இந்நூலை வாசிக்கும் யார் ஒருவரும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், நடுநிலையாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், பத்திரிக்கையாளர்கள், வெளிநாட்டு நிறுவனங்கள்,’அரசியலில் விருப்பம் இல்லை’ என்று கூறுவோர் போன்றவர்கள் யார் என்பதை ஆராய்ந்த பிறகே அவர்களின் கருத்துகளுக்கு முன்னுரிமை வழங்குவர். இது உறுதி.
ஏனெனில் மேற்கு வங்கத்தில் 1975க்கு முன் இருந்த நிலையை விட 1977 ஏற்பட்ட மாற்றம் மேற்சொன்ன செயல்பாட்டாளர்களுக்கு மிகுந்த வயிற்றெரிச்சலை உருவாக்கி இருந்தது கண்கூடாக தெரிந்தது.
1975 வரை மேற்குவங்க அகதிகள் மீது கொடும் தாக்குதலை நிகழ்த்திய, அந்த அகதிகளை அடித்து துரத்திய நிலை, 1977-ல் இடதுசாரிகள் ஆட்சிக்கு வந்த பிறகு காங்கிரஸ் அகதிகளின் மீது அதிக கரிசனம் அதிகம் ஏற்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்ற பிறகு பாகிஸ்தானில் இருந்து வந்த அகதிகளை பஞ்சாபில் நிலைநிறுத்த தெரிந்த காங்கிரசுக்கு, 1975 ஆம் ஆண்டு வரை மேற்குவங்கத்தை நோக்கிச் சென்ற அகதிகள் மீது இல்லை. காங்கிரசுக்கு இது ஏன் இல்லை என்பது இந்நூல் மிக தெளிவாக எடுத்துக் கூறுகிறது. ஜனதா கட்சியின் பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஒன்றிய அரசு ஒரு நிலைப்பாடும், மேற்கு வங்க மாநில ஜனதா கட்சி நிலைப்பாடும் வேறு வேறாக இருந்து மேற்குவங்க இடதுசாரி அரசை என்னவெல்லாம் பாடுபடுத்தினார்கள் என்று நன்றாகவே புரிகிறது. காங்கிரசால் நேரடியாக மேற்கு வங்கத்தில் எந்தவித செயலையும் செய்ய முடியாது என்கிற சூழலில் ‘அமைப்புகள்’ என்ற பெயரில் மறைமுகமாக ‘அகதிகளுக்கு உதவி செய்கிறோம்’ என்று கிளம்பிய மகா மட்ட ரகமான செயல்பாட்டை இந்நூல் வெளிச்சத்தைக் கொண்டு வந்துள்ளது.
ஆஹா ஆர்எஸ்எஸ் எல்லா இடங்களிலும் தன்னுடைய கீழ்த்தரமான வேலையை செய்யும் என்பதற்கான சான்றையும் இந்நூல் சுட்டிக்காட்டுகிறது. எப்பா ஊடகப் பெருச்சாளிகளே உங்களின் அக்கப்போர் எவ்வளவு மோசமானது என்று இந்நூலை நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள். அகதிகளை பாடாய்படுத்தியவர்கள் அகதிகளுக்கு வாஞ்சையுடன் இருப்பது போன்ற போலித் தோற்றத்தை எப்படி எல்லாம் உருவகப்படுத்தினார்கள் என்பதும் நன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது. இதற்கெல்லாம் பின்புலம் நாட்டில் இருக்கும் முதலாளித்துவமும், அமெரிக்க தலைமையிலான முதலாளித்தமும் எவ்வளவு கூட்டுச்சதிகளை செய்துள்ளனர் என்பதை காண முடியும். அதற்கு உதாரணம் கனடா நாட்டைச் சார்ந்த எழுத்தாளரும், அமெரிக்க ஆய்வற்ற ஆய்வாளரும் சான்றுகள். ஆம் மரிச்ஜாப்பியில் 17 ஆயிரம் உயிர்கள் பலி கொண்டதாக கதை அளந்தவர்கள் ஆச்சே இவர்கள். நெருக்கடியான சூழலில் அகதிகளின் பிரச்சினையால் காவல்துறையால் வேறு வழியின்றி நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அகதிகள் அல்லாத இருவர் மரணம் அடைந்த நிலையில் அது இட்டுக்கட்டி 77, 100, 1000, 2000, 4000,17,000 என தனது இஷ்டத்திற்கு வதந்திகளை பரப்பிய பத்திரிகை, ஊடகம் என்கிற பெயரில் நடந்த அட்டூழியங்களை இந்நூல் போட்டு உடைக்கிறது. மேற்குவங்க இடதுசாரி அரசாங்கம் எல்லா பக்கத்திலிருந்தும் வந்த பிரச்சினைகளை கையாண்டு, காவல்துறையை கட்டுப்படுத்தி, உயிரிழப்புகளை தடுத்து அகதிகளை மரிச்ஜாப்பில் இருந்து தண்டகாரண்யத்திற்கு தானாக புறப்படும் நிலையை உருவாக்கிய செயல் மிகுந்த போற்றத்தக்கது. இதையெல்லாம் உற்று கவனிக்காமல் பல இட்டுக்கட்டி எழுதப்பட்ட நூல்களை நம்பி மேற்கு வங்க உழைக்கும் வர்க்க அரசு மீது அவதூறு பரப்பியவர்களுக்கு சரியான பதிலடி இந்நூல். நூலின் சாராம்சத்தை நான் வழங்கவில்லை. வாசித்து அறிந்து கொள்ளுங்கள் தோழர்களே. ஆனால் ஒன்று உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் வர்க்கங்களின் கரங்களை பற்றிடாமல் உலகம் கார்ப்பரேட்டின் கையிலிருந்து மீள்வதற்கு வாய்ப்பில்லை. அதற்கான பணிகளை செய்யும் உழைக்கும் வர்க்கத் தோழர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!
இந்நூல் உருவாகக் காரணமாக இருந்த #தமிழ்மார்க்ஸ் குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம்!!
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி
நூல் : மரிச்ஜாப்பி
உண்மையில் என்ன நடந்தது?
ஆசிரியர் : ஹரிலால் நாத்
தமிழில் : ஞா. சத்தீஸ்வரன்
வெளியீடு : தமிழ் மார்க்ஸுடன் இணைந்து பாரதி புத்தகாலயம்
ஆண்டு : டிசம்பர் 2023
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.