சர்வதேச தொழிலாளர் தினம்: மே 1 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- சைமன் நெல்சன் பாட்டன் (Economist Simon Nelson Patten Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

சர்வதேச தொழிலாளர் தினம்: மே 1 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- சைமன் நெல்சன் பாட்டன் – முனைவர் பு. அன்பழகன்

மே 1 – சர்வதேச தொழிலாளர் இயக்கத்தால் தொழிலாளர்கள் வர்க்கத்தின் முக்கியக் கொண்டாட்டமான சர்வதேச தொழிலாளர் தினம் ஒவ்வொரு ஆண்டும் மே 1ஆம் நாள் கொண்டாடப்படுகிறது, இதனை மே தினம் என்றும் அழைக்கப்படுகின்றது. இக் கொண்டாட்டம் உலகில் உள்ள பல நாடுகளில் கொண்டாடப்படுகின்றதுதொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர் இயக்கத்தால் எதிர்கொண்ட வரலாற்றுப் போராட்டங்கள் மற்றும் அதன் வழியாகப் பெற்ற பயன்களை நினைவுகூரும் முக்கிய நாளாக  இது கருதப்படுகின்றது. சுமார் 80 நாடுகள் மே தினத்தைத் தொழிலாளர்களை நினைவுகூர்வதன் பொருட்டு அந்நாளை பொது விடுமுறையாக அறிவித்துள்ளன. இருப்பினும், அமெரிக்காவும் கனடாவும் செப்டம்பர் முதல் திங்கட்கிழமை தொழிலாளர் தினத்தை விடுமுறையுடன் கடைப்பிடிக்கின்றன.

19ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவ அமைப்பின் கீழ், தொழிலாள வர்க்க நிலைமைகள் மோசமடைந்தன. தொழிலாளர்கள் வார விடுமுறை இல்லாமல் ஒரு நாளைக்கு 12 முதல் 16 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, மேலும் குறைந்த ஊதியமும் கிடைத்தது. எனவே, 1886 மே 1ஆம் நாள், அமெரிக்கா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் கோரி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மே 3ஆம் நாள் சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடந்த  தொழிலாளர் போராட்டங்கள் வன்முறையாக மாறியது, இதில் பல தொழிலாளர்கள் உயிர்  இழந்தனர், காயமடைந்தனர். இந்த நிகழ்வுதான் மே 1ஆம் நாள் தொழிலாளர் தினத்தை கடைப்பிடிப்பதை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தது .

1889ஆம் ஆண்டில், சோசலிச குழுக்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு, ஹேமார்க்கெட் கலவரத்தை நினைவுகூரும் வகையில், மே 1ஆம் நாளை தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஒரு நாளாக நியமித்தது. மே தினம் முதன்முதலில் 1890 மே 1ஆம் நாள் கொண்டாடப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி கிளீவ்லேண்ட் 1894இல் தொழிலாளர் தினத்தை அதிகாரப்பூர்வமாகத் தேசிய விடுமுறையாக அறிவித்தார்.

மே தினத்தின் 100 ஆண்டுகள்

இந்திய உலக அளவில் இரண்டாவது பெரிய தொழிலாளர்கள் எண்ணிக்கை கொண்ட நாடாக உள்ளது. வேளாண்மை, உற்பத்தித் துறை, சேவைத் துறையில் அதிக அளவில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் முதல் தொழிலாளர் தினம் மே 1, 1923 அன்று சென்னையில் (அப்போதைய மெட்ராஸ் துறைமுகம் என்ற இடத்தில்) கம்யூனிஸ்ட் தலைவர் எம். சிங்காரவேலரால் கொண்டாடப்பட்டது. தற்போத இந்த கொண்டாட்டம் 100 ஆண்டுகளைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உலகிலே இந்தியா அதிக அளவில் உழைப்பாளர்களையும், உழைப்பையும் அளிக்கும் நாடாகும். இந்தியத் தொழிலாளர்கள் குறைந்த ஊதியம், மோசமான வேலை நிலைமைகள், 43.99 கோடி பேர் அமைப்புசாரா துறையில் பணிபுரிகின்றனர் (மொத்ததில் சுமார் 92 விழுக்காடு தொழிலாளர்கள்), பயனற்ற தொழிலாளர் சட்டங்கள், அதிக வேலையின்மை விகிதம், அதிக ஊதியம் பெறாத தொழிலாளர்கள், ஊதியமற்று வேலைசெய்யும் தொழிலாளர்கள், குறைந்த அளவிற்கு பெண் தொழிலாளர் பங்கேற்பு (LFPR, 91%) திறம் குன்றிய தொழிலாளர்கள், அதிக அளவிலான குழந்தைத் தொழிலாளர்கள், அதிக எண்ணிக்கையிலான சிறிய தொழிலாளர் சங்கங்கள் என தொழிலாளர்களின் பின்தங்கிய நிலைமையுடையதாக இருக்கிறது.

இந்தியாவில் 1990களில் அறிமுகப்படுத்தப்பட்ட புதியதாராளமயமாக்கல் கொள்கையினால் தொழிலாளர்களின் பல்வேறு உரிமைகள் பறிபோயிற்று. அன்மையில் நவம்பர் 2025இல் 29பது தொழிலாளர் சட்டங்களை சேர்த்து, நவீனமான ஒழுங்குபடுத்த நான்கு ஒருங்கிணைந்த தொகுப்பாக, கூலி, தொழிற்சாலை உறவுகள், சமூக பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சூழல். வேலை நேரம் ஒரு நாளைக்கு 8-9 மணிநேரம், குறைந்த பட்ச உத்திரவாத கூலி, சமூக பாதுகாப்பு நடைமுறை, வேலை செய்யும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு போன்றவை ஊறுதி செய்ய இப் புதிய ஒருங்கிணைந்த தொகுப்பு தொழிலாளர் சட்டம் வழிசெய்கின்றது.  முறைசாரா தொழிலாளர்களின் பங்களவு பெருமளவிற்கு உள்ளது. இங்கு இச்சட்டங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையும், சிறிய அளவிலான தொழிற்சங்கங்களால் ஒருங்கிணைந்து போராட இயலான நிலை, பிற்போக்கான சமூக கட்டமைப்பு போன்றவை பெரும் தடைக்கல்லாக தொழிலாளர் மேம்பாட்டிற்கு உள்ளது.

சைமன் நெல்சன் பாட்டன் (Simon Nelson Patten) மே 1, 1852இல் பிறந்து  ஜூலை 24, 1922இல் மறைந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த பொருளாதார அறிஞர் ஆவர். ‘பற்றாக்குறையின் பொருளாதாரம்என்பதிலிருந்துமிகுதியின் பொருளாதாரம்என்று மாறுவதை முன்மொழிந்த முதல் பொருளாதார பொருளியல் வல்லுநர்களில் பாட்டனும் ஒருவர்மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான செல்வம் விரைவில் இருக்கும் என்றும், பொருளாதாரம் உற்பத்தியில் முக்கியத்துவம் பெறுவதிலிருந்து நுகர்வுக்கு மாறும் என்றும் அவர் நம்பினார்.

பாட்டன் அடிப்படையில் அவருடைய பார்வையானது, புதிய ஏற்பாட்டின் கொள்கைகளை நவீன தொழில்துறை சமூகத்தின் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கும் மனிதக்குலத்திற்கான சமூக நடத்தை கோட்பாட்டை நோக்கியதாக இருந்தது. புதிய தொழில்நுட்பத்துடன், மேற்கத்திய உலகிற்கு மிகுதியான பொருளாதாரத்தை வழங்கப் பூமியின் வளங்கள் போதுமானவை என்று அவர் நம்பினார், அதாவது, அனைவருக்கும் சரியான உணவு, நல்ல அடிப்படை வீடு, உடை மற்றும் தொழில்துறையின் வேலைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் கல்வி ஆகியவற்றை அடைய போதுமான செல்வம் கிடைக்கிறது. இந்த விரும்பிய இலக்குகளை அடையக் குழு சமூக நடவடிக்கை இல்லாதது. அத்தகைய கலாச்சார பின்னடைவைச் சீர்திருத்தத்தால் சமாளிக்க முடியும் என்று குறிப்பிட்டார்.

ஆதாரம்: www.hetwebsite.net ; www.repository.upenn.edu ; www.journals.uchicago.edu

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *