ஒரு மரத்தை வளர்ப்பதால்….
ஒரு கோடை முடிந்து பூத்துக் காய்க்கும் போது
இந்த வேப்ப முத்துக்களை பொறுக்கி அந்த மூதாட்டியால் தன் வாழ்க்கையை கடத்த முடியும்
வடை சுட நேரிடுகையில் அந்த பூவரசு இலைகள் உள்ளங்கையில் உபயோகப்படுத்தப்படலாம்
வெயிலுக்கும் மழைக்கும் ஒதுங்க உயிரினத்துக்கு ஒரு உறைவிடமாய் அமையலாம்
அஃறிணைளுக்கு பசுந்தாள் தீவனங்கள் கிடைக்கலாம்,
இலைகளை இழந்த இதன் துரும்புகள்
கூடப் புறாக்கள் கூடு கட்ட உதவலாம்
முட்செடியாய் இருந்தால் கூட
காய்ந்த பின்
கால் வயிறு கஞ்சிக் காய்க்க விறகாகலாம்
ஓரிரு மரங்கள் அருகே வளர்த்தால்
பூமி தன் பழைய படிமமானக் காட்டை
நினைவு கூறலாம்,
வேர்களைப் பற்றி ஒன்றும் யாரும்
பார்க்க வேண்டியதில்லை,
அவைகள்
ஒன்றாய் தான் இணைந்திருக்கும்
எப்பவுமே….
இரா. மதிராஜ்,
காங்கேயம்,
9788475722.

