டேவிட் ஜில்பர்மேன் (David Zilberman) மே 9, 1947இல் பிறந்த இஸ்ரேலிய-அமெரிக்க வேளாண் பொருளாதார அறிஞர் ஆவார், அவரது ஆராய்ச்சியானது, உற்பத்தி தொழில்நுட்பத்தின் பொருளாதாரம், வேளாண்மையின் ஏற்படும் ஆபத்து, வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை, சந்தைப்படுத்தல், காலநிலை மாற்றத்தின் பொருளாதாரம், உயிரி எரிபொருள்கள் மற்றும் உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை உள்ளடக்கியதாகும். அவர் 2019ஆம் ஆண்டு வேளாண்மைக்கான வுல்ஃப் பரிசை வென்றார்.
தண்ணீர்
நீர் பாதுகாப்பிற்கான தொழில்நுட்பங்களின் தேர்வு மற்றும் தாக்கத்தின் மாதிரிகளை அவர் உருவாக்கினார், பொதுவாக நீர் சேமிப்பு தொழில்நுட்பங்களின் பயன்பாட்டின் விளைவினால் அதிக அளவிலான மகசூலை ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டினார். நீர் வர்த்தகத்தை அறிமுகப்படுத்துவது பாதுகாப்பு நடைமுறைகளை ஏற்றுக்கொள்வதை எளிதாக்கும், மேலும் நவீன நீர்ப்பாசன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது மகசூலை அதிகரிக்க வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டினார்.
பூச்சி கட்டுப்பாடு
பூச்சிக் கட்டுப்பாட்டு உத்திகள் மற்றும் பூச்சிக்கொல்லி ஒழுங்குமுறைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பூச்சிக் கட்டுப்பாட்டின் பொருளாதாரம் குறித்த ஆராய்ச்சியில் ஜில்பர்மேன் புரட்சியை ஏற்படுத்தினார். மேலும் ரசாயன பூச்சிக்கொல்லிகளின் சுற்றுச்சூழல் சுகாதார அபாயங்களை ஒழுங்குபடுத்தினார்.
உயிரி தொழில்நுட்பம்
இந்தியாவில் மரபணு மாற்றப்பட்ட பருத்தி அறிமுகப்படுத்தப்பட்டதால் விளைச்சல் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும், மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் சோளம் மற்றும் சோயாபீன்ஸ் விநியோகத்தை அதிகரித்துள்ளன என்று குறிப்பிட்டார், இதன் மூலம் விலைகள் குறைந்து ஏழைகளுக்கு நன்மை பயக்கின்றன என்றும் அவர் நிரூபித்தார். மரபணு மாற்றப்பட்ட தொழில்நுட்பங்களைத் தாமதமாக ஏற்றுக்கொள்வதாலும், அவற்றை நடைமுறைப்படுத்தப் பின்பற்றப்படும் ஒழுங்குமுறையில் காணப்படும் தடைகளினால் இழப்பு ஏற்படுகிறது என்றார். வேளாண் சேவைகளுக்கான அரசாங்க திட்ட ஒதுக்கீடு குறித்து ஜில்பர்மேன் சிறந்த வழிமுறைகளை உருவாக்கினார் மற்றும் திட்டங்களை மறுவடிவமாக்க ஊக்குவித்தார்.
தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வது
வேளாண்மையில் நவீன தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதைப் பகுப்பாய்வு செய்வதற்கான ஒரு அதிநவீன அணுகுமுறையை ஜில்பர்மேன் உருவாக்கியது, விவசாயிகளின் நடத்தை, பன்முகத்தன்மை மற்றும் கற்றலின் மாறும் செயல்முறைகளை உள்ளடக்கியதாக இருந்தது. இது செலவுகளைக் குறைத்து நன்மைகளை அதிகரிக்கும். சுற்றுச்சூழலுக்குப் பயனளிக்கும் வகையில் நிலம் அல்லது பிற வளங்களைச் செயலில் பயன்படுத்த உற்பத்தியாளர்களுக்குப் பணம் செலுத்தும் ஒரு பொது நிதியை ஒதுக்க அவர் ஒரு கருத்தியல் கட்டமைப்பை உருவாக்கினார். பயிர்க் காப்பீடு என்பது விவசாயிகளுக்கு அபாயங்களைக் குறைப்பதற்கான ஒரு அத்தியாவசிய வழிமுறையாகும் என்று அவர் கூறினார். புதுமை மற்றும் விநியோகச் சங்கிலி வழியாக புதிய தயாரிப்புகள் மற்றும் ஏற்பாடுகளை நிறுவ முடியும் என்றும், சந்தை சக்தியைப் பயன்படுத்திக் கொள்ள முனைகிறது என்றும் அவர் பரிந்துரைத்தார்.
ஆதாரம்: www.ucanr.edu; www.pnas.org ; www.nature.berkeley.edu; www.elgaronline.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

