டேவிட் எம். கார்டன் (David M. Gordon) மே 4, 1944இல் பிறந்து மார்ச் 16, 1996இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர். அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவின் மிக முக்கியமான பொருளாதார நிபுணர்களில் முதன்மையானவர்கள் ஆவார்கள். இடதுசாரி பொருளாதார சிந்தனையின் தலைவரான டேவிட் எம். கார்டன் நிறுவனக் கட்டமைப்பாளர் (தொழிலாளர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் ஸ்க்வார்ட்ஸ் பொருளாதாரக் கொள்கை பகுப்பாய்வு மையத்தினை நிறுவியவர்) என்பது குறிப்பிடத்தக்கது.
கார்டன் பங்களிப்புகள் முக்கியமாக வறுமை, பேதம் காட்டுதல், தொழிலாளர் சந்தைகள் மற்றும் நீண்டகால முதலாளித்துவ வளர்ச்சி ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளன. கோர்டனின் பணி முதன்மையாகப் பாகுபாடு மற்றும் தொழிலாளர் சந்தைப் பிரிவினையில் கவனம் செலுத்தியது. அவர் Social structure of accumulation என்ற வார்த்தையை உருவாக்கினார், இது நீண்டகால முதலீடு மற்றும் வளர்ச்சியில் அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிறுவனங்களின் தாக்கம் குறித்த விரிவான செயல்பாட்டு அமைப்பினை உருவாக்கியது.
பேரியல் பொருளாதாரத்தில் அவரது பணி பல்வேறு பேரியல் பொருளாதார மாதிரிகளை ஒப்பிட்டுச் சோதிக்க முயன்றது. கோர்டன் ஊட்டச்சத்து, குடிநீர், சுகாதாரம், வீட்டுவசதி, கல்வி மற்றும் தகவல் ஆகியவற்றிற்கான அளவுகோல்களைப் பயன்படுத்தி வறுமையை மதிப்பிட்டார். குழந்தைகளின் வறுமை குறித்த அவரது ஆய்வுகள், கடுமையான அல்லது தீவிர வறுமை குழந்தைகளுக்கு நிரந்தர உடல் மற்றும் மன சேதத்தை ஏற்படுத்தும், அவர்களின் வளர்ச்சியைத் தடுக்கும் மற்றும் அழிக்கும் என்பதைக் காட்டுகின்றன. வறுமை குறித்து 100 க்கும் மேற்பட்ட கட்டுரைகளை அவர் வெளியிட்டுள்ளார், மேலும் வறுமை குறித்த பல குழுக்களுக்கான நிபுணராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.tandfonline.com ; www.emerald.com ; www.taylorfrancis.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

