்கையினை வைத்திருந்தார். மனித உரிமைகள் வழங்குவது என்பது சமூக நீதியினை உருவாக்கும் பெரிய வாய்ப்பாகும் என்றார்.
தனிநபர் உரிமைகள் பற்றி பேசுகிறோம், திரளான அணுகுமுறையினை மாற்றியமைப்பது என்பது அவ்வப்போது அடக்குமுறையின் வெளிப்பாடு என்கிறார். கால்டோர் தற்போது லண்டன் பொருளாதார பள்ளியில் (LSE) உலகளாவிய ஆளுகை பேராசிரியராக உள்ளார், அங்கு அவர் சிவில் சமூகம் மற்றும் மனித பாதுகாப்பு ஆராய்ச்சி பிரிவின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.
ஆதாரம்: www.lse.ac.uk; www.ipfs.io; www.sur.conectas.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

