பவன் சுக்தேவ் (Pavan Sukhdev) மார்ச் 30, 1960இல் பிறந்த இந்திய நாட்டை சார்ந்த சுற்றுச்சூழல் அறிஞர் ஆவார், அவரது ஆய்வுகள், பசுமைப் பொருளாதாரம் மற்றும் சர்வதேச நிதி ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். பவன் சுக்தேவ் கல்வியால் ஒரு விஞ்ஞானி, பயிற்சியால் ஒரு சர்வதேச வங்கியாளர், ஆர்வத்தால் ஒரு சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் ஆவாரி. இன்றைய நிறுவனத்தை விரைவாக மாற்றக்கூடிய, நாளைய பசுமையான மற்றும் சமமான “நிரந்தர பொருளாதாரத்தை” வழங்கக்கூடிய நுண்-கொள்கை மற்றும் ஒழுங்குமுறைகளில் நான்கு மாற்றங்களை அவர் ஆதரிக்கிறார்.
பவன் சுக்தேவ் UNEP-யின் பசுமைப் பொருளாதார முன்முயற்சியின் சிறப்பு ஆலோசகர் மற்றும் தலைவராகவும், TEEB-யின் ஆய்வுத் தலைவராகவும் (2008-2011), TEEB அறிக்கை தொகுப்பையும் (‘சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தின் பொருளாதாரம்’) தயார் செய்தவராகவும், UNEP-யின் முக்கிய அறிக்கையான ‘பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி’ என்பதை உருவாக்க காரமானவராகவும் திகழ்கிறார்.
பவன் சுக்தேவ் தற்போது, UN சுற்றுச்சூழல் மற்றும் TEEB-ஐ நல்லெண்ண தூதராகவும், அதன் புதிய ஆய்வான “TEEB for Agriculture and Food”-க்கு சிறப்பு ஆலோசகராகவும் பணியாற்றுகிறார். ஜனவரி 2018இல், பவன் WWF-International-இன் தலைவராக நியமிக்கப்பட்டார். WWF என்பது இயற்கை பாதுகாப்புக்கான உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாகும், 80க்கும் மேற்பட்ட நாடுகளில் அலுவலகங்கள் மற்றும் 5மில்லியனுக்கும் அதிகமான நன்கொடையாளர்கள் மற்றும் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
“சுற்றுச்சூழலுக்கான நோபல் பரிசு” என்றும் அழைக்கப்படும் இந்த விருதைப் பெறும் நான்காவது இந்தியர் சுக்தேவ் ஆவார். இந்தியாவில் இருந்து முந்தைய வெற்றியாளர்களில் 1991 இல் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், 2015 இல் சூழலியல் நிபுணர் மாதவ் காட்கில் மற்றும் 2016 இல் சுற்றுச்சூழல் பொருளாதார நிபுணர் பார்த்தா எஸ். தாஸ்குப்தா ஆகியோர் அடங்குவர்.
ஆதாரம்: www.teebweb.org; www.genevaenvironmentnetwork.org; www.india.mongabay.com
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
