மறுக்கப்படும் மருத்துவம்
தொகுப்பாசிரியர் – பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு
நூலின் விலை – ரூ.30
வெளியீடு – பாரதி புத்தகாலயம்
To get the book click?? https://thamizhbooks.com/marukkapadum-maruthuvam.html
இந்திய மருத்துவ ஆணைய மசோதா (NMC BILL, 2017) நாடாளுமன்றத்தில் மக்களவையில் தாக்கலாகியுள்ளது. 2018 குளிர்கால கூட்டத் தொடரில் இது நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்படுமானால், மருத்துவம் சார்ந்த மாநில அதிகாரங்கள் பறிக்கப்படும் அபாயம் உள்ளது என்றும், மருத்துவத்தையும், மருத்துவக் கல்லூரியையும் சந்தையிடம் ஒப்படைக்க வழி ஏற்படும் என்றும் இந்நூல் எச்சரிக்கிறது. ஏற்கனவே உள்ள இந்திய மருத்துவ ஆணையம் அமைக்கப்படுவதால் ஏற்படக் கூடிய விளைவுகளை இந்நூல் சுட்டிக் காட்டுகிறது. மருத்துவக் கல்லூரிகளைத் தனியாரிடம் ஒப்படைப்பது, மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முறைகளினால் ஏழை அடித்தட்டு மாணவர்கள் மருத்துவக் கல்வி கற்க முடியாமல் போவது, தத்தம் தனித்தன்மையுடன் வளர்ந்து வரும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி மருத்துவ மாணவர்களுக்கு அலோபதி மருந்துகளைக் கொடுக்க பயிற்சி அளிப்பதால் அம் மருத்துவங்கள் தனித்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளிட்ட பல விளைவுகளை இந்நூலில் உள்ள கட்டுரைகள் விளக்குகின்றன.
Bharathi Puthakalayam Puthagam pesuthu Books For Children
#Medicalcollege #Medicine #Treatment #2018 #Princebook