மாயக் கனிகள் (Maya kanigal) – நூல் அறிமுகம்
பல்வேறு நாடுகளின் 30 நாடோடிக்கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. இக்கதைகளை யூமா வாசுகி ஐயா அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
அந்தந்த நாடுகளில் மக்களிடையே அதிகம் சொல்லப்பட்ட கதைகள் இவை என்பது நாம் நாட்டிலிருந்து இடம்பெற்றுள்ள கதைகளை படிக்கும்போது தெரியவருகிறது.
ஒவ்வொன்றும் சுவாரசியமாகதான் இருந்தது. சில கதைகளை நாம் ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கலாம். வேடிக்கையான சில கதைகள் பற்றிய அறிமுகம் உங்களுக்காக.
சிங்கத்தின் கர்ஜனை:
=================
ஆப்பிரிக்க நாட்டுக் கதையான இது,சிங்கம் எப்போதிருந்து கர்ஜிக்க ஆரம்பித்தது என்பதை வேடிக்கையாக சொல்கிறது.
மாயக் கனிகள்:
=============
ஒரு வியாபாரிகள் குழு பாலைவனத்தை கடந்து செல்லும்போது,வழியில் அப்துல்லா என்னும் முதியவர் அவர்களோடு இணைகிறார்.
போகிற வழியில் தண்ணீரைத் தேடும்போது,அங்கு சில கனிகள் இருப்பதை பார்க்கின்றனர்.அதை யாரும் சாப்பிட வேண்டாம் என அம்முதியவர் சொல்ல,ஒரு குழுவினர் மட்டும் சாப்பிட்டுவிட,அப்புறம் அவர்களின் பயணத்தில் என்னவாகிறது? என்பது தான் இந்த அரேபிய நாட்டுக்கதை.
அஜீஸின் தங்க நாணயம் :
=======================
பணத்தின் மதிப்பை,சேமிப்பைப் பற்றி சிறார்களுக்கு உணர்த்தும் சிறப்பான ஆப்கானிஸ்தான் நாட்டுக் கதை இது.
வனதேவதையும் பூச்சியும்:
======================
மின்மினிப்பூச்சிகள் எப்படித் தோன்றின? என்கிற கதையை நமக்கு சொல்கிறது இந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக் கதை.
லாங்வாங்கும் நண்பர்களும்:
=========================
இந்த சீன நாட்டுக் கதை, பிரதிபலன் பாராது மற்றவர்களுக்கு உதவும்போது,நமக்கு தேவையான சமயத்தில் தேவையான உதவி கேட்காமலே கிடைக்கும் என்பதை நமக்கு உணர்த்துகிறது.
இப்படி இத்தொகுப்பிலுள்ள எல்லாக் கதைகளுமே சிறார்களை வாசிப்பை நோக்கி இழுக்கும் வசீகரத்தைக் கொண்டிருக்கின்றன.
நூலின் தகவல்கள் :
நூல் : மாயக் கனிகள்
ஆசிரியர்(தமிழில்) : யூமா வாசுகி
ஓவியம் : பிள்ளை
வகை : சிறார் இலக்கியம்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்.
பக்கங்கள் : 123
நூல் அறிமுகம் எழுதியவர் :
ரமேஷ் ராஜா
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

