எட்டுதானே முடிந்தது.
முடித்துவிட்டீர்களே,
வாசலில் விளையாடிய மகளை மரணவாசலுக்கு அனுப்பிவிட்டீர்களே
அரும்பிய சிறகை முறித்து குரலெடுத்தவளின் குரவலைய நெரித்துவிட்டீர்களே
அய்யோ ஐந்து படிக்கும் முன் இத்தனை பாடுகளா?
எப்படித் துடித்தாளோ
கொடூரக்கார்களே
கருவில் தப்பியவள் உருவாகி வருமுன் உருக்குலைத்துவிட்டீர்களே
போதையில் பீயை தின்பீர்களா பாவிகளே
தொட்டுக்கொள்ள ஊறுகாய் கறியென நினைத்தீர்களோ
எம் செல்லத்தை
பெண்ணருமை அறியாநாட்டின் மண்ணாசை பிடித்த மன்னனே ராமனைப்போல
மனையை விட்டவன் தானே
உலகம் சுற்றும் ஊழல்வாதியே
சுற்றுலாவிற்கு வந்தவளை நாட்டின் மைந்தர்கள் அரங்கேற்றிய வன்மம் அறிவாயா?
சனாதன தர்மனே !
உமது செவிப்பறை
வாக்குகளின் சதவீதத்தை மட்டுமே உள்வாங்குமோ
எனதருமை புரியாதவர்களுக்கு
எங்கள் வாக்குகள் மட்டும் எதற்கு?
ஓட்டுக்காக போராடினோம் அன்று வெட்கக்கேடு !
ஈரங்கெட்டவர்களுக்கு வாக்களித்து வன்புணர்வுக்கு ஆளாகிக்கொண்டேயிருக்கிறோம்
ஒவ்வொரு நிமிடமும் .,….
இனி இந்தியா மகளிர் வாழத்தகுதியில்லா நாடெனெ முழங்குவோம் !
பெண்பிள்ளைகள் வாழும் பகுதியில் செந்தட்டியை வேலி அமைப்போம்
பயந்தல்ல
அவர்களின் அரிப்பை அடக்க
க.பாண்டிச்செல்வி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.