டென்னிஸ் ஹோம் ராபர்ட்சன் (Dennis Holme Robertson) மே 23, 1890இல் பிறந்து ஏப்ரல் 21, 1963இல் மறைந்த பிரித்தானியப் பொருளாதார அறிஞர் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், அவர் கீன்ஸின் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது, தொடர்ந்து கீன்ஸின் ஆய்வுப்பணிக்கு ஒத்துழைப்பை ராபர்ட்சன் வழங்கிவந்தார். ராபர்ட்சன், ஜே.எம். கீன்ஸிடம் தொடக்கத்தில் ஆதரவாளராக இருந்தார், பின்னாளில் அவரது எழுத்துகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். ராபர்ட்சனின் முதல் புத்தகமான, A Study of Industrial Fluctuation (1915), வாணிக சுழற்சியில் பணத்தின் ஈடுபாட்டினை விடக் கண்டுபிடிப்பு மற்றும் முதலீட்டின் தொடர்பு பற்றி முக்கியத்துவம் அளித்தது, இருப்பினும், 1922இல் வாணிப சுழற்சியில் பணத்தின் பங்கு பற்றி அவருடைய கவனம் செலுத்தியது. கீன்ஸைப் போலவே, அரசாங்கக் கொள்கை வழியாக விலை மட்டத்தினை நிலைப்படுத்த முயல வேண்டும் என்றும், வங்கிகளில் வைப்புத்தொகையானது பண அளிப்பிற்கு மிக முக்கியமானது என்றும் அவர் கூறினார். அடுத்தடுத்த படைப்புகளில், ராபர்ட்சன் சேமிப்பு மற்றும் முதலீட்டின் இயக்கக் கோட்பாட்டை உருவாக்கினார், இது பின்னர் கீன்ஸால் அறிமுகப்படுத்தப்பட்ட கோட்பாட்டை விட மிகவும் நுட்பமானதாக இருந்தது; இதுவே கீன்ஸின் கோட்பாட்டின் மீதான விமர்சனத்தில் முக்கிய அம்சங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ராபர்ட்சனின் வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு மற்றும் கீன்ஸுடனான அவரது தொடர்பை முறித்துக் கொள்வதற்கான ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகின்றது.
பணவியல் கோட்பாடு
ராபர்ட்சனின் முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுவது, ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதில் தொடங்கி வங்கிக் கடன் உருவாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், பணவீக்க செயல்முறையின் கட்டங்களை இனம் காணுதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். பணவாட்டத்தின் எதிர்மறை நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு தங்கத் திட்டத்திற்கு திரும்புவதற்கான வாய்ப்புள்ளது என்ற எச்சரிக்கையினை அவர் வெளிப்படுத்தினார்.
ராபர்ட்சன், சேமிப்பு மற்றும் முதலீடுப் பொருளாதார நடவடிக்கைகளின் அளவினை நிர்ணயிப்பவையாக இருக்கிறது என்றும், சேமிப்பு முதலீடாக மாற்றப்படுவதற்கான வழிமுறையாக வங்கி அமைப்பானது உருவாக்கித்தருகிறது என்கிறார். பணத்தின் நிலைப்புத் தன்மை மற்றும் விலை வீழ்ச்சியின் விளைவாக உற்பத்தித் திறனானது அதிகரிக்கும், இது ஒரு தொடர் இயக்கத்தினை உருவாக்கும் என்று ராபர்ட்சன் குறிப்பிடுகிறார்.
வாணிபச் சுழற்சி
1915இல் ராபர்ட்சன் வணிக சுழற்சி கோட்பாட்டை அறிமுகப்படுத்தினார். இது தொடர்பாக ராபர்ட்சன் ஏராளமான அனுபவ தரவுகளைச் சேகரித்தார், மேலும் அவரது சில முறைகள் பிற்காலத்தில் தரநிலைகளின்படி குறைகள் உள்ளதுபோல் தோன்றினாலும், இத் தரவுகளின் அடிப்படையில் அவர் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்தார். ராபர்ட்சன், முதலீட்டின் போக்கை வடிவமைப்பதில் கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கங்களின் பங்கை அவர் வலியுறுத்தினார், இதன் விளைவாக, பொது பொருளாதார நடவடிக்கைகளின் செயல்பாடு தூண்டப்பட்டது. இத்துண்டுதல் வழியாக வணிக சுழற்சியின் காரணத்தையும் இயக்கத்தினையும் அறிந்துகொள்ள உதவியது குறிப்பிடத்தக்கது.
கீனீஸியன் மீதான விமர்சனங்கள்
கீன்ஸியனின் வழங்கல்களைப் பற்றி ராபர்ட்சனின் விமர்சனக் கட்டுரைகள் தொடராக வெளியிடப்பட்டது. கீன்ஸின் சேமிப்பு-முதலீடு பற்றிய கோட்பாடானது சிக்கலான வெளிப்பாடாக உள்ளது என்றார் ராபர்டசன், அதனுடைய நிலையான மற்றும் நிலைத்த சமநிலையானது ஒரு பின்னோக்கிய தன்மை உடையதாக உள்ளது என்றும் இது தவறான புரிதலுக்கு வழிவகுத்தது என்று குறிப்பிடுகிறார். ராபர்ட்சன்னின் கருத்துப்படி, சேமிப்பும் முதலீடும் சமமாக இல்லை என்ற அடிப்படையை வலியுறுத்துகிறார். கீன்ஸின் கோட்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்திற்கு இடமின்றி பணவீக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று குறிப்பிடுகிறார். வட்டி விகித நிர்ணயம், நீர்ம விருப்பம் போன்ற கீன்ஸின் கோட்பாடுகள் மீது ராபர்ட்சன் தன்னுடைய திறனாய்வினை முன்வைத்தார். இதன் அடிப்படையில் கடன் நிதிக் கோட்பாட்டினை ராபர்ட்சன் அறிமுகப்படுத்தினார். இக் கோட்பாட்டின் மீதும் பல்வேறு திறனாய்வுகள் வெளியிடப்பட்டது. சில பொருளாதார வல்லுநர்கள் ராபர்ட்சென்னின் கோட்பாடுகள் மாறும் சூழ்நிலைகளை விளக்குவதில் மிகவும் பயனுள்ளதாகக் கருதுகின்றனர். 1944ஆம் ஆண்டில், புகழ்பெற்ற பிரிட்டன் வூட்ஸ் மாநாட்டிற்கு கீன்ஸுடன் சென்ற குழுவில் ராபர்சன் பங்கேற்றார், மேலும் இதன் இறுதி ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த பேச்சுவார்த்தைகளில் அவர் குறிப்பிடத்தக்கப் பங்கைக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்
(1915): “A Study of Industrial Fluctuation”
(1926): “Banking Policy and the Price Level”
(1930): “Keyne’s Treatise on Money”
(1931): “Economic Fragments”
ஆதாரம் : www.britannica.com ; www.encyclopedia.com; www.eprints.lse.ac.uk; www.archives.trin.cam.ac.uk
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

