ஜாக் கிளாட் மேரி வின்சென்ட் டி கூர்னே (Jacques Claude Marie Vincent de Gournay ) மே 28, 1712இல் பிறந்து ஜூன் 27, 1759இல் மறைந்த பிரெஞ்சு நாட்டினைச் சார்ந்த பொருளியல் அறிஞர் ஆவார். ‘தடையற்ற கொள்கை, தடையற்ற வர்த்தகம்’ ஆகிய சொல்லை கூர்னே உருவாக்கினார் என்று சில பொருளியல் வரலாற்றாசிரியர்கள் நம்புகிறார்கள். நாடுகள் தங்கள் பணத்தையும் வர்த்தகத்தையும் எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பது குறித்த அவரது கருத்துக்களுக்காக அவர் புகழ்பெற்றவர் ஆவார். காலனித்துவ வர்த்தகத்தின் கட்டுப்பாடுகளை நீக்குதல், கைவினைஞர் சங்கங்களை ஒழித்தல் மற்றும் உற்பத்திப் பொருட்களின் மீதான அரசாங்க ஆய்வு முறையை ஒழித்தல் போன்ற தடையற்ற வர்த்தகக் கருத்துக்களை பிரான்சில் பரப்பியதோடு கூர்னே பாரம்பரியமாகத் தொடர்புப்படுத்தப்படுகிறார்.
அவர் “அதிகாரத்துவம்” (bureaucracy) என்ற சொல்லையும் உருவாக்கினார். இந்தச் சொல், பலதரப்பட்ட அதிகாரிகள் மற்றும் துறைகளால், பெரும்பாலும் கடுமையான விதிகளின்படி முடிவுகள் எடுக்கப்படும் ஒரு அரசாங்க முறையை விவரிக்கிறது. அதிகப்படியான அரசாங்க விதிகள் குறித்துத் தனது கருத்தை விவரிக்க, கூர்னே ‘அதிகாரத்துவம்’ (bureaucratie) என்ற சொல்லைப் பயன்படுத்தினார் (இதன் நேரடிப் பொருள் “மேசைகளால் ஆன அரசாங்கம்” என்பதாகும்). அதிகப்படியான விதிகளும் சட்டங்களும் உண்மையில் வர்த்தகத்தைக் குறைத்தது, இது வணிகங்கள் வளர்வதைத் தடுக்கின்றன என்று அவர் நம்பினார். இந்த ஒழுங்குமுறைகள் பொருளாதாரத்தைத் தடுத்து நிறுத்தும் சங்கிலிகள் போன்றவை என்று அவர் கருதினார். வணிகத்தின் மீதான அரசாங்கக் கட்டுப்பாட்டை அவர் கடுமையாக வெறுத்தார். “தலையிடாக் கொள்கை” (laissez faire) குறித்த அவரது எண்ணங்களும், “அதிகாரத்துவம்” (poweraucracy) மீதான அவரது விமர்சனமும் இன்றும் பொருளியலில் களத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன என்பத குறிப்பிடத்தக்கது.
ஆதாரம்: www.researchgate.net; www.hetwebsite.net; www.kids.kiddle.co
📚 எழுதியவர்:

******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

