எமோரி ரிச்சர்ட் ஜான்சன் (Emory Richard Johnson) மார்ச் 22, 1864இல் பிறந்து மார்ச் 8, 1950இல் மறைந்த அமெரிக்கப் போக்குவரத்து ஆய்வுகளுக்கான முன்னோடி பொருளாதார அறிஞர் ஆவார். ஜான்சன் அமெரிக்கத் தொழில்துறை ஆணையத்தில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார், அப்போது, போக்குவரத்து குறித்த பெருமளவிற்கான பங்களிப்பினை செய்துள்ளார். ஜான்சன் 1899முதல் 1904வரை இஸ்த்மியன் கால்வாய் ஆணையத்தில் உறுப்பினராக இருந்தார், அங்கு அவர் பனாமா கால்வாய் கட்டுமானத்தில் பணியாற்றினார். அவர் தனது தொழில்சார் திறனையும் அரசியலில் அவருக்கு இருந்த நற்பெயரையும் பயன்படுத்தி, பனாமா கால்வாய் மேம்பாட்டிற்கும் அதற்கான சுங்க கட்டணங்கள் மூலம் வருவாயினை பெறவும் வழிவகை செய்தார்.
ஜான்சன், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் போக்குவரத்து மற்றும் வணிகப் பேராசிரியராக இருந்தார். இத்துடன் பல்வேறு குழுக்களில் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார், குறிப்பாக அமெரிக்கத் தொழில்துறை ஆணையத்தில் போக்குவரத்து நிபுணராகவும், அமெரிக்காவில் ரயில்வே சொத்துகளை மதிப்பிடும் குழுவில் உறுப்பினராகவும், அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான (1904-05) உறுப்பினராகவும், தேசிய நீர்வழி ஆணையத்தில் போக்குவரத்து நிபுணராகவும் (1909) பணியாற்றினார். 1911ஆம் ஆண்டில், பனாமா கால்வாய்க்கான சுங்கச்சாவடி கட்டமைக்கும் பணி அவருக்கு வழங்கப்பட்டது. கப்பலின் அளவீடு மற்றும் சரக்குகளின் அளவினைக் கொண்டு சுங்கக் கட்டணம் தீர்மானிக்கப்பட்டது, இதனை ஜான்சன் அளவீட்டு முறை என்று அழைக்கப்பட்டது.
ஜான்சன், Inland Waterways: their Relation to Transportation (1893); American Railway Transportation (1903); Elements of Transportation (1906); Railroad traffic and Rates (1911); Panama Canal Traffic and Tolls (1912); Measurement of Vessels for the Panama Canal (1913); The Panama Canal and Commerce (1916); Principles of Railroad Transportation (1916), போன்ற புத்தகங்களையும் மற்றும் ரயில்-சாலை பொருளாதாரம் பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார்.
ஆதாரம்: www.hetwebsite.net; www.en.m.wikisource.org; www.magazine.wharton.upenn.edu
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
