கக்கடன் நந்தநாத் ராஜன் (Kakkadan Nandanath Rajan – கே.என். ராஜ் என்று அழைக்கப்படுகிறார்) மே 13, 1924இல் பிறந்து பிப்ரவரி 10, 2010இல் மறைந்த இந்தியப் பொருளாதார அறிஞர் ஆவார், அவர் சென்னையிலுள்ள மெட்ராஸ் கிறிஸ்தவக் கல்லூரியில் (எம்.சி.சி) பட்டம் பெற்றார். அவரது 26 வயதிலேயே. இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தினை உருவாக்கவும், இந்தியாவின் திட்டமிட்ட பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளத்தினை கட்டமைப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.
திட்டமிடலின் முக்கியத்துவம் என்பது, ‘மனித திறன்களின் வளர்ச்சி மற்றும் மக்களின் தேவைகள் மற்றும் நாட்டங்களுக்கு போதுமான நிறுவன கட்டமைப்பை உருவாக்குதல்’ என்று கே.என். ராஜ் குறிப்பிட்டார். வேளாண்மை மற்றும் கூலி சார் பொருட்களின் உற்பத்திக்காக இரண்டாவது ஐந்தாண்டு திட்டமானது கவனம் செலுத்தவில்லை என்ற விமர்சனத்தினை முன்வைத்தார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், இந்திய நாட்டிற்கு வெளிநாட்டு உதவி தேவைப்பட்டபோது, இந்தியாவின் சேமிப்பு விகிதத்தை அதிகரிக்க அவர் ஒரு திட்டத்தை வகுத்தார். இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பாக முதல் முறையாக இந்தியாவின் இருப்பு செலுத்துதலை (Balance of Payment) கணக்கிட்டார். ஜவஹர்லால் நேரு முதல் பி.வி. நரசிம்ம ராவ் வரையிலான பிரதமர்களுக்கு அவர் பொருளாதார ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறைமுக வேலையின்மை என்ற கருத்தை அவர் விமர்சன ரீதியாக ஆய்விட்டார். மறைமுக வேலையின்மை என்பது வேலை செய்யும் தொழிலாளர்களில் இறுதி நிலை உற்பத்தியானது பூஜ்ஜியம் அல்லது எதிர்மறையாக இருக்கும் ஒரு சூழ்நிலையாகும். இதன் உட்பொருள் என்னவென்றால், இந்த தொழிலாளர்களில் பலர் தங்கள் தற்போதைய வேலைவாய்ப்பை விட்டு வெளியேறினாலும், மொத்த உற்பத்தி குறையாது என்பதாகும்.
ராஜ் ஒரு கீனீஸியன் பொருளாதார நிபுணர் மற்றும் கேரளாவின் திருவனந்தபுரத்தில் Centre for Development Studies – CDSஇன் நிறுவனர் ஆவார் மேலும் ‘கேரள மாதிரி’ வளர்ச்சியின் கருத்தை ஆராய்ந்து பிரபலப்படுத்தினார். ராஜ் சிறந்த பொருளாதார நிபுணர், ஒரு சிறந்த ஆசிரியர், நிறுவனங்களை உருவாக்குபவர், இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி என்ற பன்முகத் தன்மையினைக் கொண்டவர்.
ஆதாரம்: www.azimpremjiuniversity.edu.in; www.thesouthfirst.com ; www.knrajeconomicsclub.com ; www.hindustantimes.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

