மரிச்ஜாப்பி (Marichjhapi Massacre) உண்மையில் என்ன நடந்தது? (What actually happened) - Marichappi Book Review in Tamil

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது? – நூல் அறிமுகம்

மரிச்ஜாப்பி: உண்மையில் என்ன நடந்தது? – நூல் அறிமுகம்

மொ. பாண்டியராஜன்

ஒரு வா சோத்துக்கும், மொடக்கி படுக்க ஒரு குடிசைக்கும் மக்களை இந்த சமூக அக்கரை அற்ற அரசியல் சூழ்சிகள் எவ்வாறு பாடா படுத்துதுன்னு தெரிந்து கொள்ள இந்த நூலை வாசிக்க வேண்டிய அவசியம் ஒவ்வொருக்கும் உண்டு.

ஒரு சமூக அக்கரை உள்ள அரசை அகற்றுவதற்கு யாரெல்லாம் கூட்டு சேர்வார்கள் என்று பட்டியலை பார்த்து அறிந்து கொள்ள இந்த புத்தகத்தை வாசிப்பது அவசியமாகிறது.

மக்கள் மீதும், மக்களின் மீதான தாக்கத்தை ஏற்படுத்தும் அரசியல் மீதும், ஏற்படுகிற தாக்கம் எவ்வாறு இருக்க வேண்டும் என்று அக்கரைப்படுகிறவர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும் என்று அன்புடன் கேட்டக்கொள்கிறேன்.

இன்றைக்கு நீங்கள் விக்கிப்பீடியாவில் மரிச்ஜாப்பி என்று உள்ளீடு செய்தாலே நம் முன் காட்டுவது மரிச்ஜாப்பி (Marichjhapi Massacre) படுகொலைகள் என்றுதான்.
அதன் கடைசி பகுதி இப்படி சொல்லுகிறது

”இறப்பு எண்ணிக்கையை உறுதி செய்ய வில்லை. அதிகாரப்பூர்வமாக இருவர் இறந்தனர் என்கிற போது இதர தரவுகளின் படி ஆயிரக்கணக்காக உள்ளது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேற்கு வங்கம் பற்றி ஆய்வு செய்த ராஸ் மாலிக் என்பவர் எழுதிய மரிச்ஜாப்பி நூலில் 17 ஆயிரம் பேர் இறந்ததாக குறிப்பிடுகிறார்.” இது உண்மையா என்பததை அறிந்து கொள்ள இந்த நூலை கட்டாயம் நாம் படிக்க வேண்டும்.

Marichjhapi massacre Archives - Drishtibhongi দৃষ্টিভঙ্গি

மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்டு கட்சியே அவர்களை கொன்று குவித்துவிட்டது என்பது எப்படிபட்ட புனைவுகளா இருக்கிறது என்பதை அறிந்து கொள் இது உதவும். அது மட்டுமல்ல முதலாளிகளின் கீழ் இயங்கும் அரசியல் அமைப்புகள் எந்த எந்த போர்வைகளில் எல்லாம் உழைக்கும் மக்களுக்கு எதிராக இயங்க முடியும் என்பதை நாம் இதன் வழி அறிந்து கொள்ள முடிகிறது.

இன்றைக்கு உள்ள ஊடகங்கள் எப்படி மிக விரைவாக பொய்யான தகவல்களை பரப்புகின்றனவோ அதே வேலை அன்றைய பத்திரிக்கைள் மற்றும் பத்திரிக்கையாளர்கள். எழுத்தாளர், ஆய்வாளர்கள் என்ற பெயரில் பல்வேறு கட்டுக்கதைகளை எழுதி தள்ளியுள்ளனர் என்பதை ஆதாரத்துடன் அறிந்து கொள்ள முடியும்.

1977ல் முதன் முதலாக வெற்றி பெற்ற இடதுசாரி அரசின் மீது அன்றைக்கு இருந்த முதலாளித்துவ கட்களின் முன்னெடுப்பால் புனையப்பட்ட மரிச்ஜாப்பி (Marichjhapi Massacre) படுகொலை உண்மையாக இருந்தால். வங்காள மக்கள் அதன் பிறகு 30 ஆண்டுகள் ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை எப்படி தந்திருப்பார்கள் என்பதை நாம் யோசித்துப் பார்த்தாலே அதன் பொய்யும் புறட்டும் நாம் அறிந்துகொள்ள முடியும்.

ஒரு பொய்யை திரும்ப திரும்ப பல்வேறு வடிவங்களில் சொல்லிக் கொண்டே இருக்க காரணம் இந்த இடது சாரி அரசை கவிழ்க்க வேண்டும் என்ற ஒன்றை நோக்கத்தோடு பல்வேறு அமைப்புகள் ஒன்றினைந்து நடத்திய செயல்பாடே இது. இதில் அப்பாவி மக்கள் பந்தாடப்படுவதையும், அவர்களை சட்டத்திற்கு புரம்பான வேலைகளில் ஈடுபடுத்தப்படுவதையும் நாம் பார்க்க முடிகிறது. இந்தில் இடது சாரி அரசு கையாண்டுள்ள பொறுமை போற்றதக்கது. மக்களிடம் அரசின் நிலையை புரியவைப்பதற்காக எடுத்துக்கொண்ட காலம் என்பது 15 மாதங்களாக இருந்திருக்கிறது. அதுவரை அம் மக்களுக்கான உணவு தண்ணீர், இருப்பிடம், மருத்துவம் ஆகியவற்றை செய்து கொடுத்துக்கொண்டே அவர்களிடம் புரிதலை ஏற்படுத்தியது போற்றதக்கதாக பார்க்க வேண்டியுள்ளது.
இந்த நூலை படித்து முடித்ததும் என் கண் முன் வந்தது அகதிகள் முகாம். அங்கே உள்ள மக்களின் துயரங்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

தீக்கதிர் - அவதூறுக்கு எதிரான ஆயுதமாக ஒரு நூல்

தண்டகாரண்யம் என்பது சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், ஒடிசா, ஆந்திரா மாநிலங்களை எல்லையாக கொண்ட வனப்பகுதி. 90,000 சதுர கிலோ மீட்டர் சுற்றளவு கொண்டது. பெரும்பகுதி. ஆனால் மரிச்ஜாப்பி என்பது சுந்தரவனக் காட்டுப்பகுதியில் ஒரு சின்ன பகுதியாகும். அங்கே வாழும் சூழல் இல்லை என்பதை அறிந்தே அந்த மக்களை வைத்து தனி அரசாங்கம் நடத்துவது போல ஒரு குழு இயங்கியதை பார்க்கும் போதும் அதை அரசு எப்படி லாகவாகமாக அனுகி கலைத்தது என்பதையும் பார்க்கும் போதும் உண்மையிலேயே வியப்பாக இருக்கிறது.

எவ்வளவு பெரிய பொய்யும், உண்மைக்கு முன் இருக்கும் போது தோற்றே போகும். காலம் வேண்டுமானால் அதிகமாக தேவையாக இருக்கலாம். அவ்வளவுதான்.
மரிச்ஜாப்பி (Marichjhapi Massacre) படுகொலை என்பது ஒரு பொய்யும் புரட்டும் அவ்வளவுதான். ஒரு அரசை கவிழ்பதற்கு முதலாளித்துவ அரசு எவ்வாறெல்லாம் செயல்படும் என்பதை அறிந்து கொள்ளவும், அதனை ஒரு மக்கள் விரும்பு அரசு எவ்வாரெல்லாம் எதிர்கொள்ள முடியும் என்பதை அறிந்து கொள்ள இந்த நூல் உதவும். இது ஒரு சமகால அரசியலை அறிந்து கொள்ள உதவும் ஆவணம்.

இந்த நூல்லில் பல இடங்களில் சொன்னதவே சொன்னது போல இருக்கிறது. ஒரு வேலை கருத்தை பல இடங்களில் தேடி எழுதும் போது இது போன்று வந்துவிடுகிறது என்று நிலைக்கிறேன். மொழி பெயர்ப்பு மிக எளிமையாக அமைந்திருக்கிறது. வாசிக்கத் தெரிந்த அனைவரும் வாசிக்கும் படியான மொழியில் அமைந்திருக்கிறது. மொழிபெயர்பாளர் திரு ஞ. சத்தீஸ்பரன் அவர்களுக்கு என் அன்பும் பாராட்டுக்களும்.

நூலின்  தகவல்கள்:

நூல் : ” மரிச்ஜாப்பி “ உண்மையில் என்ன நடந்தது
ஆசிரியர் : ஹரிலால் நாத்
தமிழில் : ஞா சத்தீஸ்வரன்
பக்கம்  : 328
விலை :  ரூ.165
பதிப்பகம் :  பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 44 2433 2924

நூல் அறிமுகம் எழுதியவர்:

மொ. பாண்டியராஜன்
மதுரை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *