கி ஹட்ஜர் தேவாண்டோரோ (Ki Hadjar Dewantoro) மே 2, 1889இல் பிறந்து ஏப்ரல் 26, 1959இல் மறைந்த இந்தோனேசிய நாட்டினைச் சார்ந்த பொருளியல் அறிஞர் ஆவார். Garden of Students (மாணவர்களின் தோட்டம்) என்ற பள்ளி அமைப்பின் நிறுவனர் ஆவார், இது கல்வித் துறையில் நவீனமயமாக்கலை ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல் இந்தோனேசியக் கலாச்சாரத்தையும் பரப்பவும் வழிவகுத்தது.
இந்தோனேசியர்களை மேம்படுத்தக் கல்வி மிகவும் பயனுள்ள வழி என்று அவர் நம்பினார், மேலும் இத்தாலியக் கல்வி சீர்திருத்தவாதியான மரியா மாண்டிசோரி மற்றும் இந்தியக் கவிஞரும் தத்துவஞானியுமான ரவீந்திரநாத் தாகூரின் முற்போக்கான கோட்பாடுகள் அவரை ஆழமாகப் பாதித்தன.
கி ஹட்ஜர் தேவாண்டோரோவின் படைப்புகள் கல்வி முறையில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அவர் பல்துறைக் கண்ணோட்டத்தில் கல்விக் கருத்துக்களை முன்வைத்தார், சூஃபி கூறுகளை இஸ்லாத்தில் இணைத்தார். காலனித்துவ பள்ளிகள் பெரும்பாலும் கவனிப்பினைப் பெறாத உள்ளூர் அறிவுசார் ஞானத்தையும் மதிப்புகளையும் வழங்குவதன் முக்கியத்துவத்தை அவரது கல்வித் தத்துவம் வலியுறுத்தியது.
கிழக்கத்திய மரபுகள் மற்றும் மேற்கத்தியப் புலமை ஆகிய இரண்டின் தாக்கத்தினால் தேவாண்டோரோவின் தேர்ந்த கல்வித் தத்துவம், நவீன இந்தோனேசியக் கல்வியின் அடித்தளமாக மாறியது. அவரது கல்விக் கருத்துக்கள் இன்றும் பொருத்தமான கருத்துகளான குணநலன் மற்றும் சுயாதீன கற்றலின் வளர்ச்சியை வலியுறுத்தின.
ஆதாரம்: www.observerid.com; www.britannica.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

