நீ இன்றி இயங்காது உலகு !

உதிரம் கொடுத்து
வியர்வை குளித்து அயராது
உழைக்கும் தோழரே !
நரம்பு புடைத்துக்
கால்கள் பொசுக்கிட்டுத் தொடர்ந்து
உழைக்கும் தோழரே !
வயிறு வற்றி
தேகம் வெளுத்து உறுதியாய்
உழைக்கும் தோழரே !
அல்லும் பகலும்
உறக்கம் விடுத்து காலந்தவறாது
உழைக்கும் தோழரே !

எத்தனை இயந்திரம்
வந்தாலும் உன்போல் ஓர் இயந்திரம் உண்டோ !
எத்தனை மென்பொருள் வந்தாலும் உன்போல்
ஒரு பரம்பொருள் உண்டோ !
நீரின்றி அமையாது உலகு –
தோழா
உழைக்கும் நீயின்றி இயங்காது உலகு !
உழைப்பாளி உன் கை என்றும் ஓங்கட்டும்
நம் நாட்டின் வறுமை ஒழியட்டும்…

மு. முத்துச்செல்வம்
வெம்பாக்கம்

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *