மார்ச் 24 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மார்ட்டின் ஷுபிக் (Economist Martin Shubik Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 24 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- மார்ட்டின் ஷுபிக் – முனைவர் பு. அன்பழகன்

மார்ட்டின் ஷுபிக் (Martin Shubik) மார்ச் 24, 1926இல் பிறந்து ஆகஸ்ட் 22, 2018இல் மறைந்த அமெரிக்காவினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவார். ஷுபிக்கின் கல்வியின் ஆர்வமாக, பணம் மற்றும் நிதி நிறுவனங்களின் கோட்பாடு, விளையாட்டுகளின் கோட்பாடு மற்றும் நோக்க அடிப்படையிலான நடவடிக்கை, அதன் உறவு, கலாச்சார நிறுவனங்களின் மேலாண்மை போன்றவற்றை களங்களில் வெளிப்பட்டது.

ஷுபிக்கின் மிகவும் புகழ் மிக்க புத்தகங்களில் ஒன்று சமூக அறிவியலில் விளையாட்டுக் கோட்பாடு. பொருளாதாரத்தைப் புரிந்துகொள்வதற்கான தனது அணுகுமுறையை விவரிக்க அவர் Mathamatical Institutional Economics (கணித நிறுவன பொருளாதாரம்) என்ற சொல்லை உருவாக்கினார். உண்மையான பொருளாதாரத்தின் நடைமுறைகள் கணிப்பினைக்கொண்டு செய்முறை மாதிரியினை உருவாக்கினார்.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார வல்லுநரான லாயிட் எஸ். ஷாப்லியுடன், பங்குதாரர்கள் முதல் சட்டமன்றங்கள் வரையிலான குழுக்களுக்குள் கூட்டணிகளால் பயன்படுத்தப்படும் அதிகாரத்தை அளவிட ஷுபிக் ஒரு குறியீட்டை உருவாக்கினார். அவர் கணினி மாடலிங் துறையில் நிபுணராக இருந்தார், மேலும் The Aggressive Conservative Investor (2008) உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். ஷுபிக் நீண்ட காலமாகப் பொருளாதாரத்தில் பணத்தின் செயல்பாட்டினால் ஈர்க்கப்பட்டார்.

தனது பகுப்பாய்வைத் தொடர, வால்ரேசியன் மாதிரியின் பொதுவான தன்மையை உள்ளடக்கிய ஒரு விளையாடக்கூடிய விளையாட்டை அவர் உருவாக்கினார், அதில் பணம் ஒரு முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது. இந்த விளையாட்டு முதன்முதலில் அவரது 1973 ஆம் ஆண்டு Commodity Money, Oligopoly, Credit, and Bankruptcy in a General Equilibrium Model வெளியிடப்பட்ட புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஷுபிக் பாதுகாப்பு பகுப்பாய்வில் நாட்டம் கொண்டிருந்தார். அவரது Terroriam, Technology and the Socioeconomics of Death (1997) என்ற கட்டுரை தேசிய எல்லைகளின் அதிகரித்து வரும் ஊடுருவலால் ஏற்படும் போரில் முன்னுதாரண மாற்றத்திற்கு முன்னோடியாக அமைந்தது.

ஆதாரம்: www.som.yale.edu; www.nytimes.com; www.aeaweb.org

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *