May Day Special Poem | மே தின சிறப்பு கவிதை

மே தின சிறப்பு கவிதை – “ஒளிவிளக்கு”

ஒளிவிளக்கு 

 

அப்போது அந்த நாடு

வளர்ந்து விட்டதாக பேசிகொண்டார்கள்

பங்குசந்தை உச்சத்தையும் தாண்டி

மேலே போய் கொண்டிருப்பதாக

செய்தி வாசித்தார்கள்

வறுமைக் கோட்டிற்கு கீழே

யாருமில்லையென

அரசாங்க செலவில்

கோடிகளில் விளம்பரம் செய்தார்கள்

 

அவர்கள் வைத்திருந்த ஏவுகணை

அசுர வேகத்தில் விண்ணில் பாய்ந்தது

அன்று நான்

சென்று கொண்டிருந்தேன்

அது ஒரு குட்டியானை

அப்படித்தான் அழைக்கிறார்கள்

அது

பொருட்களை இடம்மாற்றும்

போக்குவரத்து சுமைதாங்கி

அது காலையில் சாலையில்

ஓடிக்கொண்டிருந்தது

அதில் சில மின்சார கம்பிகளும்

சுத்தியும் கருவிகளும்

கம்பும் கயிரும்

ஒரு மூலையில் இருந்தது

 

மீதி இடம் முழுவதும் அடைத்தபடி

அப்படியும் இப்படியும்

அசைந்தபடி

நெருக்கிக் கொண்டு

அதில் பயணித்தனர்

மின்சாரத் தொழிலாளர்கள்…

 

வளர்ந்த அந்நாட்டிற்கு

ஒளிவிளக்கேற்றுவது தான்

ஓடும் அந்த வண்டியின்

ஒரே குறிக்கோள்!

 

மே தின வாழ்த்துகள் 

 

எழுதியவர்:

ந.ஜெகதீசன்

சென்னை.




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *