ஞாயிறு அன்று குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றை முடித்து வந்த போது நண்பர் ரமேஷ் ஒரு புத்தகம் பரிசளித்தார். அது இந்து தமிழ்திசை வெளியிட்ட நான் ஒரு கனவு காண்கிறேன் என்ற கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம். இதன் ஆசிரியர் மருதன். இவர் மாயபஜார் பகுதியில்எழுதி வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு. இதன் விலை 130.
இந்த புத்தகத்தை படித்து முடித்து உடனடியாக உங்கள் கருத்தை பதிவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஒரு 3 மணிநேரம் பிடித்தது. மொத்த கட்டுரைகள் 25. 100 பக்கங்கள்.
கட்டுரைகள் என்று சொன்னாலும் அவைகளில் சில கதைகளும் இணைக்கப்பட்டிருப்பதை நான் பார்க்க முடிந்தது. எனக்கு தெரிந்த கதைகளும், தெரியாத கதைகளும் இதில் இருந்தது. குறிப்பாக பூதத்தின் கதை, ஆசிரியருக்கு கடிதம், இப்படி சில.
ஆனால் இவை அனைத்தும் குழந்தைகளுக்கு புதியதாகவே இருந்திருக்கும். இருக்கும். கட்டாயம் குழந்தைகளும் ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய புத்தகம். இதில் மாற்றுக் கருத்து இல்லை.
முதல் கட்டுரை என்று சொல்லுவதை விட கதை என்று சொல்லுவது பொருத்தம். பக் என்ற நாய் தன்னை அறிந்துந்து தன்னை அடிமைப்படுத்தியவனை விரட்டும் கதை. இந்த கதை போன்று ஒரு ஆங்கில திரைப்படமும் வந்துள்ளதை எனக்கு ஞாபகம் வந்தது.

இறுதியில் பெரியார். இதை எப்படி தொடங்கி எப்படி முடிக்க வேண்டும் என்று தெரிந்து செய்தாரா, அல்லது தெரியாமல் நடந்ததா? என்று தெரியவில்லை. இரண்டம் உரிமைக்கான குரல் எழுப்பதாகவே அமைந்திருக்கிறது. இப்படி பல உரிமையின் குரல்களை நீங்கள் இந்த புத்தகத்தில் கேட்க முடியும். குறிப்பாக பெண்கல்வி, புவி எங்களுக்கும் வேண்டம் என்ற உரிமை குரலும் இந்தில் கேட்கிறது.
இந்த கட்டுரைகள் பெரும்பான்மையானவை தன் வரலாறு கூறுதல் போலவே எழுதப்பட்டிருக்கிறது. மிக எளிய நடை. குழந்தைகளுக்கு எழுத நினைப்பவர் இந்த புத்தகத்தை இரண்டு முறை வாசியுங்கள். கட்டாயம் குழந்தைகளுக்கான எழுத்து எப்படி இருக்கும் என்ற வித்தையை கண்டறியமுடியும். எடுத்துக்காட்டாக ஒரு பத்தியை மட்டும் உங்களுக்கு கொடுக்கிறேன்.
” அறிவியல் என்றால் அறிவு. உணர்வு. புதிர். புதிருக்கான சாவி. அறிவியல் என்றால் ஆயிரம் கேள்விகள். ஆயிரம் விடைகள். ஆயிரம் மலர்கள். கோடிக் கிருமிகள். அறிவியல் என்றால் சிறிய விதை. அறிவியல் என்றால் ஆலமரம்,அறிவியல் என்றால் சிறு நட்சத்திரம். அறிவியல் என்றால் ஒரு பேரண்டம். ”
மேற்கண்ட பத்தியை பாருங்கள், ஒன்று முதல் 4 சொற்களுக்குள் ஒரு வாக்கியம். அத்தனையும் அறிமுகான வார்த்தைகள். இதுதான் குழந்தைகளை எளிமையாக வாசிக்க தூண்டும். அவர்களை சுண்டி இழுக்கும் எழுத்து. இந்த வித்தையை கற்றுக்கொண்டால் உங்களாலும் சிறுவர்களுக்கு எழுத முடியும். அதற்கு இந்த புத்தகம் உங்களுக்கு வழிகாட்டும்.
நான் இந்த புத்தகத்தில் நீங்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய சில கட்டரைகளை பரிந்துரை செய்கிறேன்.
நூல் : நான் ஒரு கனவு காண்கிறேன்
ஆசிரியர் : மருதன்
வெளியீடு : இந்து தமிழ்திசை
விலை : ரூ .13௦
கவிதை எழுதியவர்:
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.