காலைப் பொழுதின் நாடித் துடிப்பில்
[ஆங்கில மூலம் – மாயா ஏஞ்செலோ]
மறைவதற்கு முன்பு
பல உயிரினங்களுக்கு வாழ்விடமாக விளங்கியது
ஒரு பாறை, ஓர் ஆறு, ஒரு மரம்.
நமது பூமித் தரையில்
சிறிது காலம் தங்கி
தமது எச்சங்களை விட்டுச் சென்ற
பெரிய யானை மற்றும் டைனோசர்களின்
அவசரப் பேரழிவு
உண்டாக்கிய
மிகப்பெரிய எச்சரிக்கை ஒலி
காலமும் இருளும் உண்டாக்கும் தூசியால்
மறைந்து விட்டது
ஆனால் இன்று
பாறை நம்மிடம்
தெளிவாகவும் அழுத்தமாகவும்
உரைத்தது
வாருங்கள்
என் முதுகின் மீதேறி நின்று
தொலைவில் இருக்கும்
உங்களின் தலைவிதியை நோக்குங்கள்
ஆனால்
என் நிழலில் புகலிடம் தேடாதீர்
உங்களுக்கு மறைவிடம்
நான் தர மாட்டேன்’
தேவதைகள் தங்களின்
காயம்பட்ட இருளை
பதுக்கி வைத்திருந்த இடத்துக்கு
கொஞ்சம் கீழேதான்
நீங்கள் உருவாக்கினிர்கள்
அறியாமையால் அவனுக்கு
நீண்ட சுதந்திரம் கிடைத்தது.
உங்கள் வாயிலிருந்து
உதிர்ந்த சொற்கள்
கொலைக் கருவிகளை ஏந்தின
இன்று பாறை எங்களிடம்
உரக்கச் சொல்லிற்று
என் மீது நீங்கள் ஏறி நிற்கலாம்
ஆனால் உங்கள் முகங்களை
மறைத்துக் கொள்ளாதீர்கள்.
தமிழில் – ராஜேஸ்வரி செல்லையா
![காலைப் பொழுதின் நாடித் துடிப்பில் [ஆங்கில மூலம் – மாயா ஏஞ்செலோ]| தமிழில் ராஜேஸ்வரி செல்லையா](https://bookday.in/wp-content/uploads/2020/11/0571bae88cb4a5b97e495614fe220bfd.jpg)
