வில்லியம் பெட்டி (William Petty) மே 26, 1623இல் பிரித்தானிய நாட்டில் பிறந்து டிசம்பர் 16, 1687இல் மறைந்த அரசியல் பொருளாதார அறிஞர், புள்ளியியல் நிபுணர், மருத்துவர் மற்றும் ஆங்கில தத்துவஞானி ஆவார். பெட்டி மக்கள்தொகை, பொருளாதாரம் மற்றும் பொதுச் சுகாதாரத்தை இணைத்து ஆயவிட்ட முதல் நபர்களில் ஒருவர் கருதப்படுகின்றது. அவரது பொருளாதாரக் கருத்துக்கள் முதன்மையாக காரல் மார்க்ஸ் மற்றும் ஆடம் ஸ்மித் போன்ற தலைசிறந்த அறிஞர்களால் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது, சமத்துவம் பற்றிய அவர்களின் பிரபலமான கோட்பாடுகளை நன்மை மற்றும் தீமை இரண்டையும் வெளிப்படுத்தியது. மார்க்ஸ் வில்லியம் பெட்டியை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நபராகக் கருதினார், பெட்டி நவீன அரசியல் பொருளாதாரத்தின் நிறுவனர் என்று அவர் குறிப்பிடுகின்றார். ஒவ்வொரு பொருளாதாரக் கூறுகளும் ஒட்டுமொத்தமாக இருக்க வேண்டும் என்றும், நாட்டின் வளத்தினைத் தடுக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க பொதுவாகக் கணிதம், புள்ளிவிவரம் மற்றும் அறிவியல் கருவிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கருதினார்.
மதிப்பு கோட்பாடு
பெட்டியின் கூற்றுப்படி, மதிப்பின் தோற்றம் செயல்பாட்டில் உள்ளது என்றும் ஒவ்வொரு தயாரிப்புக்கும் இரண்டு வகையான மதிப்புகள் உள்ளன அவை, இயற்கை (உள் மதிப்பு – நிலம் மற்றும் வேலை) மற்றும் அரசியல் மதிப்பு (சந்தை மதிப்பு – உற்பத்தி மற்றும் உழைப்பு ஆகியவை பொருளை உற்பத்தி செய்யத் தேவை) என்று குறிப்பிட்டார்.
சமூக செல்வத்தை உருவாக்குதல்
வரியானது தேசிய உற்பத்தியினை உருவாக்கும் நடைமுறைக்கான முதலீடு என்றார். செல்வந்தர்கள், உயர் வருமானம் பெருப்பவர்களிடம் பணம் குவிந்திருப்பதினை வரி வழியாகப் பெற்று நாட்டிற்கு நன்மை பயக்கும் முதலீடுகளைச் செய்யவேண்டும் என்றார். அவருடைய கோட்பாட்டின்படி, ஒவ்வொரு நபரும் தங்கள் சொத்துக்கள் மற்றும் வருவாய்க்கு ஏற்ப அரசுக்குப் பங்களிக்க வேண்டும் என்றார்.
பெட்டி-கிளார்க் சட்டம்
வேளாண்மையில் ஈடுபடுகின்ற தொழிலாளர் பங்கேற்பினை மறுசீரமைக்க வேண்டும் என்றார், அவர்களை வேளாண்சாரா நடவடிக்கைகளில் ஈடுபட வைக்கவேண்டும் என்றும், இதனால் வேளாண் உற்பத்தியினை கடந்து விரிந்துபட்ட சமூக மாற்றத்திற்கான வழியை உருவாக்கும் என்கிறார். ஒருவர் விவசாயத் துறையிலிருந்து தொழில்துறைக்கும், பின்னர் சேவைத் துறைக்கும் நகர்கிறார் என்று இக் கோட்பாடு விளக்குகிறது.
பொருளாதார முன்னேற்றம்
மக்கள் பொருளாதாரத்திற்கு மதிப்பு சேர்க்கிறார்கள் என்றும், மக்கள் தொகை பெருக்கம் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றும் பெட்டி நம்பினார்.
சுகாதாரம்
குடிமக்களின் நல்ல ஆரோக்கியமானது மக்கள்தொகையை அழிக்கும் மற்றும் நாட்டின் பொருளாதார உற்பத்தித்திறனைக் குறைக்கும் தொற்று நோய்களால் அவர்களைத் தடுக்கும் என்று அவர் நம்பினார்.
நிதி
அவரது மிக முக்கியமான கோட்பாடுகள் நிதி பங்களிப்புகள், தேசிய செல்வம், பண அளிப்பு மற்றும் சுழற்சி வேகம், மதிப்பு, வட்டி விகிதம், பன்னாட்டு வர்த்தகம் மற்றும் அரசாங்க முதலீடு ஆகியவை ஆகும்.
அரசியல் பொருளாதாரம்
1672இல் Essay in Political Arithmetick and Political Survey or Anantomy of Ireland என்ற அவரது கட்டுரைகள் மக்கள் தொகை மற்றும் சமூக வருமான மதிப்பீடுகள் பற்றியதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
பெட்டியின் சொல் உருவாக்கம்
முழு வேலைவாய்ப்பு என்ற சொல் பதத்தை அவர் உருவாக்கினார். நிலத்தின் விலை, நிலத்தின் எதிர்கால வாடகையின் தள்ளுபடி செய்யப்பட்ட தற்போதைய மதிப்புக்குச் சமம் என்று அவர் கூறினார். நில வாடகையினை நிர்ணயிக்கும் முறையினை பெட்டி உருவாக்கினார். பொருளாதாரத்தில் “உபரி” என்ற கருத்தையும், மதிப்புக்கான உழைப்பு கோட்பாட்டையும் பெட்டி வெளிப்படுத்தினார்.
தொழிலாளர்
பெட்டி, உழைப்புக்கு வரி குறைவாக விதிக்கப்படுவதாகவும், எஸ்டேட்களுக்கும் மக்களுக்கும் இடையிலான வரிச்சுமை பிரிக்கப்பட வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறார். தொழிலாளர்கள் அதிகமாக உழைத்துக் குறைவாகச் சாப்பிட்டால், அவர்களால் வரிச்சுமையினைத் தாங்கி வரியினை செலுத்த முடியும் என்று குறிப்பிடுகிறார். அதிக ஊதியம் அதிக தொழிலாளர் அளிப்பிற்கு வழிவகுக்காது என்கிறார் பெட்டி.
சந்தை மதிப்புகள் உழைப்பு நேர மதிப்புகளுக்குச் சமமாக இல்லாவிட்டால், விலை குறைவாக உள்ள பொருளின் உற்பத்தியாளர் பரிமாற்றம் மூலம் உழைப்பு நேரத்தை இழந்து, அதிக விலை கொண்ட பொருளை உற்பத்தி செய்வதில் தனது உழைப்பை வழங்குவதில் தயாரா இருப்பார் என்று பெட்டி குறிப்பிடுகிறார். இதன் விளைவாக அளிப்பில் ஏற்படும் மாற்றங்கள் விலையை உயர்த்தும் இது பின்னால் உள்ளார்ந்த தொழிலாளர் நேரச் சந்தை மதிப்புடன் சமமாகும் வரை தொடரும் என்கிறார்.
தேசிய வருமானம்
பெட்டி தேசிய வருமானத்தைச் செலவின முறையின் மூலம் அளவிடுகிறார், அதை அவர் ஒரு நபருக்குச் செலவிடப்பட்ட தொகையைக் கணக்கிட்டு, மதிப்பிடப்பட்ட மக்களின் எண்ணிக்கையால் பெருக்குவதன் மூலம் தேசிய வருவாயினைப் பெறமுடியும் என்கிறார்.
பெட்டி பொருளாதாரத்தில் மூன்று முக்கிய படைப்புகளை எழுதினார் அவை Treatise of Taxes and Contributions (1662), Verbum Sapienti (1665), Quantulumcunque Concerning Money (1682) போன்றவை ஆகும்.
ஆதாரம்: www.britannica.com; www.hetwebsite.net ; www.eet.pixel-online.org; www.oll.libertyfund.org
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

