Subscribe

Thamizhbooks ad

மே தினம் – நூல் அறிமுகம் | மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி

 வாழ்த்துகள்
இன்று மே தினம் , என அனைவரும் கொண்டாடும் ஒரு நாளின் பின்னணியில் எத்துணை உயிர்களின் போராட்டமும் வலியும் வேதனையும் அடங்கியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள இந்த 30 பக்க சிறு புத்தகம் தூண்டுதலாக உள்ளது.
வர்க்க அரசியலில் தொழிலாளிகள் வர்க்கம் எப்பேர்ப்பட்ட துன்பங்களைப் பொறுத்தும்  பொங்கி எழுந்தும் வரலாற்றை எழுதியிருக்கிறது  என்பதையும் முதலாளிகள் வர்க்கத்தின் உழைப்புச் சுரண்டல் பேராசையும் தொழிலாளிகள் மீதான வன்மமும் என்ன விகிதத்தில் இருந்து இருள் கவிந்த நாட்களாக உழைக்கும் மனிதர்கள் கழித்தனர் என்பதையும் பதிவு செய்கிறது புத்தகம் .
பாரதி புத்தகாலயம் வெளியிட்டு கே.செல்வபெருமாள் எழுதி 2005 இல் வெளிவந்த பொக்கிஷ நூல் இது.
மவுனம் வெல்லும் என ஆரம்பப் பக்கத்தைக் தாங்கி வரும் இது உலகளாவிய போராட்டங்களைப் பதிவு செய்கிறது. முதலாளித்துவம் 14 ,18 ,20 மணி நேர வேலையை
தொழிலாளிகளிடம் சுரண்டியதும் அதற்கெதிரான எதிர்க்குரல் பல்வேறு நாடுகளில் எழுவதும் குறிப்பாக இங்கிலாந்தில் தோன்றிய குரலுக்குச் சொந்தம் சாசன இயக்கம் என்பதைப் பதிவு செய்கிறேன்.
 3 வயதுக் குழந்தைகள் கூட 12 மணி நேரம் உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டதும் தூங்கும் குழந்தைகளுக்கு சாட்டையடி கூலியாகத் தந்ததும் நம்மை நடுங்க வைக்கும் வரிகள். இதை எதிர்த்து 1836 இல் உருவானது தான் சாசன இயக்கம். இது தான் உலகின் முதன்மை அரசியல் இயக்கமாக உருவெடுத்துள்ளது.
10 இலட்சம் கையெழுத்துக்களைப் பெற்ற போதும் 30 லட்சம் கையெழுத்துகளைப் பெற்ற  முயற்சியையே பிரிட்டிஷ் பாராளுமன்றம் தள்ளுபடி செய்ததைப் பார்க்கையில் சோர்வற்று நாம் எவ்வாறு போராட வேண்டும் என்று புரிகிறது.
பெயரளவில் 1847 இல் 10 மணி நேர சட்டத்தைக் கொண்டு வரப்பட்டது எனினும் தொடர்ச்சியான இயக்கத்திற்கு கிடைத்த வெற்றி எனப் பதிவு செய்கிறார் ஆசிரியர் .
Marx, London and the First International – Journal of People
மீண்டும் 60 இலட்சம் கையெழுத்துகளைப் பெற்று இயங்கிய  சாசன இயக்கம் உலகின் பல நாடுகளிலும் பரவியதும் , மார்க்சும் ஏங்கெல்சும் 1850களில் இவ்வியக்கத்துடன் தொடர்பு கொண்டு வழிகாட்டி அதன் இறுதியில் உருவான  “கம்யூனிஸ்ட் புரட்சிக்காரர்களின் சர்வதேசக் கழகம் “ உருவாகி, அடக்கு முறையால் செயல்படாமல் போனதும் தெரிய வருகிறது.
மெல்பேர்ன் – விக்டோரியாவில் தான் கட்டிடத் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் உலகிலேயே முதன் முதலாக 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து 1856 இல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வெற்றியும் பெற்றனர் என்பதே தொழிலாளி வர்க்கப் போராட்டத்தின்  மைல் கல்லாக அமைந்தது.
இதே போன்று அமெரிக்காவில் பூஸ்டன் கப்பல் , பிலடெல்பியா , பென்சில்வேனியா போன்ற பல இடங்களில் 10 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து போராட்டங்களை  இயக்கம் நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக நைட்ஸ் ஆப் லேபர் என்ற  அமைப்பு உருவாகி , எல்லா இயக்கங்களும் இணைந்து அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு உருவாகி அது 8 மணி நேர வேலை கோரிக்கையை முன் வைத்து தொடர்ந்து இயக்கங்களை நடத்தியதோடு 1886 மே 1 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்ததே … மே தினம் பிறக்க அடிப்படையாக இருந்துள்ளது
1847-இல் நீதியாளர் கழகம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த அமைப்பில் மார்க்சும் – ஏங்கெல்சும் இணைந்து இவ்வமைப்பின் பெயரை ‘கம்யூனிஸ்ட் லீக் ” என மாற்றி , அதே போல அந்த அமைப்பின் “அனைத்து மனிதர்களும் சகோதரர்களே ” என்ற கோஷம் அகற்றி “உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்” என்ற புரட்சிகரமான முழக்கத்தை முன் வைக்கின்றனர்.
இந்த கம்யூனிஸ்ட் லீக்கின் முழக்கத்திற்கு ஏற்ப “கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ” மார்க்ஸ் ஏங்கெல்ஸ் உருவாக்கி , 1864 முதல் அகிலம் என்ற சர்வதேச தொழிலாளர் அமைப்பை உருவாக்கி 65 – இல்  ஜெனிவாவில் உரையாற்றுகிறார் மார்க்ஸ்.
அதில் தந்த முக்கிய கருத்து .. சட்டப்பூர்வமான  வேலை நேரம் என்பது அடிப்படையானது , இதில் முன்னேற்றம் இல்லாமல் , வேறு சமூக முன்னேற்றம் காண்பது அரிது, என்பதே.மார்க்சும் ஏங்கெல்சும் மார்க்சிய மூலவர்களாக இருப்பதும் , தங்கள் சமகாலத்தில் வாழ்ந்த தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்காக ஓயாது பாடுபட்டு தொழிலாளி வர்க்கத்திற்காக உழைத்தனர் என்பதை இன்று நாம் நினைவு கூற வேண்டும்.
தொழிலாளர்களின் உரிமையை வென்றெடுத்த ...
பேரெழுச்சியாக சிகாகோவில் நடைபெற்ற புரட்சி 8 மணி நேர உழைப்பு , 8 மணி நேர உறக்கம் , 8 மணி நேர ஓய்வு… என்பதை அடிப்படையாகக் கொண்ட நிகழ்வுகளும் மெக்கார்மிக் ஹார்வஸ்டிங் மெஷின் நிறுவன ஊழியர்களிடையே போலீஸின் அராஜகமும் , ஹேமார்க்கெட் சதுக்கத்தில்
நடைபெற்ற குண்டு வீச்சு , கணக்கில்லா தொழிலாளிகளை  போன் பீல்டு என்பவனின் தலைமையில் போலீஸ் சுட்டு ரத்தக் காடாக்கி நிறைய அராஜகம் செய்தது நம்மையும் வெகுவாகத் தாக்குகிறது.
வழக்கு தொடர்ந்து இயக்கத்தின் 7 தோழர்களுக்கு தூக்கு தண்டனையும் ஆஸ்கர் நிபூவுக்கு 15 வருட கடுங்காவல் தண்டனையும் நீதிபதி தீர்ப்பாக வழங்கி அநீதி இழைக்கப்பட்டது .
தொடர்ந்து ஆஸ்கர் நிபுவின் மனைவி தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு உலகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு தண்டனையை குறைக்கக்  கேட்கிறார். ஆனால் 7 பேரில் 4 பேர் தூக்கிலடப்பட , 21 வயது இளைஞன் லூசி பார்சன் டைனமைட் வெடி பொருளை வாயில் கடித்து தற்கொலை செய்து கொள்ள , இந்நிகழ்வு உலகையே உலுக்குகிறது. நவம்பர் 13 இவர்களது இறுதி ஊர்வலத்தை 5 லட்சம் பேர் கலந்து கொண்டு அது அமெரிக்காவின் கறுப்பு தினமானது.
புதியதாக வந்த ஜான் அல்ட் ஜெல்ட்  என்ற கவர்னர் மறுபரிசீலனை செய்து அநீதி இழைக்கப்பட்டதை உணர்ந்து மீதியிருந்தவர்களை விடுதலை செய்து மனசாட்சிபடி செயல்படுகிறேன் என்கிறார்.
அமெரிக்கத் தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைக்கான போராட்டமும் , சிகாகோ தியாகிகளின் தியாகமுமே இன்றைய மே தினமாக  உழைப்பாளர் தினமாக நமக்கு கிடைத்துள்ளது.
1889 இல் 2 ஆவது அகிலம் மாநாடு நடைபெற , அந்த சோசலிஸ்ட் தொழிலாளர்களின்  சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றத்தில் 18 நாடுகளில் இருந்து 400 பிரதிநிதிகள் முன்னிலையில் , அடுத்த வருடம் 1890 மே 1 சர்வதேச அளவில் தொழிலாளர்கள் இயக்கங்களை நடத்திட முடிவு செய்து
அந்த மே முதல் நாள் சர்வதேச தொழிலாளர் தினமாக மே தினமாக கொண்டாட வழிவகுத்தது.
அதே காலகட்டத்தில் ரஷ்யாவில்  ஜார் கொடுங்கோன்மை ஆட்சியின் கீழ் ரஷ்யத் தொழிலாளிகள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகியிருக்க  , லெனின் தலைமையிலான  ரஷ்யப் புரட்சிக்குக் கூட இந்த மே தினம் வித்தாக அமைய , இந்த ரஷ்யப் புரட்சியே தமிழகத் தொழிலாளி வர்க்கத்தைப்  பற்றிக் கொண்டு சென்னையில் மெட்ராஸ் லேபர் யூனியன் அமைந்திட வித்தானது.
இந்திய வரலாற்றைப் பார்த்தால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியில் 1862 இலேயே 8 மணி நேர வேலை கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது தெரிகிறது, என்றால் சிகாகோ எழுச்சிக்கு 24 ஆண்டுகளுக்கு முன்பே போராடி உலகத் தொழிலாளர் வரலாற்றில் தங்களது பங்களிப்பையும் பதிவு செய்துள்ளதை அறியலாம் .
1891 இல் பிரிட்டிஷ் அரசு புதிய தொழிலாளர் சட்டத்தைக் கொண்டு வந்து , 14 வயது வரையுள்ள குழந்தைத் தொழிலாளர்களுக்கு 9 மணி நேரமும் பெண் தொழிலாளர்களுக்கு  11 மணி நேரமும் உழைக்கக் குறிப்பிட்டது.
அதன் பிறகு 1928 இல் வேலை நிறுத்தத்தை  சட்ட விரோதமாக்கும்  மசோதாவைக் கொண்டு வந்து , தொழிலாளர் தலைவர்களை விசாரணையின்றி காவலில் வைக்க அதிகாரம் வழங்கும் பொது பாதுகாப்பு சட்ட மசோதாவை தாக்கல் செய்ய , இந்த 2 மசோதாவும் நேரு , லாலா லஜபதிராய் மற்றும் பலரது எதிர்ப்பினால் தோல்வியில் முடிய அவசர சட்டம் 1929 இல் கொண்டு வருகிறது ஆங்கில அரசு.
அப்போது பகத்சிங் , பட்டு கோஸ்வரத்தும் வெடி குண்டை பாராளுமன்றத்தில் வீச, அதைத் தொடர்ந்து கம்யூன்ஸ்ட்டுகள் , தொழிற்சங்கத் தலைவர்கள் நாடு முழுவதும் தாக்கப்பட மீரத் சதி வழக்கு உருவாவை .
தமிழகத்தில் சுதந்திரப் போராட்டத்தோடு இணைந்ததாக தொழிலாளர் வேலை நிறுத்தங்கள் அமைந்தன. 1908 இல் தூத்துக்குடியில் நடைபெற்ற கோரல் மில் தொழிலாளர் போராட்டம் குறிப்பிடத் தக்கதாக இருந்திருக்கிறது.
சென்னையின் பல்வேறு தொழிற்சாலைகள் தோன்றி கடுமையாக வேலை வாங்கப்பட 2 வியாபாரிகள் , ஜி .இராமஞ்சலு நாயுடும் ஜி . செல்வபதி செட்டியாரும் தொடர்ந்து முயற்சி எடுத்து தான் 1918 இல் மெட்ராஸ் லேபர் யூனியன் என்ற தொழிற்சங்கம் துவங்கப்படுகிறது. முதல் கோரிக்கையே 30 நிமிடமாக இருந்த சாப்பாட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும் என்றால் நாம் அன்றைய தொழிலாளர்களின் நிலையை சிந்திக்க வேண்டும்.
தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலர் தான் , பிரிட்டிஷ் இந்தியாவில்  1923 இல் மே தினத்தை கொண்டாட திட்டமிட்டார். அதன் அடிப்படையில் 1923 மே 1 அன்று சென்னை கடற்கரையில் தோழர் சிங்கார வேலர் தலைமையிலும் திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மே தினக் கூட்டங்கள் நடைபெற்றதாக இந்நூல் குறிப்பிடுகிறது.
அதனைத் தொடர்ந்து மே தினத்தின் இன்றைய தேவை பற்றி மென் பொருள் துறை , உலகமயமாக்கலில் தொழிலாளர் நிலை பற்றியும் இறுதிப் பக்கத்தில் தூக்கு மேடை ஏறிய அமெரிக்கத் தியாகிகள் படங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
இவ்வளவு போராட்டம் நிறைந்த மே தின வரலாறு, ஒரு நூற்றாண்டின் இறுதிக் கட்டமான  இந்நாட்களில் ஒவ்வொரு வீட்டிலும் தொலைக்காட்சிப்  பெட்டியின் கசடு நிறைந்த நிகழ்ச்சிகளுக்குள்  மறைந்து போய்க் கிடப்பதை எண்ணினால் கோபம் வருகிறது.
குறைந்த பட்சம் வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களோ ஆர்வமுள்ள மற்ற ஆசிரியர்களோ நம் குழந்தைகளிடம் இந்த வர்க்க அரசியலின் பார்வையை விதைக்க இந்த மே தினம் புரிதலைத் தரட்டும் .
உமா

Latest

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில்...

சாதிக் ரசூல் கவிதைகள்

1) VIP ---------- எந்த வேலையும் செய்யாத எனக்கொரு வேலை கொடுக்கப் பட்டிருக்கிறது எந்த வேலையும் செய்யாத என்னைக் கண்காணிக்கும் வேலையை நீயே தேர்ந்தெடுத்துக்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

அத்தியாயம் 22: பெண்: அன்றும், இன்றும் – நர்மதா தேவி

வேலைவாய்ப்பு - அடிப்படை உரிமை ஐஸ்லாந்து நாட்டுப் பெண்கள் 1975-ஆம் ஆண்டு அக்டோபர் 24 ஆம் தேதி ஒரு மாபெரும் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தினார்கள். உலகளவிலான பெண்ணுரிமைப் போராட்ட வரலாற்றில் இது முக்கியமான நிகழ்வு. பெண்களின்...

பசுமைப் புரட்சியின் தந்தை எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் நேர்காணல்

அஞ்சலி: எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்க்காக மறு பிரசுரம் செய்யப்படுகிறது. நேர்காணல் : எம்.எஸ்.சுவாமிநாதன் - சந்திப்பு : ப.கு.ராஜன் 4000 ஆண்டுகளில் நாம் கண்ட மகசூல் முன்னேற்றத்தை - 4 ஆண்டுகளில் சாதித்தோம் டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுக்கு அறிமுகம் ஏதும் அவசியமில்லை.சுதந்திர இந்தியாவின் வேளாண்மை வரலாற்றோடு இணைபிரியாததொரு பெயர்.இந்திய வேளாண்மை அறிவியல் ஆய்வுக் கழகத்தின் (ICAR) இன் தலைவர்,  மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் செயலாளர், திட்டக் கமிஷனின் துணைத் தலைவர், சர்வதேச அரிசிஆராய்ச்சிக் கழகத்தின் (IRRI) தலைவர் என அவர் வகித்த பொறுப்புகள் பல.பெற்ற விருதுகளையும், பரிசுகளையும் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது; சுமார் 50 இந்திய,சர்வதேசப்...

தொடர் 37: பயாஸ்கோப்காரன் – விட்டல்ராவ்

கிழக்கு ஐரோப்பிய சினிமா - ஹங்கேரிய திரைப்படங்கள்-2 சர்ரியலிஸ ஓவியக் கலையில் சால்வெடார் டாலி , ஹீரோனிமஸ் பாஷ் மற்றும் மார்க் சகல் என்பவர்கள் பகழ்பெற்றவர்கள். பாஸ் நெதர்லாந்து ஓவியர்....

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here