மார்ச் 19 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மரியோ மோன்டி (Economist Mario Monti Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 19 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மரியோ மோன்டி – முனைவர் பு. அன்பழகன்

மரியோ மோன்டி (Mario Monti) மார்ச் 19, 1943இல் பிறந்த இத்தாலிய நாட்டை சார்ந்த பொருளாதார அறிஞர், கல்வியாளர் மற்றும் அரசு அலுவலரும் ஆவார், அவர் மேலும் இத்தாலியின் பிரதமராகவும் 2011லிருந்து 2013வரையில் பணியாற்றினார். அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் பொதுவெளியில் கிடைக்காத நேரத்தில், நாட்டின் பண அளிப்பு குறித்த தனது மதிப்பீடுகளை வெளியிட்டதற்காக மோன்டி கவனத்தைப் பெற்றார்.

அவர் ஐரோப்பியப் போட்டிக்கான (European Commissioner for Competition) ஆணையராகவும் பணியினை மேற்கொண்டார், இந்த நிலையில் நிறுவன இணைப்பு மற்றும் நம்பிக்கையற்ற நிலை தொடர்பான வழக்குகள் போன்றவற்றைத் தனது கடுமையான அணுகுமுறையினால் கையாண்டு வெற்றி பெற்றதால் பலரது நன்மதிப்பினையும் பெற்றார்.

நவம்பர் 2011இல், இத்தாலியில் ஏற்பட்ட பொதுக் கடன் நெருக்கடியால் பெர்லுஸ்கோனியின் (அப்போதைய பிரதமர்) அதிகாரப்படி பலவீனமடைந்ததைத் தொடர்ந்து, அரசியல் ரீதியாகச் சுதந்திரமான மோன்டி ஒரு தேசிய ஒற்றுமை அரசாங்கத்தில் நாட்டின் பிரதமர் பதவியை ஏற்க ஒரு முன்னணி வேட்பாளராக உருவெடுத்தார். பின் மோன்டி இத்தாலியில் அரசினை நிறுவினார்.

2012ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சேவைத் துறையை தாராளமயமாக்குவதற்கான நடவடிக்கைகளை மோன்டி அறிமுகப்படுத்தினார். இத்தாலி தொடர்ந்து பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டாலும், மோன்டியின் தீர்க்கமான தலைமை நாடு பேரழிவைத் தவிர்க்க உதவியதாகப் பரவலாகக் கருதப்பட்டது. முழு யூரோ மண்டலத்தையும் நிதி ரீதியாக உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சர்வதேச பேச்சுவார்த்தைகளில் அவர் ஒரு முக்கிய பங்காளியாகவும் உருவெடுத்தார்.

ஆதாரம்: www.britannica.com; www.bruegel.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *