Prof. Ram Puniyani in Mathavaatha Desiyam Book Review by Nethaji. This Book is Translated to tamil by Raja Sangeethan. Book Day, Bharathi

நூல் அறிமுகம்: மதவாத தேசியம் – நேதாஜி



புத்தகம் : மதவாத தேசியம்
ஆசிரியர் : பேரா.ராம் புனியானி
தமிழில் : ராஜசங்கீதன்
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 32
விலை : ரு. 30
புத்தகம் வாங்க:  https://thamizhbooks.com/product/mathavatha-dhesiyam-ram-puniyani/

இந்த சிறு புத்தகம் ஆகஸ்டு 3 2019 அன்று சென்னையில்”இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின்” சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் “மதவாத தேசியம்” என்ற தலைப்பில் கருத்துரையாற்றிய போரசிரியர். ராம்புனியானி அவர்களின் உரை புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. தோழர்.ராஜசங்கீதன் அவர்கள் மிக சிறப்பான முறையில் மொழிப் பெயர்த்துள்ளார். அவர் ஆற்றிய உரையில் இருந்து சிலவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

மதவாதம் என்பது அடிப்படையில் ஒரு அரசியல். மதத்தின் அடையாளத்தை பயன்படுத்திக் கொள்ளும் அரசியல். மதம் பல கூறுகளை கொண்டது. ஒரு பக்கம் மதம் அறத்தை பேசுகிறது. சம்ஸ்கிருத உபனிஷத்துகளில், ‘உலகம் ஒரு குடும்பம்’ என்ற அர்த்தத்தில் ‘வசுதேவ குடும்பகம்’ என சொல்லப்படும் அளவுக்கு அறம் நிறைந்தது.ஆனால் நீங்கள் உண்மையான ஹிந்துவாக, உலகமே ஒரு குடும்பம் என பொருள்படும் ‘வசுதேவ குடும்பகம்’ என்ற சம்ஸ்கிருத வார்த்தையை நம்பும் ஹிந்துவாக இருந்தால் உங்களால் எப்படி ஒரு இஸ்லாமியயரையும் கிறிஸ்துவரையும் வெறுக்க முடியும்?

எனக்கு முதலில் ஒரு விஷயம் சொல்லுங்கள். ஆங்கிலத்தில் சொல்லப்படும் lynching என்ற வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை இருக்கிறதா? நான் இதை ஏன் கேட்கிறேன் என தெரியுமா? உங்களின் அறிவை பரிசோதிக்க அல்ல. எங்களின் ஹிந்தி மொழியிலோ, மராத்தி மொழியிலோ lynching என்ற வார்த்தைய
க்கு இணையான சொல் கிடையாது.அந்த வார்த்தையின் மூலம் அமெரிக்கா. அங்கு தான் கறுப்பினத்தவர்களை அமெரிக்கர்கள் lynch செய்தார்கள்.

2010க்கு பின்னான lynching சம்பவங்களில் 90 சதவிகிதம் 2014ம் ஆண்டுக்கு பிறகே நடந்திருக்கிறது. 2014ம் ஆண்டில் என்ன நடந்தது?

56 இன்ச் மார்பை கொண்ட அந்த மனிதர் ஆட்சிக்கு வந்தார். இல்லையா?கொல்லப்பட்ட மக்களில் 64% பேர் இஸ்லாமியர்கள். இந்திய ஜனத்தொகையில் இஸ்லாமியர்கள் எத்தனை சதவிகிதம் 14.2% கொல்லப்பட்டவர்கள் 64%.கொல்லப்பட்டவர்களில் 14% பேர் கிறிஸ்துவர்கள். இந்திய ஜனத்தொகையில் கிறிஸ்தவர்கள் சதவிகிதம் 2.3%.மீதமுள்ளவர்கள் யார்… வேறு யார்… தலித்துகள் தான்!



ஆர் எஸ் எஸ் என நான் சொன்னதும் மக்களின் மனதுக்கு வரும் முதல் விஷயம் அது இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு என்பதுதான். ஆனால் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ளுங்கள் இது அவர்களின் கொள்கையின் மேற்பகுதி மட்டும்தான். உள்ளார்ந்த உண்மையான கொள்கை என்னவென்றால், பிறப்பு சார்ந்த சமத்துவமின்மையை உருவாக்க வேண்டுமென்பதே.

சாதி மற்றும் பாலின பேதம் நிறைந்த சமூகத்தை உருவாக்குவதே அவர்களின் இலக்கு.

சமூகத்தில் சமத்துவத்தை பெறுவதற்காக அம்பேத்கர் பல சமுக இயக்கங்களை உருவாக்கினார். ஒரு விஷயத்தை முக்கியமாக புரிந்து கொள்ளுங்கள். சமூக இயக்கங்கள் இல்லாமல் சமூகம் மாற முடியாது. சமூக இயக்கங்கள் அல்லாமல் சமத்துவத்தை நாம் அடைய முடியாது.

பசுவை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். இதை சொன்னவர் ஒரு முன்னாள் பிரதமர். உங்களுக்கு அவரை தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். அவர் கூட கவிதைகள் எழுதுவாரே? ஆம். வாஜ்பேயி! தமிழ்நாட்டில் இருந்து கூட ஒருவர் சொன்னாரே,’தவறான கட்சியில் இருக்கும் நல்ல மனிதர்’ என்று. அவர்தான் ஆனால் நான் சொல்கிறேன், அவர் ‘தவறான கட்சியில் இருந்த தவறான மனிதரே!’ நான் அவருடைய சுயசரிதையை படித்துக் கொண்டிருந்தேன். அமெரிக்காவுக்கு ஒரு முறை சென்றபோது, ஒரு உரை முடித்து சாப்பிட உட்கார்ந்தாராம். அவருக்கு உணவு பரிமாறப்பட்டதும் மற்றவர் அதிர்ச்சியில், ‘அடல்ஜி, அவர்கள் மாட்டுக்கறியை உண்ண கொடுத்திருக்கிறார்கள்’ என்றார்களாம். உடனே அடல்ஜி சொன்னாராம், ‘அதனால் என்ன பிரச்சனை? இது இந்தியப் பசு அல்ல. அமெரிக்க பசுதான் அதனால் சாப்பிடலாம் என.

சமத்துவத்தை நோக்கி நாம் செல்லும் பயணத்துக்கான முதுகெலும்பே சமூக இயக்கங்கள்தாம்.

இந்நூலின் முன்னுரையை Front line ஆசிரியர் விஜயசங்கர் அவர்கள் மிக சிறப்பான முறையில் எழுதியுள்ளார். இன்றைய காலகட்டத்தில் கட்டாயம் அனைவராலும் படிக்க பட வேண்டிய ஒரு நூல்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *