ஹாரிசன் ஆலன் “பஸ்” பிரைஸ் (Harrison Alan “Buzz” Price) மே 17, 1921இல் பிறந்து ஆகஸ்ட் 15, 2010இல் மறைந்த அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். மக்கள் தங்கள் ஓய்வு நேரத்தையும் வளங்களையும் எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதில் நிபுணத்துவம் பெற்ற ஒரு ஆய்வறிஞர். அவர் பஸ் என்று நன்கு அறியப்படுகிறார். பஸ் டிஸ்னிக்கான தனது பணிக்காக 150 க்கும் மேற்பட்ட சாத்தியக்கூறுகள், சந்தைப்படுத்தல் மற்றும் தள-தேர்வு ஆய்வுகளை உருவாக்கினார். ஹாரிசன் பிரைஸ் உலகின் மிகவும் பிரபலமான தீம் பூங்காக்களை உருவாக்கினார், கலிபோர்னியாவின் அனாஹெய்மில் டிஸ்னிலேண்டையும், புளோரிடாவின் ஆர்லாண்டோவில் வால்ட் டிஸ்னி உலகத்தையும் உருவாக்கினார்.
டிஸ்னி நிறுவனமானது 160 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தியது, டிஸ்னிலேண்ட் 1955இல் திறக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டில், அவர் பொருளாதார ஆராய்ச்சி கூட்டாளிகளை (ERA) என்பதை நிறுவினார் மற்றும் வால்ட் டிஸ்னி வேர்ல்ட் மற்றும் எப்காட் மையத்திற்காக ஆய்வுகளை மேற்கொண்டார். கால்ஆர்ட்ஸ் மற்றும் கலிபோர்னியாவில் உள்ள சீக்வோயா தேசிய பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு தனித்துவமான சுவிஸ்-கருப்பொருள் ஸ்கை ரிசார்ட்டான வால்ட்டின் முன்மொழியப்பட்ட மினரல் கிங் திட்டத்திற்கான மதிப்பீட்டு ஆய்வுகளையும் அவர் மேற்கொண்டார். பஸ் ஒரு நிறுவனர், நிறுவன பயிற்சியாளர் மற்றும் ஓய்வு நேரப் பொருளாதார பகுப்பாய்வாளராவும் அறியப்படுகிறார்.
ஓய்வு பொருளாதாரம்
பொழுதுபோக்கு, பொருளாதாரம், சமூகவியல், மணைச் சந்தை (ரியல் எஸ்டேட்), நேரம் மற்றும் இயக்க ஆய்வுகள், கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல் ஆகியவற்றை உள்ளடக்கிய, வெளிப்புற பொழுதுபோக்குகளை உருவாக்குபவர்கள் மக்களைத் தொலைக்காட்சியிலிருந்தும் வீட்டை விட்டும் விலக்கி வைப்பதற்கான மிகவும் லாபகரமான வழிகளைத் தேடத் தொடங்கிய 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிறந்தது. 1999 ஆம் ஆண்டில், பொழுதுபோக்கு வர்த்தக வெளியீடான வெரைட்டி, HA பிரைஸை “பொழுதுபோக்கு பொருளாதாரத்தின் டீன்” என்று அழைத்தது.
வெளிப்புற பொழுதுபோக்கு பொருளாதாரம், பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக இயற்கை வளங்களின் பகிர்வு மற்றும் தேவையைப் பற்றியது. 2022ஆம் ஆண்டில், வெளிப்புற பொழுதுபோக்கு பொருளாதாரத்தில் கூட்டு மதிப்பில் பயணம் மற்றும் சுற்றுலா 46% ஆகும். சில்லறை வர்த்தக தொழில் குழு அமெரிக்க வெளிப்புற பொழுதுபோக்குக்கு நாட்டின் மிக முக்கியமான பங்களிப்பாளராக இருந்தது, இது $153.6 பில்லியனை ஈட்டியது. பூங்காக்கள் மற்றும் திறந்தவெளிகள் ஒரு பகுதிக்கு புதிய குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகங்களை ஈர்க்கலாம், இதனால் விற்பனை மற்றும் வரி வருவாய் அதிகரிக்கும், அவை அரசாங்க செலவுகளைக் குறைக்கும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நன்மைகளையும் அளிக்க முடியும். இன்று, முன்னேறிய பொருளாதார நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வேளாண்மையின் பங்களிப்பு குறைந்த நிலையில் காணப்படுகின்றது ஆனால் சேவையின் பங்களிப்பானது அதிகமாகவும் உள்ளது. வரும் ஆண்டுகளில், சேவையின் முதன்மை அடையாளமாக ஓய்வு நேரச் செலவினங்கள் காணப்படும். ஓய்வு நேர பொருளாதாரத்தின் முக்கிய இயக்கியாக மக்கள்தொகையின் அதிகரித்து வரும் வயதாக இருக்கும்.
இந்தியாவில், 10 ஆண்டுகளில் சுமார் 225 மில்லியன் முதியவர்கள் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2050ஆம் ஆண்டில் சுமார் 350 மில்லியனாக அதிகரிக்கும். அதிக வருமானம் ஈட்டி கணிசமான சேமிப்புகளைச் சேகரித்த அவர்களில் பெரும்பாலோர் ஓய்வு பெற்றவர்கள், ஆனால், சுகாதார தொழில்நுட்பத்தினால், அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் கிட்டத்தட்ட முழுநேர ஓய்வு நேரத்தை அனுபவிப்பார்கள், அவர்களின் பணம் மற்றும் உடற்பயிற்சி மூலம் அவர்கள் விரும்பியதைச் செய்ய முடியும். இளைஞர்களுடன் வளர்ந்து வரும் செலவழிப்பு வருமானம், அவர்கள் விரும்பும் போது ஓய்வு எடுக்கும் திறன், வேலை மற்றும் வாழ்க்கையைச் சமநிலைப்படுத்துவதற்கான அதிகரித்த விழிப்புணர்வு, கணிசமான சேமிப்பு மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ள முதியவர்கள், மேலும் சந்தைப்படுத்தல் மற்றும் நண்பர்களின் அழுத்தத்தால் உருவாக்கப்பட்ட தேவைகள் ஆகியவை இத்துறையினை வளர்த்தெடுக்கும்.
ஓய்வு நேரங்கள் இப்போது இசை, நடனம், யோகா, ஓவியம், சமையல் மற்றும் பல செயல்பாடுகளைக் கற்றுக்கொள்வதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. சிலர் மொழிகளைக் கற்றுக்கொள்கிறார்கள், மேலும் சிலர் (இளைஞர்கள்/பெரியவர்கள்) கணிதம் அல்லது இயற்பியலைக் கற்றுக்கொள்வதற்கும் செல்கிறார்கள். உடற்பயிற்சி செய்வதும், அதற்காக நேரம் ஒதுக்குவதும் இப்போது இளைஞர்களிடையே கிட்டத்தட்டக் கட்டாய ஓய்வு நேர நடவடிக்கையாகிவிட்டது.
ஆதாரம் : www.ftp.idu.ac.id; www.jstor.org; www.nber.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

