ஹென்றி டன்னிங் மேக்லியோட் (Henry Dunning Macleod) மார்ச் 31, 1821 பிறந்து ஜூலை 16, 1902 மறைந்த ஸ்காட்டிஷ் நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர். வங்கிகள் பற்றியும் ஆய்வும், தொன்மைப் பொருளாதாரப் பள்ளியினரை பற்றிய விமர்சனங்களும் அவருடைய எழுத்து பணிகளில் காணப்பட்டது. மேக்லியோட்வின் Theory and Practice of Banking (1855-56) என்ற புத்தமானது, வரலாற்றுத் தன்மை கொண்டதாக இருந்தது, இப்புத்தகம் அவரது மிகவும் சிறந்த படைப்பாகப் பலராலும் பாராட்டப்பட்டது.
மேக்லியோட் வாட்லியின் அணுகுமுறையைத் (ரிச்சர்ட் வாட்லியின் அணுகுமுறை முறையானது, தெளிவான வரையறைகளின் முக்கியத்துவம், எடுத்துக்காட்டுகளின் பயன்பாடு மற்றும் சொற்களஞ்சியங்களின் கட்டுமானம் உள்ளிட்ட வாதங்களின் அமைப்பு மற்றும் கூறுகளில் கவனம் செலுத்தியது) தழுவினார், பொருளாதாரத்தை ‘பரிமாற்றங்களின் அறிவியல்’ என்று குறிப்பிடுகின்றார்.
பொருட்களின் மதிப்பானது அளிப்பு மற்றும் தேவையால் மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது என்கிறார். நீண்ட கால விலையின் தொன்மை பொருளாதார அறிஞர்களின் உற்பத்தி செலவு கோட்பாட்டை அறிவியல் ரீதியாகச் சரியானது இல்லை என்றார் மேலும், குறுகிய மற்றும் நீண்ட காலங்களுக்கு இடையிலான வேறுபாடுத்திப் பார்ப்பது தவறானது என்கிறார்.
அளிப்பு மற்றும் தேவை கோட்பாட்டின் மீதான மதிப்பு கோட்பாட்டை மீண்டும் உருவாக்கி, அறிவியலின் ஆக்கப்பூர்வமான பிம்பத்தையும் சாதனமாக்கி அளிக்க மேக்லியோட் இயற்பியல் அறிவியல் மற்றும் கணிதத்தை நாடினார், பொருளாதாரத்தை Queen of the Social Science (சமூக அறிவியலின் ராணி) என்று அழைத்தார்.
பரிமாறிக்கொள்ள வேண்டிய விஷயங்களில் சொத்துரிமைகளை நிலைநிறுத்த நீதித்துறைக்கும், சூழலை வழங்கக் கடன் மற்றும் பணத்தின் நிறுவன விவரங்களுக்கும் அழைப்பு விடுத்தார். வங்கியியல் குறித்த மேக்லியோடின் படைப்புகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
ஆதாரம்: www.hetwebsite.net www.hetwebsite.net என்ற இணையதளம்
📚 எழுதியவர்:

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025ல் வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
