எர்ன்ஸ்ட் ஏங்கல் (Ernst Engel) மார்ச் 26, 1821இல் பிறந்து டிசம்பர் 8, 1896இல் மறைந்த ஜெர்மன் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் மற்றும் புள்ளியியல் நிபுணர் ஆவார், அவர் Entle curve (ஏங்கல் வளைகோடு) அல்லது ஏங்கலின் விதிக்காக நினைவுகூரப்படுகிறார். 19ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலங்களில், எர்ன்ஸ்ட் ஏங்கல் பெல்ஜிய குடும்பங்களின் செலவினங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆய்வினை மேற்கொண்டார்.
அதில் அக்குடும்பங்களை மூன்று குழுக்களாகப் பிரித்தார்: நிவாரணத்தினை சார்ந்து வாழும் குடும்பங்கள், ஏழைகள் ஆனால் சுதந்திரமான வாழ்பவர்கள் மற்றும் வசதியாக வாழ்பவர்கள், பின்னர் அவர் உணவு, உடை, வீட்டுவசதி, கல்வி, பொழுதுபோக்கு மற்றும் பிற செலவு வகைகளுக்கான அடிப்படையில் அவர்களின் செலவுகளைப் பிரித்தார். இவ் ஆய்வின் அடிப்படையில் வெளிப்பட்ட முடிவானது, ஏழ்மையான பின்னணி கொண்ட குழுவானது, அவர்களின் செலவினத்தில் உணவுக்கு அதிகமாக செலவிடுகின்றனர், ஆனால் குறைந்த விழுக்காட்டினை ஆடை மற்றும் கல்விக்குச் செலவிடப்பட்டது என்று கண்டறிந்தார்.
ஒரு நாடு வளம் நிறைந்ததாக உள்ளதானது, உழைப்பு மற்றும் மூலதனத்தின் விகிதத்திற்கு குறைவாகவே உணவு உற்பத்திக்காகச் செலவிடப்பட வேண்டும், இதனால் அது உற்பத்தி மற்றும் சேவைகளுக்கு அதிகமாகச் செலவிட முடியும், இதனுடைய விளைவினால் அந்த நாடானது முன்னேறிய பொருளாதார வளம்பெற்றதாக உருவாகும் என்கிறார் ஏங்கல்.
இந்த கருத்தானது உலகின் பல்வேறு நாடுகளுக்கு தங்களை மேம்படுத்திக்கொள்வதற்கு உதவியது என்பது குறிப்பிடத்தக்கது. ஏங்கல் வளைவு என்பது கீன்ஸின் நுகர்வுச் சார்பு பற்றியதாகும், இது மொத்த செலவினத்தை வருமானத்துடன் தொடர்புப்படுத்துகிறது மற்றும் பேரியல் பொருளாதார பகுப்பாய்வின் அடிப்படையாக இது மாற்றமடைந்தது. வரவு-செலவு ஆய்வுகளில் அவரது ஈடுபாடு தொடக்கக்கால பொருளாதார புள்ளிவிவரங்களில் அவரது ஆர்வத்தைத் தூண்டியது.
ஏங்கல், 1860க்கு முந்தைய ஆண்டுகளில் பிரஷ்ய கம்பு அறுவடையின் அளவிற்கும் அதன் சராசரி விலைக்கும் இடையிலான உறவை ஆராய்ந்தார் இது, அவரின் முக்கிய பங்களிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதனைத் தவிர உலகமயமாதல், ஜனநாயகம், தொழிலாளர் மற்றும் தொழில், வரிவிதிப்பு, காப்பீடு, வங்கி மற்றும் போர் உள்ளிட்ட பலவற்றைப்பற்றி ஏங்கல் எழுதியுள்ளார்.
ஆதாரம்: www.britannica.com; www.investopedia.com; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
