ஜான் ஷ்மிட் (Jhon Schmitt) மே 6, 1962இல் அமெரிக்காவில் பிறந்தவர், வாஷிங்டன், டி.சி.யில் உள்ள பொருளாதார மற்றும் கொள்கை ஆராய்ச்சி மையத்தில் மூத்த பொருளாதார நிபுணரா ஆவார். குறைந்தபட்ச ஊதியம், தொழிற்சங்கங்கள், வேலையின்மை, தொழில்நுட்ப மாற்றம், வேலை-வாழ்க்கை சமநிலை, பொருளாதார சமத்துவமின்மை, தொழிலாளர் சந்தை பிரச்சினைகள் பற்றிய தளங்களில் புகழ்பெற்ற கட்டுரைகளைப் படைத்துள்ளார். ஷ்மிட்டின் முதன்மையான ஆராய்ச்சியாக அமெரிக்கத் தொழிலாளர் சந்தையில் உள்ள சமத்துவமின்மை மற்றும் பொருளாதார செயல்திறனில் சர்வதேச வேறுபாடுகள், குறிப்பாக அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான வேறுபாடுகளை விளக்குவதில் தொழிலாளர் சந்தை நிறுவனங்களின் பங்கு ஆகியவற்றில் கவனம் செலுத்தியுள்ளது.
சமத்துவமின்மை ஒரு தீய சுழற்சி
“பணக்காரர்கள் பணக்காரர்களாகிறார்கள்; ஏழைகள் ஏழைகளாகிறார்கள்” என்பது வெறும் ஒரு பழமொழி அல்ல, இதன் பின்னணியில் உள்ளக் கருத்து “செல்வக் குவிப்பு” என்று அழைக்கப்படும் ஒரு தத்துவார்த்த செயல்முறையாகும் என்று ஷ்மிட் குறிப்பிடுகின்றார். சில நிபந்தனைகளின் கீழ், புதிதாக உருவாக்கப்பட்ட செல்வம் ஏற்கனவே செல்வந்தர்களின் உடைமையில் குவிந்துள்ளது, காரணம் ஏற்கனவே செல்வத்தை வைத்திருக்கும் மக்கள் முதலீடு செய்ய அல்லது செல்வக் குவிப்பைப் பயன்படுத்த வளங்களைக் கொண்டுள்ளனர் என்பதாகும், இது புதிய செல்வத்தை உருவாக்குகிறது. செல்வக் குவிப்பு செயல்முறை பொருளாதார சமத்துவமின்மையை நிலைநிறுத்துகிறது, இது ஒரு தீய சுழற்சியை உருவாக்குகிறது. ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் அவர்கள் மரபுரிமையாகப் பெறும் செல்வம் மற்றும் அவர்கள் பெறும் கல்வி காரணமாக நிதி நன்மையைப் பெறுகிறார்கள், இது அவர்களின் சகாக்களை விட அதிக வருமானம் ஈட்டும் வாய்ப்புகளை அதிகரிக்கக்கூடும். இந்த நன்மைகள் தீய சுழற்சியின் மற்றொரு சுற்றை உருவாக்குகின்றன என்று ஷ்மிட் குறிப்பிடுகின்றார்.
ஆதாரம்: www.epi.org/people/john-schmitt; www.7pillarsinstitute.org/causes-economic-inequality
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

