மரித்துப் போனேன்!
பொட்ட குழந்தையா?
என செவிலியரிடம்
என் அப்பா கேட்டவுடன்!
மரித்துப் போனேன்!
பொட்டச்சிக்கு
எதுக்குப் படிப்பு ?
என என் தாத்தா கேட்டவுடன்!
மரித்துப் போனேன்!
அண்ணன் சாப்பிட்ட பின்
நீ சாப்பிடு என,
என் அம்மா சொன்ன போது!
மரித்துப் போனேன்!
இயல்பாக நான் இருக்க இயலாத போது!
மரித்துப் போனேன்!
மாப்பிள்ளைகளின்
கஜினி படையெடுப்பில்!
மரித்துப் போனேன்
தாலியைச் சுமக்க
தலை குணிந்த போது!
மரித்துப் போனேன்!
கண்களால்
இந்த சமூகம் என்னை
மென்று முழுங்கிய போது!
பிறந்தவுடன் என்னைக் கொன்றதை
அறியா அறிவிலிகள்,
இன்று எனக்கு இரங்கல் பத்திரிகை அடித்துள்ளனர்!
என் மனதை அன்றே
புதைத்தது அறியாமல்,
இன்று இடுகாட்டில்
புதைக்க ஏற்பாடுகள் செய்கின்றனர்!
என் செய்வேன் !
இவர்களுக்கு தான்
என் மொழி புரியாதே?
மறுபடியும்
மரித்து போகிறேன் சடங்குக்காக!
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


வாழ்த்துகள் தோழர், அருமையான கவிதை
கவிதை சிறப்பாக இருக்கிறது.. கஜினி படையெடுப்பு நான் ரசித்த உவமை..
அருமை வாழ்த்துகள் தோழர்