மார்ச் 28 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஸ்டீவ் கீன் (Economist Steve Keen Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மார்ச் 28 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- ஸ்டீவ் கீன் – முனைவர் பு. அன்பழகன்

ஸ்டீவ் கீன் (Steve Keen) மார்ச் 28, 1953இல் பிறந்த ஆஸ்திரேலியா பொருளாதார அறிஞர் ஆவார். அவருடைய முக்கிய ஆராய்ச்சி களங்களாகப் பேரியல் பொருளாதாரம் மற்றும் வளர்ந்துவரும் காலநிலை மாற்றத்தின் விளைவினால் ஏற்படும் பொருளாதார சிக்கலினைப் பற்றியதாகும்.

கீனின் கூற்றுப்படி, புதியதொன்மைப் பொருளாதார பள்ளி இயற்கை விதிகளின்படி செயல்படும் உலகத்தைப் பிரித்து என்றும், சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் இயற்கை வளங்களின் மீளுருவாக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளவில்லை என்றும் கருதினார். கீன், மூலதனம், உழைப்பு மற்றும் தொழில்நுட்பம் ஆகிய கூறுகளை உருவாக்கி, அவற்றை ஒரு கோப்-டக்ளஸ் உற்பத்தி செயல்பாடாக இணைத்தனர்.

பொருளாதாரமானது சுற்றுச்சூழல் அமைப்புகளின் தொடர்ச்சியான இருப்பைச் சார்ந்துள்ளது, இதில் நமது பங்கு நாம் வாழும் கிரகத்தைப் பாதுகாப்பதாக இருக்க வேண்டும் என்று கீன் கூறுகிறார். கடுமையான பொருளாதார நெருக்கடி நெருங்கி வருவதை உணர்ந்து, டிசம்பர் 2005ஆம் ஆண்டிலேயே அதைப் பற்றி பகிரங்கமாக எச்சரித்த ஒரு சில பொருளாதார வல்லுநர்களில் கீனும் ஒருவர். கடன்-பணவாட்டம் பற்றிய அவருடைய ஆய்வானது ஒரு முன்னோடியான ஒன்றாக்க கருதப்படுகிறது.

அவர் பொருளாதாரத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க வலைப்பதிவைப் பராமரிக்கிறார், மேலும் அவரது Debunking Economics என்ற புத்தகத்தில், புதிய தொன்மைப் பொருளாதாரக் கோட்பாடானது தவறானது மட்டுமல்ல, பல இடதுசாரி புரட்சியாளர்களுக்கு அச்சுறுத்தலாகவும் இருக்கிறது என்று குறிப்பிடுகின்றார். ரியல்-வேர்ல்ட் எகனாமிக்ஸ் ரிவியூவிலிருந்து ரெவரே விருதை கீனிற்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: www.ineteconomics.org; www.thersa.org; www.earth4all.life

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *