1. பால் சாமுவேல்சன் (Paul Samuelson) மே 1 , 1915இல் பிறந்து டிசம்பர் 13, 2009இல் மறைந்த அமெரிக்க பொருளாதார அறிஞர் ஆவார், இவர் 1970இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற முதல் அமெரிக்கர் ஆவார். அறிவியல் அடிப்படையில் நிலையான மற்றும் இயக்கப் பொருளாதாரக் கோட்பாட்டை உருவாக்கி, பொருளாதார அறிவியலில் பகுப்பாய்வினை மேம்படுத்த சாமுவேல்சன் வழங்கிய பங்களிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொருளாதார அமைப்புகளின் இயக்கவியல் மற்றும் நிலைத்தன்மை, சர்வதேச வர்த்தகக் கோட்பாட்டை பொதுப் பொருளாதார சமநிலைக் கோட்பாட்டில் ஒருங்கிணைத்தல், பொதுப் பொருட்களின் பகுப்பாய்வு, மூலதனக் கோட்பாடு, நலப் பொருளாதாரம் மற்றும் பொதுச் செலவு உள்ளிட்ட பல்வேறு களங்களில் சாமுவேல்சன் ஆய்வு செய்தார்.
சாமுவேல்சன் தனது இருபத்தொன்றாவது வயதில் முனைவர் பட்டத்திற்காக முதலில் வெளியிடப்பட்ட கட்டுரையான A Note on the Measurement of Utility, மிகவும் புகழ்பெற்றதாகும். அவரது Foundations of Econpomic Analysis என்ற புத்தகத்தில் நுகர்வோரின் இயல்பு போக்கைப் பற்றிய பொருளாதார கோட்பாட்டின் முக்கிய கேந்திரமாக இருக்கின்றது என்று பதிவிட்டுள்ளது.
1948இல் வெளியிடப்பட்ட Economics என்ற பாடப்புத்தமானது பொருளாதார கல்வியில் தரமான புத்தமாகக் கருதப்படுகின்றது. பொருளாதாரத்தில் Revealed Preference (நுகர்வோர் தேர்வு விருப்பம்) என்கின்ற கருத்தினை அறிமுகப்படுத்தினார். சாமுவேல்சன் செயல்பாட்டு ஆராய்ச்சியான Linear Programming and Economic Analysis என்ற மிகப்பெரிய பங்களிப்பினை 1958இல் வெளியிட்டார். இந்தப் புத்தகம் பொருளாதார அளவீடுகளை நேரியல் நிரலாக்கத்துடன் (linear programming) இணைத்து, தொழில்முறைத் துறைக்குத் தத்துவார்த்த பயன்பாடுகளைக் கொண்டு வந்த முதல் புத்தகங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.
பேரியல் பொருளாதாரத்தில், முதலீட்டின் முடுக்கி கோட்பாட்டை கீன்ஸியன் வருமான நிர்ணய மாதிரியுடன் இணைப்பது வணிக சுழற்சிகளின் சுழற்சி தன்மையை எவ்வாறு விளக்குகிறது என்பதை சாமுவேல்சன் நிரூபித்தார். சாமுவேல்சனின் கூற்றுப்படி, முழு வேலைவாய்ப்பை அடைய நிதி மற்றும் பணவியல் கொள்கைகள் மூலம் அரசாங்க தலையீடு தேவைப்படுகிறது என்கின்றார்.
சாமுவேல்சன் ஒரு புதிய வகை பணவீக்கத்தைப் பற்றி விவாதித்தார், அதை அவர் cost push (செலவு-உந்து) என்று குறிப்பிட்டார். பழக்கமான பணவீக்கத்திற்கு மாறாக, அதிகப்படியான செலவு சக்தி விலைகளையும் ஊதியங்களையும் உயர்த்துகிறது என்பது இதன் பொருள். சாமுவேல்சன் புதிய-கீனீஸியன் பொருளாதாரத்தின் நிறுவனர்களில் ஒருவராகக் கருதப்பட்டார். சாமுவேல்சன் அமெரிக்காவில் ஜான் எஃப். கென்னடியின் ஜனாதிபதியாக இருந்தபோது அரசின் நிர்வாகங்களுக்குப் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.econlib.org; www.britannica.com; www.investopedia.com; www.nobelprize.org
*****************************************
2. சென்னமனேனி ஹனுமந்த ராவ் (Chennamaneni Hanumantha Rao) மே 15, 1929இல் பிறந்த இந்தியப் பொருளாதார நிபுணர் ஆவார். அவர், வேளாண் பொருளாதாரம், திட்டமிடல் மற்றும் கொள்கை போன்ற துறைகளில் ஆர்வம்மிக்கவராக அறியப்படுகின்றார். ஒரு பொருளாதார நிபுணராக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர் ஆய்வு நிறுவனத்தை உருவாக்கியவர், இந்திய அரசில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ஹனுமந்த ராவ், ஏழாவது மற்றும் எட்டாவது நிதி ஆணையங்கள்; பொருளாதார நிர்வாக சீர்திருத்த ஆணையம், 1981-82; திட்ட ஆணையம், 1982-86; பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு, 1983-86; ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் குழு, 1994-2000; தேசிய ஆலோசனைக் குழு, 2004-08 உள்ளிட்ட பல நிபுணர் அமைப்புகளில் உறுப்பினராக பணியாற்றினார்.
பதினொன்றாவது ஐந்தாண்டு திட்டத்தை உருவாக்குவதற்கான வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கான வழிகாட்டுதல் குழுவின் தலைவராகவும் (2007-12), திட்ட ஆணையம், 2007; உயர் சக்தி உரங்கள் விலை நிர்ணயக் கொள்கை மறு ஆய்வுக் குழு, GoI, 1997-98; தெஹ்ரி நீர்மின்சார திட்டத்தின் மறுவாழ்வு மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்கள் குறித்த நிபுணர் குழு, 1996-97; ஆலோசனைக் குழு, தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள், 1992-95; வறட்சியால் பாதிக்கப்படும் பகுதி திட்டம் மற்றும் பாலைவன மேம்பாட்டுத் திட்டம் (DPAP & DDP) குறித்த தொழில்நுட்பக் குழு, கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம், 1993-94; தேசிய கிராமப்புற தொழிலாளர் ஆணையம், 1990-91; வேளாண் அமைச்சகம், பயிர்களின் உற்பத்திச் செலவின் முறைகளை மறுஆய்வு செய்வதற்கான நிபுணர் குழு, 1990; மற்றும் 20 அம்சத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் குழு, 1987-89 போன்ற துறைகளிலும், குழுக்களிலும் பணியாற்றினார்.
ஹனுமந்த ராவ், 2012 முதல் 2015 வரை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றினார். Raising inequalities in Income in India என்ற புகழ்பெற்ற அவரது கட்டுரை டிசம்பர் 17, 2022 அன்று அரசியல் பொருளாதார இதழில் (EPW) வெளியிடப்பட்டது.
ஆதாரம்: www.naas.org.in; www.dbpedia.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

