கார்ல் குஸ்டாவ் அடால்ஃப் நைஸ் (Karl Gustav Adolf Knies) மார்ச் 29, 1821இல் பிறந்து ஆகஸ்ட் 3, 1898இல் மறைந்த வரலாற்றுப் பொருளாதாரப் பள்ளியைச் சேர்ந்த ஜெர்மானியப் பொருளாதார அறிஞர் ஆவார், மேலும் அவர் Political Economy from the Standpoint of the Historical Method (1853) என்ற புத்தகத்தின் ஆசிரியர் என்று நன்கு அறியப்பட்டவர்.
புருனோ ஹில்டெபிராண்ட் மற்றும் கார்ல் நைஸ் ஆகியோரின் படைப்புகள் பொதுமைப்படுத்தப்பட்ட முறையின் கருத்தை உருவாக்கின. பொருளாதாரக் கொள்கைகளின் நன்மைகள் இடம் மற்றும் நேரத்தைப் பொறுத்தது என்றும், பல்வேறு சமூகங்களை அறிவதன் மூலம், வளர்ச்சியின் சில பொதுவான நிலைகளைக் குறிப்பிட முடியும் என்றும் அவர்கள் நம்பினர்.
கார்ல் நைஸ் ஒரு “நேரியல் நிலைகள்” (linear stages) கோட்பாட்டை முன்வைத்தார், இது “தார்மீக முன்னேற்றம்” (moral progress) பற்றி விளக்கியது. பொருளாதாரம் இயற்கை சக்திகளுக்கும் மனித செயலுக்கும் இடையிலான வெளிப்பாடாகும் என்றார் நைஸ். மனித செயல்பாட்டில் பகுத்தறிவற்ற மற்றும் அகநிலையின் ஆதிக்கம் மிகுதியாக இருப்பதால், பொருளாதார சட்டங்களை இயற்கை அறிவியலின் அடிப்படையில் நடத்த முடியாது என்று நைஸ் வாதிட்டார். இதன் விளைவாக, பொருளாதாரத்தின் “சட்டங்கள்” என்று அழைக்கப்படுபவை வெறும் “ஒப்புமை விதிகள்” என்றார். தர்க்கரீதியான (அனுபவத்திற்கு மாறாக) அடிப்படையில் வரலாற்று முறையை நைஸ் ஆதரித்தார்.
நைஸ், தொன்மைப் பொருளாதாரத்தினை தொடர்ந்து விமர்சனம் செய்தார், சோசலிச இயக்கங்களை கடுமையாக எதிர்த்தார். 1857ஆம் ஆண்டு அவர் எழுதிய படைப்பில், வணிக விளம்பரங்களின் பொருளாதார பங்கை முதன்முதலில் ஆராய்ந்தவர் அவர்தான். மூலதனம், பணம் மற்றும் கடன் பற்றிய நைஸின் எழுத்துக்கள் அவரது புலமை, தத்துவார்த்த திறனை வெளிப்படுத்தியது.
ஆதாரம்: www.britannica.com; www.hetwebsite.net; www.encyclopedia.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
