பாஜகவின் கண்கட்டுவித்தைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கம்-  உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் | பேட்டி: வெங்கிடேஷ் ராமகிருஷ்ணன் (தமிழில்: செ.நடேசன்)சமாஜ்வாதி கட்சியின் (எஸ்.பி) தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் புதிய விவசாய சட்டங்களை நிறைவேற்றியதன்மூலம் சாதாரண மக்கள் குறிப்பாகச் சமுதாயத்தில் ஓரம்கட்டப்பட்ட மக்கள் மேலும் மேலும் பாரதிய ஜனதா கட்சியின் கண்கட்டுவித்தை தந்திரங்களைப் பார்த்துவருகிறார்கள் என்பதை ஏற்றுக்கொண்டு.ள்ளார். “பாஜகவின் முதன்மைக்கவனம் நாட்டின் பெரும்பாலான நலன்களை விட்டுக்கொடுத்துத்   தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு சில முதலாளிகளை மேம்படுத்துவதுதான் என்பது தெளிவாகி விட்டது.  இந்தப்புரிந்துணர்வு மிகவேகமாக மக்களிடையே, குறிப்பாக விவசாய சமூகத்தினரிடையே பரவிவருகிறது. இந்த மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டது பாஜகவின் சொந்த வீழ்ச்சிக்கானஉச்சகட்டச் சான்றாகிவிட்டது. இந்தப் பிரச்சனையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களின் மழுப்பல்கள் வீழ்ச்சியிலிருந்து அவர்களைக் காப்பாற்றப்போவதில்லை“ அகிலேஷ் யாதவ் ஃப்ரண்ட் லைனின் இணையவழிக் கலந்துரையாடலில் கூறியதன் சிலபகுதிகள்

மக்களவையில் மத்திய அரசு விவசாய மசோதாக்களைக் கொண்டுவந்ததிலிருந்து  அவற்றுக்கெதிராக நீங்கள் போராடி வருகிறீர் கள். மேலும் அவர்களது பிதற்றல்கள்  பாஜகவையும், அதன் அரசையும் மக்களிடமிருந்து தனிமைப்படுத்திவிடும் என்று சுட்டிக்காட்டியும் வருகிறீர்கள். மக்களிடையே உள்ள இந்த ஏமாற்றங்கள் நீண்டகால கூட்டாளிகளாக இருந்துவந்த சிரோமணி அகாலி தளம் (SAD) போன்ற கட்சிகள் பாஜகவால் தலைமை தாங்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிவருவதன் அறிகுறிகளாகி வருகின்றன என்றும்கூட நீங்கள் கூறிவருகிறீர்கள். இருந்தபோதிலும், சமாஜ்வாதி கட்சி இந்தச்சட்டங்களுக்கு எதிராக ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தைக் கட்டுவதில் தளத்தில் தன்னளவில் தீவிரமாக இல்லை என்ற உணர்வு இங்கே உள்ளது.

# நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக-தேமுகூ ஆட்சி பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் ஒரு பிரவாகம்போல கொடூரமான சட்டங்களைத் திணிக்கத்தயாரானதுபோன்ற எண்ணத்திலிருந்தது. இந்த நோக்கத்தில்தான் ஆளும்கட்சி கேள்வி நேரத்தையும், பூஜ்யநேரவிவாதத்தையும் இல்லாமல் செய்துவிட்டது. இந்த சூழ்நிலையில் விவசாய மசோதாக்களை நிறைவேற்றிவிடுவது  அரசியலில் எளிதானது என்று அவர்கள் கருதினார்கள். ஆனால் இந்த மசோதாக்களால் உருவான பொதுமக்களின் சீற்றம்.குறிப்பாக விவசாய வர்க்கத்தினரின் சீற்றம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது, அதனால், பாஜகவின் நீண்டகால கூட்டாளிகளாக இருந்தவற்றில் ஒன்றான சிரோமணி அகாலி தளம் மத்திய அமைச்சரவையிலிருந்தும், தேமுகூவிலிருந்தும் கூட விலகுமாறு வற்புறுத்தப்பட்டது. ஆனால், இது மட்டுமே மோடியின் அரசை கவிழ்க்கவோ அல்லது பாராளுமன்றத்தில் உள்ள அதன்மகத்தானபெரும்பான்மையை குறைக்கவோ போவதில்லை. ஆனால் இது பாஜகவின் அரசியல் மற்றும் நிர்வாக கண்கட்டு வித்தையை அடையாளப்படுத்துகிறது என்பதில் சந்தேகம் இல்லை.ஆனாலும், இன்னும் ஆற்றல்மிக்க எதிர்ப்பு இல்லை என்ற கருத்து நிலவுகிறது.

# நீங்கள் கூறுவதுபோல, சமாஜ்வாதி கட்சி களத்தில் தீவிரமாக இல்லை என்ற கருத்து இருக்குமானால், அதற்குத் தொடர்பற்ற- சம்பந்தமில்லாத பல அம்சங்கள் உள்ளன: அவை தவறான செய்திகளை உருவாக்குகின்றன: தாங்கி நிற்கின்றன: பரப்புகின்றன. எங்களது மாபெரும் மக்கள் போராட்டங்களில் 10 சதவீதம்கூட ஊடகங்களால் கொண்டுசெல்லப்படுவதில்லை. உண்மையில் பல இடங்களில் சமாஜ்வாதிகட்சிஅணியினரும், முன்னணி ஊழியர்களும்  காவல்துறையால் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். மோடியின் ஆட்சி நிறுவனங்களின்மீது தனது அதிகாரத்தையும், கட்டுப்பாட்டையும் கொண்டிருப்பது எந்த அளவுக்கும் செல்லக்கூடிய ஒன்று என்பதும், ஊடகங்களும் இதில் மாறுபட்டுநிற்கவில்லை என்பதும் உங்களுக்கும் தெரியும் மாநிலக்கட்சிகளின் செய்திகளை மக்களின் பார்வைக்குப் பரவலாகக் கொண்டுசெல்லவிடாமல் தடுக்க மிகக்கவனமாக முயற்சிகள் இங்கே மேற்கொள்ளப்படுகின்றன. நீங்கள் பேசுகின்ற கருத்தை உருவாக்குவதில் மிக உறுதியாக இந்த அம்சங்கள் உள்ளன. மேலும், இந்தச் சூழ்ச்சிகள் எல்லாம் முதன்மையாக ஒரு சில பணக்காரர்களின் நலன்களுக்கு வாய்ப்புக்களை ஏற்படுத்தித்தரும் நோக்கங்களைக் கொண்டுள்ளன.

விவசாய மசோதாக்களின் பின்னால் அவர்களின் விருப்பார்ந்த நலன்கள் உள்ளன என்ற அம்சத்தை நீங்கள் மீண்டும் மீண்டும் எழுப்பிவருகிறீர்கள். ஆனால் பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எதிர்க்கட்சிகள் மக்களைத் திசைதிருப்ப முயற்சிக்கின்றன என்று கூறிவருகிறார்களே….

# இந்த அரசின் சாதனைப்பதிவுகளை மேம்போக்காகப் பரிசீலித்தால் கூட,தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில முதலாளிகளின் உள்ளார்ந்த நலன்கள் எவ்வாறு இந்த அரசின் முதன்மை நோக்கமாக இருந்து வந்ததுள்ளது என்பதைக் காட்டும்.  நரேந்திர மோடி தலைமையிலான பாஜக-தேமுகூ ஆட்சி கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டின் ஆதார வளங்களை குறிவைத்து, ஆதாரங்களோடு விற்பனை செய்துவரும் ஆட்சியாக குறிக்கப்படும். யோகிஆதித்யநாத் தலைமையில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மாநில அளவிலான பாஜக அரசு போன்றவை இதே பாதையை- அரசின் சொத்துக்களை விற்பனை செய்யும் கொள்கையைப் பின்பற்றுகின்றன. மாநில மற்றும் மத்திய அரசுகள் சந்தைகளை, பெருவழி சுங்கங்களை, அரசு அங்காடிகளை, தொழில்நுட்ப நிறுவனங்களை, பாலிடெக்னிக்குகளை, விமான நிலையங்களை, ரயில்வேக்களை, ஆயுள்காப்பீட்டு நிறுவனங்களை விற்றுவிட்டார்கள். ஆதாரப்பூர்வமாக பாஜகவின் ஆதரவாளர்களுக்கிடையில் உள்ள ஒரு சில முதலாளிகளுக்கு உதவ இந்த மாபெரும் தனியார்மயமாக்கல் முடுக்கிவிடப்பட்டுள்ளது.: இது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புக்களைக் குறைப்பதையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த விவசாய மசோதாக்கள் என்ன செய்திருக்கின்றன என்றால், இவற்றின் உண்மைத்தன்மைகளை மக்கள் முன், குறிப்பாக விவசாய சமுதாயத்தினர் முன் முற்றிலுமாக அம்பலமாகியிருக்கின்றன. இந்த மசோதாக்களின் இயல்பும், அவற்றின் தாக்கமும், இது விவசாயியை ஒரு முக்கியத்துவமற்ற கடினமான வேலையைச் செய்யும் ஒரு தொழிலாளியாக, அவரை நிலத்தின் உரிமையாளர் என்பதிலிருந்து தன்னை முற்றிலும் விற்றுவிடுபவராக ஆக்கிவிடும் தன்மை கொண்டதாக உள்ளது. செயல்பாட்டு அளவில் , விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் (APMCs) ஒழிக்கப்படுவதும், குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) இல்லாததும் விவசாயியைத் தனது உற்பத்திப்பயிர் களை கட்டுபடியாகாத ஏதாவது ஒருவிலைக்கு விற்குமாறு வற்புறுத்தும். இதற்கு மேலும் கோதுமை மற்றும் நெற்பயிர்களும் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது விவசாயியை அவரது பயிர்களைப் பெரிய முகவர்கள் மற்றும் பெரும் வணிகர்களால் நிர்ணயிக்கப்படும் விலைக்கு விற்றாகவேண்டும் என வற்புறுத்துகின்றன. இந்த அநீதியான தொடர்நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட சமாஜ்வாதி கட்சி மிகவும் உறுதியாக உள்ளது.

வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் பலரும் விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் போன்ற நுட்பங்கள் வழக்கற்றுப்போனவை, என்று சுட்டிக்காட்டுகிறார்கள். அத்தகைய நுட்பங்களை சீர்திருத்த வேண்டிய தேவை உள்ளது என்று விவாதிக்கிறார்கள்.விவசாயச்சட்டங்களின் ஆதரவாளர்கள், இந்தச்சட்டங்களின் உணர்வுகள் விவசாயிகளின் இந்தத்தேவைகளை உணர்ந்து பாதுகாக்கிறது என்று கூறுகிறார்களே.

# நமது விவசாயத்துறையில் மிகப்பெரும் அளவிலான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன என்பதை  எவர் ஒருவரும் மறுக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அவற்றை.செய்வதற்கான வழிகளும், முறைகளும் உள்ளன. சீர்திருத்துவதற்கான  நிறுவனம் ஜனநாயகமானதாகவும், வெளிப் படையானதாகவும் இருக்கவேண்டும் என்பதிலிருந்து துவங்க வேண்டும். அதை நீங்கள் பின் வாசல் வழியாகக் கொண்டுவரக் கூடாது: பின்னர் அவற்றின்மீது முறையான கலந்துரையாடல்கள் நடத்துவதை மறுத்து. பாராளுமன்றத்தில் முறையான பிரிவுவாரி வாக்கெடுப்பு நடத்துவதை மறுத்து ஜனநாயக அமைப்புக்களை இடித்துத்தள்ளக்கூடாது.

 மேலும் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பாக, 2012-2017ல் உத்தரப்பிரதேசத்திலிருந்த சமாஜ்வாதி தலைமையிலான அரசு உள்ளிட்ட பல மாநில அரசுகளின் செயல்பாடுகளைப் பார்க்க வேண்டும் என்று நான் கருதுகிறேன். எங்கள் அரசு விவசாய உற்பத்தி சந்தைக்குழுக்கள் உள்ளிட்ட பல சீர்திருத்தங்களைத் துவக்கியது.அந்த சீர்திருத்தங்களின் மைய நோக்கம் விவசாயிகளுக்குப் பயனளிப்பதாக இருந்தது. அது விவசாயிகளுக்கும் நுகர்வோர்களுக்கும் இடையே உள்ள விநியோகச்சங்கிலியை குறுக்குவதாக இருந்தது. நாங்கள் ரூ.164.79 கோடி நிதித்திட்டத்தில் விவசாயிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட லக்னோ, ஜான்ஸி, கண்ணூஜ், காஸ்கஞ்ச் மற்றும் சாய்ஃபயை உள்ளிட்ட  584 விவசாயச் சந்தை மையங்களை வளர்த்தெடுத்தோம். நாங்கள் அமைத்த 30க்கும் மேற்பட்ட மையங்களில் அமைத்த ‘அப்னா பஜார்’   விசாலமான வளர்ச்சிக்கொள்கைகளை பின்பற்றின. மேலும் விவசாய உற்பத்திகளுடன் கைத்தறிகளின் உற்பத்திப்பொருள்களும், தனித்தன்மை வாய்ந்த கிராமியக் கலாச்சாரப் படைப்புக்களும் அங்குக் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.எங்கள் அரசில் குளிர்பதன வைப்பகங்களையும், பண்டகசாலைகளையும் அமைக்கும் கொள்கைகளையும் சட்டங்களையும் விவசாயப்பொருள்களை பதனம் செய்வதன் மதிப்பை உயர்த்தும்வகையில் மாற்றியமைத்தோம்.விவசாய சந்தைகளை மேம்படுத்த நாங்கள் ஆக்ரா- லக்னோ, மற்றும் பூர்வாஞ்சல் விரைவு வழித்தடங்களில் பிரம்மாண்டமான மாபெரும் உள்கட்டமைப்புத் திட்டங்களைத் துவக்கினோம். இந்த நெடுஞ்சாலைகளில் கட்டப்பட்டுவரும் கட்டடங்கள் நிறைவடையும் பல்வேறு நிலைகளில் உள்ளதை இன்றும் காணலாம். அவை அனைத்தும் யோகிஆதித்யநாத் அரசால் புறக்கணிக்கப்பட்டன. மேலும் அவை தற்போதைய பாழ்பட்டுவரும் சித்திரத்தைத் தருகின்றன. மற்றவர்களின் நல்ல வேலைகளை பாஜக தலைமை அவமரியாதை செய்வது  மிகவிரைவில் விட்டுவிடவேண்டிய ஒன்றாகும். ஆனால் அதற்காக, சில ஜனநாயக மதிப்புக்களை நீங்கள் உள்ளீர்த்துக்கொள்ளவும், உட்படுத்தவும் வேண்டும்.

விவசாயத்துறையையும், ஏராளமான விவசாயிகளையும் மேம்படுத்துவது பற்றிய எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கை (2004-06)யின் முக்கியத்துவம் பற்றி எல்லாக்கட்சிகளும் அழுத்தம் கொடுக்கின்றன.ஆனால்.அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டுமே அதைப்பற்றிப் பேசுகின்றன.அவர்களே அதிகாரத்துக்கு வரும்போது அவர்கள் தங்களது உற்சாகத்தை இழந்துவிடுகிறார்கள். இதற்கான காரணம் என்ன?

# சுவாமிநாதன் குழு அறிக்கை நமது விவசாயத்துறை பற்றிய உணர்வார்ந்த ஒரு விரிவான பகுப்பாய்வு ஆகும்: மேலும் அது பல அடுக்குகள் கொண்ட கூறுகளைக் கொண்டுள்ளது. எந்த ஒரு அரசுக்கும் ஒரேயடியாக அவற்றை நிறைவேற்றுவது சாத்தியம் என்று நான் கருதவில்லை. எங்கள் தரப்பில் 2012-௧௭ காலகட்டத்திலிருந்த சமாஜ்வாதி அரசு அந்த அறிக்கையின் சிலமுக்கியமான அம்சங்களை நிறைவேற்ற முயற்சித்தோம்.

 நன்றி: ஃப்ரண்ட்லைன் அக்டோபர் 23 2020    

https://frontline.thehindu.com/cover-story/a-mass-movement-against-bjps-hoodwinking/article32762164.ece