பிரீட்ரிக் ஆகஸ்ட் வான் ஹாயெக் (Friedrich August von Hayek) 8 மே, 1899இல் பிறந்து 23 மார்ச், 1992இல் மறைந்த ஆஸ்திரியா-பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். கீன்ஸியன் நலன்சார் அரசு மற்றும் சோசலிசம் மீதான விமர்சனங்களுக்காக அவர் புகழ்பெற்றவர் ஆகிறார். 1974ஆம் ஆண்டில், பணம், பொருளாதார ஏற்ற இறக்கங்கள் மற்றும் பொருளாதார, சமூக மற்றும் நிறுவன நிகழ்வுகளின் ஒன்றுக்கொன்று சார்ந்திருத்தல் குறித்த அவரது எழுத்துக்களுக்காகக் கன்னர் மிர்டலுடன் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார். விலைகள் எவ்வாறு தகவல்களை வெளிப்படுத்துகின்றன என்பது பற்றிய அவரது கணக்கு பொருளாதாரத்திற்குக் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பிற்காக நோபல் பரிசைப் பெற அவருக்கு வழிவகுத்தது.
ஹாயெக் சுதந்திர சந்தை பொருளாதாரம் மற்றும் பாரம்பரிய தாராளவாத அரசியல் கோட்பாடுகளை ஆதரித்து வந்தார். தனது வாழ்நாள் முழுவதும், ஹாயெக் சோசலிசத்தை விமர்சித்தார், பெரும்பாலும் அதைச் சுதந்திர சந்தை அமைப்புடன் வேறுபடுத்தினார். திட்டமிடல் சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்குப் பதிலாகத் தடுக்கும் என்று ஹாயெக் உணர்ந்தார். ஒரு சுதந்திர சந்தை அமைப்பு ஜனநாயக அரசியல் நிறுவனங்களுடன் இணைந்தால் மட்டுமே தேர்வு சுதந்திரம் நிலைத்திருக்க அனுமதிக்கப்படும் என்றார்.
ஹாயக்கின் தொடக்கக்கால பங்களிப்பானது வர்த்தக சுழற்சி கோட்பாட்டை உருவாக்கியது. சந்தை வட்டி விகிதம் இயற்கை வட்டி விகிதத்திலிருந்து வேறுபடும்போது இந்த சுழற்சி ஏற்படுகிறது. ஹாயக்கின் வர்த்தக சுழற்சி கோட்பாடு உயர்-வரிசை மூலதன பொருட்கள் மற்றும் கீழ்-வரிசை மூலதன பொருட்களுக்கு இடையில் மாற்றீட்டை உள்ளடக்கியது. சுழற்சியின் ஆரம்பக் கட்டத்தில், செயற்கையாகக் குறைந்த வட்டி விகிதம் உயர் வரிசை மூலதன பொருட்களில் முதலீட்டை ஆதரிக்கிறது.
விலைகள் எவ்வாறு மாறிக்கொண்டே இருக்கின்றன என்பது பற்றிய அவரது கோட்பாடு, மக்கள் தங்கள் பொருளாதாரத் திட்டங்களைத் தீர்மானிக்க உதவும் தகவல்களை எவ்வாறு வெளியிடுகின்றன என்பது குறித்த அவரது கோட்பாடு பொருளாதாரத்தில் ஒரு அற்புதமான மைல்கல் சாதனையாகும். மைய வங்கியால் அதிகரிக்கப்படும் பண விநியோகத்தில் விலைகள் மற்றும் உற்பத்தியில் அதிகரிப்பினை ஏற்படுத்தும் என்றும், இத்தகைய அதிகரிப்புகள் வட்டி விகிதங்களைக் குறைத்து, கடனை செயற்கையாக மலிவாக மாற்றும் என்று அவர் வாதிட்டார். குறுகிய கால முதலீடுகளை விட நீண்ட கால முதலீடுகள் வட்டி விகிதங்களுக்கு அதிக உணர்திறன் கொண்டவை என்றார்.
வேலையின்மையை எதிர்த்துப் போராடுவதற்கான கீன்ஸியன் கொள்கைகள் தவிர்க்க முடியாமல் பணவீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும், வேலையின்மையைக் குறைவாக வைத்திருக்க, மத்திய வங்கி பண விநியோகத்தை வேகமாக அதிகரிக்க வேண்டும் என்றும், இதனால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் ஹாயெக் நம்பினார். அவரது மிகவும் பிரபலமான படைப்பான The Road to Serfdom பல முறை மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.econlib.org ; www.britannica.com ; www.tutor2u.net
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

