மே 18 - அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் ஹேஸ்டிங்ஸ் சேம்பர்லின் (Economist Edward Hastings Chamberlin Article in Tamil) - முனைவர் பு. அன்பழகன் - www.bookday.in

மே 18 – அறிவோம் இன்று ஒரு பொருளாதார அறிஞர்:- எட்வர்ட் ஹேஸ்டிங்ஸ் சேம்பர்லின் – முனைவர் பு. அன்பழகன்

எட்வர்ட் ஹேஸ்டிங்ஸ் சேம்பர்லின் (Edward Hastings Chamberlin) மே 18, 1899இல் பிறந்து ஜூலை 16, 1967இல் மறைந்த, தொழில்துறை முற்றுரிமை மற்றும் போட்டி பற்றிய கோட்பாடுகளுக்குப் பெயர் பெற்ற ஒரு அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஆவார். 1927இல் சமர்ப்பிக்கப்பட்ட அவரது ஆய்வுக் கட்டுரை வழியாக monopolistic competition (முற்றுரிமைப் போட்டி) கோட்பாட்டை அறிமுகப்படுத்தியது. தனது வாழ்க்கையின் பெரும்பகுதிக்கு, எட்வர்ட் சேம்பர்லின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் 1937-1967 காலத்தில் பொருளாதார பேராசிரியராக பணியாற்றினார். அவர் நுண்ணிய பொருளாதாரத்திற்கு, குறிப்பாகப் போட்டி கோட்பாடு மற்றும் நுகர்வோர் தேர்வு ஆகியவை களத்தில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்தார், அத்துடன் விலைகளுடனான அவற்றின் தொடர்பிலும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பைச் செய்தார்.

1933ஆம் ஆண்டு, சேம்பர்லின் The Theory of Monopolistic Competition என்ற புத்தகத்தை வெளியிட்டார் அதே ஆண்டில், ஜோன் ராபின்சன் The Economics of Imperfect Competition என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த இரண்டு பொருளாதார வல்லுநர்களையும் நிறைவு போட்டியின் நவீன ஆய்வின் முன்னோடிகளாகக் கருதலாம். சேம்பர்லினின் புத்தகம் பெரும்பாலும் ராபின்சனின் புத்தகத்துடன் ஒப்பிடப்படுகிறது, குறிப்பாக ராபின்சன்னால் அறிமுகப்படுத்தப்பட்ட monopsony (வாங்குவோர் முற்றுரிமை) என்பதை ஒப்பிடுகிறார். சம உற்பத்தித்திறன் கொண்ட பெண்கள் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு இடையிலான ஊதிய இடைவெளியை விவரிக்க வாங்குவோர் முற்றுரிமை பயன்படுத்தப்படுகிறது.

சேம்பர்லினின் ஆய்வானது, நிறுவனங்களின் விளம்பரம் மூலம் தீவிரமாகப் போட்டியில் இருப்பவை, இருப்பிட நன்மை மற்றும் வேறுபாடுடைய உற்பத்தியில் ஒரு பொருளாதாரத்தின் செயல்பாடுகள் பற்றிய மிக ஆழமான புரிதலை ஏற்படுத்துகிறது. சேம்பர்லின் உற்பத்தி வேறுபடுத்துதல் என்ற சொல் பதத்தை அறிமுகப்படுத்தினார். இதன் பொருள், பொருட்களின் வினியோக விலையானது முற்றுரிமைப் போட்டியில் நிர்ணயம் செய்யும் விலையைவிட அதிகமாக இருக்கும் என்பதாகும். இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ், பொருளாதார வல்லுநர்கள் ரிச்சர்ட் கான், நிக்கோலஸ் கால்டோர் மற்றும் ஜோன் ராபின்சன், மற்றும் சிகாகோ பல்கலைக்கழக பொருளாதார வல்லுநர்கள் மில்டன் ஃப்ரீட்மேன், ஃபிராங்க் நைட் மற்றும் ஜார்ஜ் ஸ்டிக்லர் ஆகியோருடன் சேம்பர்லினுக்கு குறிப்பிடத்தக்க அறிவார்ந்த தொடர்புகள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்: www.britannica.com; www.ideasofeconomists.com; www.hetwebsite.net; www.mpra.ub.uni-muenchen.de

📚 எழுதியவர்:

முனைவர் பு. அன்பழகன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *