எட்மண்ட் ஜேன்ஸ் ஜேம்ஸ் (Edmund Janes James) மே 21, 1855 பிறந்து ஜூன் 17, 1925இல் மறைந்த அமெரிக்க நாட்டினைச் சார்ந்த வரலாற்றுப் பொருளாதார அறிஞர் மற்றும் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத் துறையின் முதல் பேராசிரியரும் ஆவார், இத்துடன் சிக்காகே பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
ஜேன்ஸ் ஜேம்ஸ் அமெரிக்க அரசியல் மற்றும் சமூக அறிவியல் அகாடமியின் முதன்மை நிறுவனர், முதல் தலைவர் மற்றும் முதல் ஆசிரியர் ஆவார், 1889இல் அமெரிக்க அரசியல் மற்றும் சமூக அறிவியல் அகாடமியை (AAPSS) நிறுவினார். ஜேன்ஸ் ஜேம்ஸ் அமெரிக்கப் பொருளாதாரக் கழகத்தினை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பினைச் செய்துள்ளார். உள்ளாட்சி அரசினைப் பற்றிய தெளிவான அறிவாற்றல் பெற்றவராக ஜேன்ஸ் ஜேம்ஸ் கருதப்படுகிறார்.
ஜேன்ஸ் ஜேம்ஸ் காடுகளைப் பாதுகாத்தல் மற்றும் அதன் மேலாண்மைக்கான இயக்கத்தில் மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், பென்சில்வேனியா வனவியல் சங்கம் மற்றும் அதன் கவுன்சிலின் உறுப்பினர்களில் ஒருவராக (1886) இருந்தார். அவர் சங்கத்தின் முன் “நமது காடுகளுடன் அரசின் உறவு” மற்றும் “நமது காடுகளின் பொருளாதார முக்கியத்துவம்” உள்ளிட்ட தலைப்புகளில் உரைகளை நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.findingaids.library.northwestern.edu; www.irwincollier.com
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

