டெரன்ஸ் ஜேம்ஸ் ஓ’நீல், பரோன் ஓ’நீல் ஆஃப் கேட்லி (Terence James O’Neill of Gatley) மார்ச் 17, 1957இல் பிறந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். ஜிம் ஓ’நீல் 1995 முதல் ஏப்ரல் 2013 வரை கோல்ட்மேன் சாக்ஸில் (Goldman Sachs) தலைமை பொருளாதார நிபுணராக பணியாற்றினார். அக்டோபர் 2014 வரை இங்கிலாந்தில் நகர வளர்ச்சி ஆணையத்தின் தலைவராக இருந்தது பல்வேறு பரிந்துரைகளை அரசுக்கு வழங்கினார்.
21ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் வருமான அடிப்படையிலான நடுத்தர நாடுகளிடையே வளர்ச்சிக்கான மகத்தான ஆற்றலை அடையாளம் கண்ட தொடக்கக்கால பொருளாதார நிபுணர்களுள் ஜிம் ஒருவராக அடையாளம் காணப்படுகின்றார். வளரும் நாடுகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு பணியாற்றியதில் பரவலாக அறியப்படுகிறார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா ஆகிய நான்கு வேகமாக வளர்ந்து வரும் நாடுகளைக் குறிக்கும் BRICs என்ற சுருக்கச் சொல்லை முதலில் உருவாக்கியவர் ஜிம் ஆவார். இந்த நாடுகள் வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பான G7 பொருளாதாரங்களின் உலகளாவிய பொருளாதார சக்தியினைச் சவால் செய்வதாகக் கருதப்பட்டது.
ஜிம்மின் பணி, ‘MINT’கள் எனப்படும் மெக்சிகோ, இந்தோனேசியா, நைஜீரியா மற்றும் துருக்கி உள்ளிட்ட வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் அடுத்த அலையின் வளர்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார். உலகளாவிய வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சியின் இந்த ஆழமான புரிதல், பரந்த அளவிலான சர்வதேச நலன்கள் மற்றும் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல்களைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது.
ஆதாரம்: www.dbpedia.org; www.amr-review.org
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
