மார்க்சியம் சொல்வது என்ன? (Marxiam Solvathu Enna) – நூல் அறிமுகம்
சில நூல்களை படிக்கும் மிகவும் பொறுமையாக இரண்டு அல்லது மூன்று முறை படித்தால்தான் புரிய முடியும். இந்த நூலில் எனக்கு அப்படி நிறைய நேரங்கள் அனுபவம் கிடைத்தது என்று கூறலாம். ஆனால் ஒவ்வொரு வார்த்தைகளும் அவ்வளவு அழுத்தமானதாகவும் கருத்துகளை புத்தகத்தில் பேசிவிட்டு சென்று இருக்கிறது.
மார்க்ஸ் குறித்த நூல்களை படிக்கும்போது சில அடிப்படையாக புரிதல்கள் இருந்தால் மட்டுமே நான் எளிதாக புரிந்து கொள்ள முடியும். என்ன அடிப்படை புரிதல் மனதில் தோன்றலாம். வர்க்கம், மூலதனம், உற்பத்தி முறை, உபரி என்று மார்க்சிய சொல்லில் உரையாடல்கள் அதிகமாக இருக்கும். அதைப் புரிந்துகொண்டு வாசிக்கும்போது தான் இன்னும் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அதுபோல் பேராசிரியர் வெ.பொன்னுராஜ் அவர்களின் தமிழாக்கம் செய்துள்ளார். இந்நூலில் மார்க்சியம் குறித்த பார்வையையும், மார்க்ஸ் ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வாக என்ன சொல்கிறார் என்று ஒவ்வொரு இடங்களிலும் கூறிக்கொண்டே புத்தகத்தில் இருக்கிறது.
மார்க்சியம் என்பது நாம் வாழும் உலகம் மற்றும் சமூகம் குறித்த பொதுவான கோட்பாடு என்று புத்தகத்தில் தொடங்கும்.
வர்க்கங்கள் என்றால் என்ன?
வர்க்கம் என்பது ஒரே மாதிரியான வழியில் தங்கள் வாழ்வாதாரத்தை திரட்டும் மக்கள் திரள் என்று புத்தகத்தில் இருக்கும்.
நிலப்பிரபுத்துவம்:-
நிலப்பிரபுக்களும் பண்ணை அடிமை நிலத்தில் தரும் உழைப்பையோ இல்லது பொருளையோ வைத்து வாழ்வாதாரத்தை கொண்டு செல்கிறார்கள். நிலப்பிரபுத்துவம் முதல் முதலில் உருவாகியது. பின்பு பண்ணை அடிமைகளில் இருந்து விடுபட்டவர்கள், கைவினை பொருட்கள் உற்பத்தி செய்யும் நபர்களாக மாறினார்கள். அதில் சிலர் முதலாளிகளாகவும் இருந்தார்கள்.
கிபி 16 ஆம் நூற்றாண்டு தொழிலாளி வர்க்கத்தை நிழலாக கொண்டு, தொழில் வர்க்கம் ஒன்று உருவானது என்று புத்தகத்தில் இருக்கிறது. நிலப்பிரபுக்கள் தங்கள் நிலங்களை அதிகப்படுத்துவது வர்க்க நலன்களாக இருந்தது. பண்ணை அடிமைகளில் வேலை செய்பவர்கள் தன் குடும்பத்தை முன்னேற்ற வர்க்க நலன்களாக இருப்பதாக புத்தகத்தில் இருக்கிறது.
கைத்தறி நெசவாளர்கள் ஒரு வாரத்தில் செய்த உற்பத்தி, ஒரு விசைத்தறி நெசவாளியின் ஒரு நாள் உற்பத்தி சமம் என்று புத்தகத்தில் குறிப்பிட்டு, இரண்டு வர்க்கமாக உழைப்பில்லாத மனிதன் முதலாளி வர்க்கம், உழைப்பை கொடுக்கும் மனிதன், தொழிலாளி வர்க்கம் என்று எழுத்தாளர் கூறுகிறார்.
சமுக வளர்ச்சியில் முதலாளித்துவ வளர்ச்சியே மூலதனமே முதன்மையாக இருந்தது. இலாபம் மட்டுமே அதன் குறிக்கோளாக கொண்டு வர்த்தகம் நடந்தது. மனிதனைச் சுற்றியுள்ள பொருளிய சூழலே, அவனுடைய செயல்பாடுகளை சிந்திக்கிறது என்று மார்க்சிய சிந்தனையில் புத்தகத்தில் இருக்கும்.
ஒரு தொழிலாளி ஒரு குடும்பத்தை பாதுகாக்க நான்கு மணி நேரம் போதுமானது, அவனுக்கு தேவையான கூலிக்கு பிறகு, அவனுடைய உபரி உற்பத்தி அனைத்தும் முதலாளிக்கு இலாபமாக செல்லும் என்று புத்தகத்தில் இருக்கிறது.
மூலதனம்:-
இயந்திரம், கட்டிடடங்கள், நிலம் இது போன்ற உற்பத்திக்கு தேவைப்படும் பொருள்கள் என்று முதலாளித்துவம் சொல்கிறது. ஆனால் மார்க்சிய சிந்தனையில் உழைப்பும் மூலதனாக இருக்கும். அதற்காக பணமும் மூலதனம்தான் என்று கூறுகிறார்.
முதலாளித்துவம்:-
” ஒரு முதலாளி பல முதலாளிகளைக் கொள்கிறான்” என்று சொல்லி முதலாளித்துவ போட்டியை தெளிவாக கூறிப்பார்.
முதலாளித்துவத்துவன் அடுத்த வளர்ச்சி ஏகாபத்தியம். அண்டை நாடுகளில் தங்கள் வளர்ச்சியை கொண்டு வந்து ஏகபோகமாக உருவாக்க நினைத்தார்கள். இதற்காக லெனின் ஐந்து பொருளாதார இயல்புகளை தன் ஆய்வின் மூலம் கூறினார். அதனால் ஏகாதிபத்திய குழுக்களுக்கு தான் மார்க்சியம் மீது அவ்வளவு கோபம் வந்தது. அவர்கள் தொடர்ந்து முதலாளித்துவ சுரண்டலுக்கு எதிராக போராடுகிறார்கள். ஏகாதிபத்தியத்தின் காலனி ஆதிக்கம் முதலாளித்துவத்தின் மிகப்பெரிய வளர்ச்சியாக இருந்தது. நவீன முதலாளித்துவம் என்றுமே நிலையானது இல்லை, மாற்றங்களுக்கு உட்பட்டு வர்க்கப் போராட்டத்தில் கண்டிப்பாக மாறும் என்று புத்தகத்தில் இருக்கும்.
நவீன காலத்தில் வர்க்கப் போராட்டம் என்பது உற்பத்தி செய்பவர்கள், உற்பத்தி செய்யமால் பொருள்களை சொந்தம் கொள்பவர்கள் என்று இரண்டாக பிரிக்கலாம். வர்க்கப் போராட்டம் என்பது ஆளும் வர்க்கத்தை எடுத்து தொழிலாளர் வர்க்கம் அரசு இயந்திரத்தில் வருவதும், மீண்டும் ஆளும் வர்க்கம் வருவதும் என்று இருக்கலாம்.பாரீஸ் கம்யூன் பற்றியும் இந்த புத்தகம் பேசுகிறது. தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அமைந்தால் அரசு இயந்திரம் சரியாக இருக்கும் என்று சொல்ல முடியாவிட்டாலும், தொழிலாளிக்கு எதிரான நிலைப்பாடு இருக்காது என்று அரசியல் நிலைப்பாடுகளில் கூற முடியும். கடைசியாக எங்கெல்ஸ் ” மனிதர்கள் மீதான அரசாங்கம் என்பதற்கு மாற்றாக, பொருட்கள் மற்றும் உற்பத்தி முறையில் திசைவழி மீதான நிர்வாகமாக இருக்க வேண்டும்” என்று அரசு குறித்து புத்தகத்தில் இருக்கிறது. பாசிசத்தின் உச்சம் என்பது ஆளும் வர்க்கமும், முதலாளித்துவ ஆட்சியில் புரட்சி ஏற்படுத்தும் என்று வரலாறுகள் கூறியதை நாம் புரிய முடிகிறது. லெனின் ஒரு நாள் பயணம் செய்யும்போது ஒரு வயதான பாட்டி ” நான் காட்டில் விறகுகள் கொண்டு வந்தபோது, புரட்சி நடக்கும் ஒருவர் வந்தார், விறகுகளை பறித்து செல்வார் என்று நான் நினைத்தேன். ஆனால் அவரோ விறகுகளை சேகரித்து கொடுத்தார்” என்று பாட்டி பேசியதில் மக்கள் யாருடன் இருக்கிறார்கள், என்று லெனின் புரிந்து கொண்டதாகவும் இருக்கிறது.
முதலாளித்துவ சமூகத்திற்கும், சோசலிச சமுகத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. முதாலாளித்துவம் தனி மனித சொத்துகளை பெறுவதற்கான எல்லா முயற்சிகளை செய்யும், சோசலிச சமூகம் எல்லாவற்றையும் பிரித்து கொடுக்கும். மார்க்ஸ் சோசலிசயத்தை பொதுவான வளர்ச்சி, சமூக வளர்ச்சியின் கோட்பாடாக கொண்டு, சமூகத்தில் உற்பத்தி பொருட்களை சமூகத்திடம் கொடுப்பதே சோசலிச சமூகம் என்று புத்தகத்தில் கூறுகிறார்.
” ஒவ்வொருவர் இடமிருந்து அவரவர் உழைப்பு பெறப்படும், அவருக்கான ஊதியம் வழங்கப்படும்” என்று சோசலியத்தில் இருக்கிறது.
மனித இனத்தையும், மனித சமூகத்தையும் இயற்கையின் ஒரு பகுதியாக மார்க்சியம் சொல்கிறது. பொருள் முதல் வாதம், கருத்து முதல் வாதம் என்று இரண்டையும் வைத்துக்கொண்டு, பொருள் முதல் வாதத்தை வைத்து மார்க்ஸ் நிறைய பேசுவதாக புத்தகத்தில் இருக்கிறது.
உலகில் நிலையானது எதுவுமில்லை, ஒவ்வொன்றும், இயங்குகிறது, மாறுகிறது, வளர்கிறது அல்லது அழிகிறது: மேம்படுகிறது, தேய்கிறது என்று இயக்கவியல் பார்வையாக இருப்பதாக மார்க்ஸ் கூறுகிறார்.
தண்ணீர் கொதிநிலையில் ஆவியாக மாறுகிறது. அது உறைநிலையில் பனிக்கட்டியாக மாறுகிறது. இப்படி உதாரணமாக எடுத்து கொண்டு புரிந்து கொள்ளலாம்.
மார்க்சிய அணுகுமுறை என்பது இயற்கையின் அனைத்து இயல்புகளையும் பொருத்துகின்ற அறிவியியல் அணுகுமுறையாகும். பாசிச அணுமுறையை கையில் எடுக்கும் முதாலாளித்துவ அமைப்புக்கு எதிராக தொடர்ந்து தொழிலாளர் வர்க்கும் தொடர்ந்து போராடும் என்று புத்தகத்தில் இருக்கிறது.
இந்த புத்தகத்தில் நிறைய வரலாற்றுகளை ஆதாரமாக வைத்து எழுத்தாளர் எழுதியுள்ளார். மார்க்ஸ்யும், ஏங்கெல்ஸ்யும் எழுதிய கோட்பாடுகளையும், சமூக மாற்றம் குறித்து தெளிவாக இருக்கும். கொஞ்சம் படிக்க நேரம் எடுத்தாலும், நிறைய அறிவியல் பூர்வமான, ஆக்கபூர்வமான கருத்துகளை பார்க்கலாம். எமிலி பர்னஸ் எழுதிய இந்நூல் ஆங்கிலத்தில் புகழ்பெற்ற நூலாக விளங்கியது. இதை தமிழில் மொழிபெயர்த்து கொடுக்க நினைத்த போராசிரியர்.பொன்னுராஜ் அவர்களுக்கு அன்பும், நன்றியும்.
மார்க்சியம் வெல்லட்டும்
நூலின் தகவல்கள் :
நூல் : மார்க்சியம் சொல்வது என்ன?
நூல் ஆசிரியர் : போரா.வ.பொன்னுராஜ்
விலை : ரூ . 90
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/marxiam-solvathu-enna/
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.