மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் புத்தகம் | Maxim Gorky's Thaai Tamil Novel Book Review | Popular Book Reviews | www.bookday.in

மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’ நாவல் – நூல் அறிமுகம்

சிவப்பு சிந்தனையின் விதை – ‘தாய்’ நாவல்

எனக்குள் சிவப்பு சிந்தனைகள் முளைத்துக் கொண்டிருந்த இளம் பருவத்தில் நான் முதன்முதலாக வாசித்த சிவப்பு புத்தகம் – தாய்.
அதை எழுதியவர் ரஷ்யாவின் மகத்தான புரட்சிகர எழுத்தாளர் மாக்சிம் கார்க்கி.

ஒரு நாவல் என்பது வெறும் கதை அல்ல; அது காலத்தின் மனச்சாட்சியும் கூட. ரஷ்யாவில் புரட்சிச் சிந்தனைகள் விதைக்கப்பட்ட மண்ணில் புத்தகங்கள் விதையாக விழுந்தன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ‘தாய்’. இந்த நாவல் தொழிலாளர் வர்க்கத்தின் விழிப்புணர்வை கலை வடிவில் செதுக்கியது.

புரட்சிக்குப் பின் உருவான சோவியத் ரஷ்யா, புத்தகங்களை ஆயுதமாகக் கொண்டு உலகின் மூலைமுடுக்குகளுக்கே அறிவை எடுத்துச் சென்றது. கல்வி, கற்றல், சிந்தனை – இவை அனைத்தும் மக்களின் உரிமை என்பதைக் கூறிய தேசம் அது.

உலகெங்கும் பிப்ரவரி 21 “சிவப்பு புத்தக தினம்” எனக் கொண்டாடப்படும் இந்த நாளில், ‘தாய்’ நாவலை மீண்டும் புரட்டிப் பார்த்தேன். சில வரிகள் இதயத்தில் மின்னல் போலப் பாய்ந்தன.

“முதலில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும்; பிறகு மற்றவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்…”

இந்த வரி நாவலின் உயிர். அறிவு என்பது தனிப்பட்ட அலங்காரம் அல்ல; அது சமூகப் பொறுப்பு. தொழிலாளி தன் துயரத்தின் காரணத்தை அறிவால் தேடத் தொடங்கும் தருணமே புரட்சியின் தொடக்கம்.

“பயம் தானம்மா நம்மையெல்லாம் அழித்துவிடுகிறது…”

அடக்குமுறை வெளியில் இல்லை; அது மனித மனத்தில் பயமாகவே பதியப்படுகிறது. அதிகாரம் பயத்தை ஆயுதமாக்குகிறது. பயத்தை உடைத்தால் தான் மனிதன் நேராக நிமிர்கிறான்.

“தோழர்களே! தேவாலயங்களையும் தொழிற்சாலைகளையும் கட்டியெழுப்புவது நாம்…”

இந்த உரை தொழிலாளியின் வரலாற்று உண்மையை நிரூபிக்கிறது – உழைப்பே உலகின் முதுகெலும்பு. ஆனால் வாழ்க்கையில் முன்னணியில் நிற்கும் உழைப்பாளி, சமூக மரியாதையில் பின்னணிக்குத் தள்ளப்படுகிறான்.

“நமது உரிமைகளுக்காகப் போராடும் ஆகையால் ஒன்று திரண்டு…”

இது வெறும் அழைப்பு அல்ல; வர்க்க உணர்வின் பிறப்பு. தனிமையில் துன்பம்; ஒன்றுபட்டால் மாற்றம்.

‘தாய்’ நாவலின் மையம் ஒரு சாதாரண தாய். ஆனால் அந்தத் தாய், தனது மகனின் வழியாக சிந்தனையின் தாயாக மாறுகிறாள்.

தனிப்பட்ட அச்சத்திலிருந்து சமூக அக்கறைக்கு அவள் நகர்கிறாள். இந்த மாற்றமே நாவலின் உச்சம்.

“நியாயத்தை எடுத்துச் சொன்னால் உள்ளே போடுகிறார்கள்…”

அடக்குமுறையின் காலத்தில் உண்மையே குற்றமாகிறது. ஆனால் உண்மை பேசப்படாமல் ஒடுக்கப்பட்டாலும் அது முளைக்காமல் போகாது என்பதை கார்க்கி காட்டுகிறார்.

இந்த நாவல் ஒரு அரசியல் பிரசுரம் அல்ல; அது மனித ஆன்மாவின் எழுச்சி.

வறுமை, பசி, பிணி – இவை இயற்கை அல்ல; மனிதனால் உருவாக்கப்பட்ட அநீதி என்பதை உணர்த்தும் கலை வடிவம் இது.
உலக இலக்கியங்களைப் பட்டியலிட்டால், ரஷ்ய எழுத்தாளர்களின் படைப்புகளில் ‘தாய்’ நிச்சயம் தனி இடம் பெறும். குறிப்பாக உழைக்கும் வர்க்கமும், சமூக மாற்றத்தை கனவு காண்பவர்களும் தவறாமல் வாசிக்க வேண்டிய நாவல் இது.

தமிழில் மிக அழகாக மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன். அவரது மொழிபெயர்ப்பு கார்க்கியின் தீவிரத்தையும், உணர்ச்சியையும் தமிழில் உயிரோட்டத்துடன் கொண்டு வருகிறது.

இறுதியாக மீண்டும் சொல்ல விரும்புகிறேன்:

‘தாய்’ நாவலை வாசிப்பது ஒரு கதையைப் படிப்பது அல்ல;

ஒரு வர்க்கத்தின் விழிப்புணர்வை உணர்வது.

ஒரு தாயின் கண்களில் இருந்து உலகை மீண்டும் பார்க்கக் கற்றுக்கொள்வது.

வாசிக்காதவர்கள் ஒருமுறையேனும் வாசிக்கவும்.

இந்த சிவப்பு புத்தக தினத்தில் ஒரு சிவப்பு புத்தகத்தைதாவது வாசிப்போம்.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: ‘தாய்’ நாவல்
ஆசிரியர்: மாக்சிம் கார்க்கி | தமிழில்
வெளியீடு:
விலை: ₹.315
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 அமுதன் தேவேந்திரன்

புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *