ஜான் ஸ்டூவர்ட் மில் (John Stuart Mill) மே 20, 1806இல் பிரித்தானிய நாட்டில் பிறந்து மே 8, 1873இல் மறைந்த செல்வாக்கு பெற்ற தத்துவஞானி, பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் கிழக்கிந்திய குழுமத்தின் மூத்த அதிகாரி ஆவார். மில் பொருளாதாரத்தைத் தத்துவத்துடன் இணைத்தார். மக்களின் மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும் செயல்கள் சரியானவை, துன்பத்திற்கு வழிவகுக்கும் செயல்கள் தவறானவை என்ற பயன்பாட்டுவாத தார்மீகக் கோட்பாட்டை அவர் நம்பினார்.
பொருளாதார வல்லுநர்களிடையே, அவர் 1848 ஆம் ஆண்டு எழுதிய Principles of Political Economy (அரசியல் பொருளாதாரத்தின் கொள்கைகள்) என்ற படைப்பிற்காக மிகவும் பிரபலமானவர், இது வெளியிடப்பட்டுப் பல தசாப்தங்களுக்கு முன்னணி பொருளாதார பாடப்புத்தகமாக மாறியது.
அரசியல் முடிவெடுப்பதிலும் சட்டமியற்றுவதிலும் பாரம்பரிய பொருளாதாரக் கோட்பாடு, தத்துவ சிந்தனை மற்றும் சமூக விழிப்புணர்வைப் பயன்படுத்துவதை அவர் ஆதரித்தார். பணியிட விதிமுறைகள் மற்றும் தொழிலாளர்களின் பணிக்கான நேர வரம்புகள், சார்பான வரிகள் மற்றும் அரசாங்க மேற்பார்வையை அவர் ஆதரித்தார். அவரது பிற்கால எழுத்துக்கள், சுதந்திர சந்தை மற்றும் முதலாளித்துவத்தின் மீதான பாரம்பரிய பொருளாதாரத்தின் நம்பிக்கையிலிருந்து சோசலிசம் அல்லது குறைந்தபட்சம் ஒரு கலப்புப் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதைப் பற்றியதாக இருந்தது.
ஜான் ஸ்டூவர்ட் மில் சமூகத்தில் பெண்களின் நிலை குறித்து அக்கறை கொண்டிருந்தார், மேலும் பாலின சமத்துவத்திற்கான காரணத்தை மேலும் மேம்படுத்துவதற்காக அவர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தார். மில் சுதந்திரத்தில், குறிப்பாகப் பேச்சு மற்றும் சிந்தனை சுதந்திரத்தில் உறுதியான நம்பிக்கை கொண்டவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.econlib.org; www.investopedia.com; www.britannica.com; www.hetwebsite.net
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

