ஒரு விஞ்ஞானியின் துயரம் - மரியானா கெலாம்பி (Mariana Gelambi) | தமிழில்: மோசஸ் பிரபு | Mariana Gelambi: Scientist's tragedy Article

ஒரு விஞ்ஞானியின் துயரம் – மரியானா கெலாம்பி (Mariana Gelambi) | தமிழில்: மோசஸ் பிரபு

ஒரு விஞ்ஞானியின் துயரம்

– மரியானா கெலாம்பி 
தமிழில்: மோசஸ் பிரபு

மரியானா கெலாம்பி (Mariana Gelambi), வர்ஜீனியாடெக்கில் (VIRGINA TECH) ஒரு முதுகலை ஆராய்ச்சியாளராக உள்ளார், வேதியியல் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியலில் நிபுணத்துவம் பெற்றவர். பழங்களுக்கு இடையிலான தொடர்புகள், அவற்றின் இரண்டாம் நிலை வளர்சிதை மாற்றங்கள் மற்றும் பழங்களை உண்ணும் விலங்குகளின், குறிப்பாக வௌவால்களின் உணவு தேடும் நடத்தை ஆகியவற்றில் அவரது ஆய்வுப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.16-10-25 அன்று NEWS FROM SCIENCE இதழலில் அவர் எழுதிய தன் அனுபவத்தை இங்கு தமிழாக்கம் செய்திருகிறேன் வாசிக்கவும்

ஜூன் மாதம் ஒரு மாலை நேரத்தில், என் வீட்டில் தனியாக அமர்ந்து ஒரு கானொளியின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்து அழுதுகொண்டிருந்தேன். குடியேற்றக் கட்டுப்பாடுகள் காரணமாக நான் அமெரிக்காவில் இருந்தபோது ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள வெனிசுலாவில் என் குடும்பத்தினர் துக்கத்தில் ஆழ்ந்திருந்தனர். எனது 17 மாத மகனிடம் நான் சோகமாக இருப்பதாகச் சொல்ல முயன்றேன், ஆனால் நான் அழுவதற்கு அவன் காரணம் இல்லையென்பதால் அமைதியானேன். நான் வெனிசுலாவிற்கு செல்ல முடியாத காரணத்தால் மனம் உடைந்து குற்ற உணர்ச்சியில் மூழ்கியிருந்தேன்.

சொந்த நாட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள மற்றொரு நாட்டிற்கு அறிவியல் துறையில் ஒரு தொழிலைத் தேர்ந்தெடுத்தது சரியான முடிவா என்று என்னை நானே கேட்டுக்கொண்டே இருந்தேன். ஒரு முதுகலை மருத்துவராகப் நான் ஆராய்ச்சி செய்யும் ஒரு பூச்சி இனத்தைப் போலவே என்னையும் உணர்ந்தேன். அந்த பூச்சியின் பெயர் லான்டர்ன்ஃபிளை,(LANTERNFLY) அமெரிக்க சுற்றுச்சூழல் அமைப்புகளை அச்சுறுத்தியது. அந்த பூச்சியை போலவே என்னையும் ஒரு விரும்பத்தகாத அழையா விருந்தாளியாகவே, உணர்ந்தேன்.

வெனிசுலாவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தேன், வெப்பமண்டலத்தின் பல்லுயிர் பெருக்கத்தால் நான் ஈர்க்கப்பட்டு, பழங்களை உண்ணும் வௌவால்களை ஆராய்ச்சி செய்யத் தொடங்கினேன். இந்தத் துறையில் பணிபுரியும் ஒரு அமெரிக்க விஞ்ஞானியோடு மின்னஞ்சலில் உரையாடும்போது, அவளுடைய ஆய்வகத்தில் முனைவர் பட்டம் பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தாள். இது நமக்கு சரிவாராது என முதலில் யோசித்தேன், பிறகு போகலாம் என முடிவெடுத்தேன் வீட்டை விட்டு வெளியேறுவது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனாலும், வெளிநாடு சென்று படிக்கபோகிறோம் என்பதை நினைத்து நான் மகிழ்ச்சியடைந்தேன், அதிர்ஷ்டசாலி என்று உணர்ந்தேன். என் குடும்பத்தினரை சந்திக்க நினைக்கும் போது உடனடியாக வீட்டிற்குத் திரும்பிச் செல்வது ஒருபோதும் பிரச்சனையாக இருக்காது எனக் கருதினேன். என் முனைவர் பட்டப்படிப்பை முடித்த பிறகு, நான் வெனிசுலாவுக்குத் திரும்பலாம், உள்ளூர் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கலாம், வெளிநாட்டில் நான் கற்றுக்கொண்டதை என் சொந்த நாட்டில் பகிர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்தேன்.

ஒரு விஞ்ஞானியின் துயரம் - மரியானா கெலாம்பி (Mariana Gelambi) | தமிழில்: மோசஸ் பிரபு | Mariana Gelambi: Scientist's tragedy Article
மரியானா கெலாம்பி (Mariana Gelambi)

முனைவர் பட்டப்படிப்பு முடித்த முதல் ஆண்டில், என் அம்மாவுக்கு மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. வீட்டிற்குத் திரும்புவதே எனது முதல் உள்ளுணர்வு, ஆனால் என் அம்மா தன்னலமற்றவர் நான் அமெரிக்காவில் இருந்து என் கனவைத் அங்கேய தொடர வேண்டும் என்று எனக்கு அறிவுறுத்தினாள். எனது ஆய்வின் போது இடையில் நான் அவளை மூன்று முறை சந்தித்தேன், நாங்கள் நீண்ட வீடியோ அழைப்புகள் மூலம் பேசிக்கொண்டோம். அவளுடைய மருத்துவர்களின் வருகைகள், அவளுடைய முடி உதிர்தல், அவளுடைய மங்கலான தோற்றம் ஆகியவற்றை கவனித்து வந்தேன்.

எனது ஆராய்ச்சிப் போராட்டங்களுக்கு மத்தியில் அவள் நோய்வாய்பட நிலையிலும் எனக்கு ஆதரவாக இருந்தாள், தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் என் முன்னேற்றத்தைக் கொண்டாடினாள். அவள் நான் திருமணம் செய்யவிருந்த இணையரை வீடியோ அழைப்பில் சந்தித்தாள். நான் முனைவர் பட்டப்படிப்பை பெறும்போது அக்காட்சியை ஆன்லைனில் பார்த்து மகிழ்ந்தாள், 2 மாதங்களுக்குப் பிறகு என் திருமணத்தையும் அவ்வாறு கண்டுகளித்தாள். எனக்குள் ஆழ்ந்த சோகம் இருந்தபோதிலும், என்னுடைய வேலையில் மகிழ்ச்சியைக் கண்டேன், அமெரிக்காவில் நான் உருவாக்கி வரும் வாழ்க்கைக்கு நன்றியுடயவளாக என்னை உணர்ந்தேன்.

இதற்கிடையில், வெனிசுலாவின் அரசியல் மற்றும் பொருளாதார சரிவு அங்கு கல்வி வேலைவாய்ப்பு கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக்கியதால், வீடு திரும்புவதற்கான எனது சிந்தனை கலையத் தொடங்கியது. எனது திருமணத்திற்குப் பிறகு, அமெரிக்காவில் எனது வாழ்க்கையைத் தொடர, நிரந்தரமாக அமெரிக்காவில் இருக்க நான் கிரீன் கார்டு பெறுவதற்காக விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன். இதற்கிடையில், நான் ஒரு விருப்ப நடைமுறை பயிற்சி நீட்டிப்பின் கீழ் பணிபுரியும் ஒரு முதுகலை பட்டப்படிப்புக்கான பணிக்கு மாறினேன். STEM மூலமாக மாணவர் விசா வைத்திருப்பவர்கள் தங்கள் பட்டப்படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணியாற்ற அனுமதிக்கும் ஒரு திட்டம் உள்ளது அதன்படி தொடர்ந்து பணியாற்றினேன்.
இருப்பினும், நான் வெனிசுலாவுக்குச் சென்று என் அம்மாவை சந்திக்க விரும்பினேன்.

ஒரு விஞ்ஞானியின் துயரம் - மரியானா கெலாம்பி (Mariana Gelambi) | தமிழில்: மோசஸ் பிரபு | Mariana Gelambi: Scientist's tragedy Article

என் கணவரும் நானும் எங்கள் முதல் மகனை பெற்றெடுத்தோம், என் மிகப்பெரிய கனவு என் அம்மாவைச் சந்திக்க என் மகனை அழைத்துச் செல்வதுதான். அவளுடைய புற்றுநோய் அவளுடைய எலும்புகளுக்குள் ஊடுறுவி பலவீனமாக்கியது, அவள் பயணம் செய்வது மிகவும் கடினம். ஆனால் எனக்கு கிரீன்கார்டு கிடைக்கும் வரை, நான் அமெரிக்காவை விட்டு வெளியேற முடியாது. ஒருவேளை சென்றால் எனது மாணவர் விசா நீட்டிப்பின் கீழ், நான் மீண்டும் அமெரிக்க நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டேன். குடியேற்ற முறையை வழிநடத்துவதற்கும், குழப்பமான வழிகாட்டுதல்களைப் படிப்பதற்கும், பல பக்கங்களை கொண்ட படிவங்களை நிரப்புவதற்கும், அதன் வழிமுறைகளை சரிபார்ப்பதற்கும் என் கணவரும் நானும் எண்ணற்ற மணிநேரங்களைச் செலவிட்டோம். எனது கிரீன்கார்டு அங்கீகரிக்கப்படும் என்று நம்பி, நான் தொடர்ந்து காத்திருக்கும் நிலையில் இருந்தேன்.

கடந்த ஜூன் மாதத்தில், புதிய விதிமுறைகளால் நான் பயணம் செய்ய தடை ஏற்பட்டது, எனது பல்கலைக்கழகத்தின் சர்வதேச அலுவலகத்திலிருந்து எச்சரிக்கைகளை பெற்றேன், எனது விசா எந்த நேரத்திலும் ரத்து செய்யப்படலாம் என்றும், சர்வதேச பயணத்திற்கான வாய்ப்பு சாத்தியமில்லை என்றும் எச்சரித்தது. வழக்கறிஞர்களுடன் பேச எனக்கு அறிவுறுத்தப்பட்டது. முதல் முறையாக, நான் உண்மையிலேயே அமெரிக்காவைச் சேர்ந்தவளா என்று கேள்வி கேட்கத் தொடங்கினேன். எனது உச்சரிப்பு மற்றும் தோற்றம் குறித்து எனக்கு சுயநினைவு ஏற்பட்டது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. என் அம்மாவின் உடல்நிலை வேகமாக மோசமடைந்து வந்தது. ஒவ்வொரு காலையிலும், நான் எனது கிரீன்கார்டு நிலையைச் சரிபார்த்தேன்.

அவளை எப்படியாவது பார்க்க வேண்டும் என்ற ஆவலில் இருந்தேன். ஆனால் இங்கு எனக்கான அறிவுரை என்னவென்றால்: வெளியேறாதே என்பதுதான், சில வாரங்களுக்குப் பிறகு, என் அம்மா காலமானார். என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, அவள் என் மகனையும் சந்தித்ததில்லை. தான் வளர்த்த பெண் ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்ற தனது கனவைப் பின்பற்றி, அந்த ஆர்வத்தை எனது தொழிலாக மாற்றியதில் என் அம்மா பெருமைப்படலாம் ஆனால் அவளின் கடைசிகாலத்தில் நான் உடன் இல்லை என்பதும் அவள் உடலை கூடபார்க்க இயலாமல் முடங்கி கிடப்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. என்னைப் போன்றே மற்றவர்களையும், ஆக்கிரமிப்பு பூச்சிகளாக இங்கு பார்த்தாலும், நான் எனது ஆய்வு தளத்தில் வேறு ஒரு அம்சத்தில் கவனம் செலுத்தி என்னை சரிசெய்துகொண்டேன். வெளிநாடுகளில் உயிர்வாழ்வது, தகவமைத்துக் கொள்வது மற்றும் செழித்து வளர்வது சாத்தியம் என்பதை என் அம்மா எனக்கு கற்றுக்கொடுத்து சென்றுவிட்டாள்.

எழுதியவர் : 

– மரியானா கெலாம்பி (Mariana Gelambi)
தமிழில்: மோசஸ் பிரபு

நன்றி: https://www.science.org/

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *