Subscribe

Thamizhbooks ad

மயான போதனை! (சிறுகதை) – மரு. உடலியங்கியல் பாலா

“கந்தா., இன்னொ என்னடா பண்ற..?. பஸ் வர்ற நேரமாச்சுதே.. சீக்ரம் களம்புடா நைனா..!  இத்த உட்டா செங்கல்பட்டுல  இருக்க உன்  காலேசுக்கு போக வேற வண்டி  கிடையாது தெரியுமில்ல ?” என அவன் தாய் வேலம்மா அதட்ட, “இதோ வந்துட்டேம்மா” ன்னு.. சொல்லிய வண்ணம்  “லஷ்மிப்பசுவை” அவசர அவசரமாக குள்ளிப்பாட்டி முடித்து “வரேண்டி செல்லம்” என அதனிடம் விடைபெற்று, கிளம்ப.. அதுவும் பதிலுக்கு தலையாட்டி “ம்மா”என்றது!

கண்ணில் நீர் முட்டியபடி “ராசா வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்டு… நொம்ப நேரம் கண்ணு முழிச்சு படிக்காத… இந்தா, அஞ்சூறு ரூவா இருக்கு.. கை செலவுக்கு  வெச்சிக்கோ… உங்க அப்பன் இருந்தா, உன்னிய தோள்ள  சொமந்தே காலேசுக்கு கூட்டி போய் இருப்பான்,.. என் தலை எழுத்து அவன் என்ன பரிதவிக்க விட்டுட்டு கண்ண மூடிட்டான்,.”. என்று ஆற்றாமையால் அழுது.. மூக்கை சிந்தியபடி…அந்த வயசுலியும் அவனை அணைத்து முத்தமிட்டு அனுப்ப, ..அவனும் “சரிம்மா நான் போய்ட்டு வாரேன்!” என்று  பஞ்சாயத்து போர்ட் பஸ் ஸ்டாண்டடுக்கு விரைகையில் …

கூட்ரோட்டில் வழிமறித்து, குறுக்கிட்ட.. மாமன் மகள் மீரா, அவனுக்காக  தன் கையால் தயாரித்த , அவனுக்கு உசுரான, கடலை மிட்டாய  உள்ளங்கையில் பாசத்தோடு திணித்து, அழுது கொண்டே “டாட்டா” காட்ட.. அவனும், செல்ல மனமின்றி வேண்டா வெறுப்பாய் விடை பெறுகிறான்.!!

ஒரு முறை மீரா… இவன் பள்ளி சீருடையான வெள்ளை சட்டையை சரியாக துவைக்காததால், அவள் மேல் கோபம் கொண்டு ஒரு மாதம் அவளுடன் பேசாமல் இருக்க… அழகு தேவதையான அவள் சரியா சாப்பிடாமல் மெலிந்துபோய், இவனிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பு கோரி, அவனுக்காக கடலை மிட்டாய் செய்து கொடுத்து அவனை சாந்தபடுத்தியதை நினைத்து பார்த்த… அவன் கண்களில் நீர் முட்டியது. அவன் மேல் அவ்வளவு அன்பு கொண்டவள்.

இந்தத் தாய் மகன் பாச போராட்டம், ஒவ்வொரு முறை அவன் மருத்துவ கல்லூரி லீவில் வந்து போகும்போதெல்லாம்,  நடைபெறும் மாமூலான நிகழ்ச்சிதான், என்றாலும்,.. ஒவ்வொரு முறையும், அதன் யதார்த்தம் ..

காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்யும்.  வேலம்மா தன் ஒரே மகனை எப்படியாவது பெரிய படிப்பு படிக்க வைக்க வேண்டும் என கனவு காண, அவனும் கஷ்டபட்டு படித்து இன்று செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில இறுதி ஆண்டில் நுழைந்துள்ளான்.

அவங்க பரம்பரை கழனிகாட்ட வித்து, நக நட்ட வித்து, தன் கடின உழைப்பால் அவனை இந்த நிலைக்கு உயர்த்தியது கண்டு அந்த “நைனார்பாளையம்” ஊரே பொறாமைப்பட்டது.. இப்போ அவள் கைவசம் அந்த பழைய குடிசை வீடும் மனையும், ஒரு பசுமாடும், சிலபல சொற்ப நகை நட்டுக்களும்தான் மிஞ்சியது.. ஆனாலும் புள்ள டாக்டர் ஆனதும் எல்லா கஷ்டமும் தொலைஞ்சி போகும் என திடமாக அவள் நம்பினாள்!

அவனும் சிறப்பாய் படித்து பல்கலைக்கழக முதல் மாணவனாக பட்டம் வாங்க , தாய் பூரித்து போகிறாள்.  தடம் மாறி… காதல் கீதல் என்று செல்லாமல் இருக்க.. அவன் தாய் உடனே அவனுக்கு திருமணம் செய்ய திட்டமிட… அவன் மெல்ல தன் தாயிடம்  தன் மாமன் மகள் மீராவையே, தான் விரும்புவதாக கூற, வந்ததே அவளுக்கு கோபம்… என்றுமே மகனை கோபிக்காத அவள்” ஏன் ராசா! உனக்கு அறுவில்ல! ஏன் உம் புத்தி இப்டி போகுது? உன் படிப்பு இன்னா?

உன் அந்தஸ்து இன்னா? போயும் போயும்  ஒண்ணாங்கிளாஸ் கூட படிக்காத அவ எங்கே ? எவ்ளோ பெரிய படிப்பு பட்ச்ச நீ எங்க? இதுக்காடா ராசா உன்ன இவ்ளோ பணம் செலவழிச்சி படிக்க வெச்சேன்.. ? என் தம்பி ஓரு குடிகாரப்பய!

அந்த பொண்ணு பொறக்கும் போதே ஆத்தாள முழுங்கிட்டு பொறந்திச்சி.. ஏணி வெச்சாகூட எட்டாதேடா நைனா! என்ன  பசப்பு பண்ணி, உன்ன மயக்கிப்புட்டா அந்த சிறுக்கி நாயின்னு எனக்கு விளங்களையே? வரட்டும் அவளுக்கு இருக்கு பூச!!” என ஊரே கூடும் அளவுக்கு அழுது  ஆர்ப்பாட்டம் பண்ண…

இதுவரை எந்த சந்தர்ப்பத்திலும் தாயை ஒரு வார்த்தை கூட எதிர்த்து பேசாத கந்தன் உள்ளுக்குள் அழுகையுடன் சோகத்தை அடக்கி கொண்டு “ஏம்மா இப்டி பண்ற.. ?அவ இந்த வீட்டுக்கு பிறந்ததுல இருந்து “காசு வாங்கா”வேலக்காரியா உனக்கு ஒத்தாசியா இருந்து, உங்கிட்ட அடி உதை வாங்கிகிட்டு, உனக்காக உசுரவிட்ர  பொண்ணாச்சே! நீ போன வருசம், இடுப்பொடிஞ்சி கிடந்தபோ, உனக்கு எல்லா வேலையும் செஞ்சி, உனக்கு சவர்ஷண பண்ணி, காப்பாத்தி உன்னை பழையபடி நடக்க வெச்சாளேமா.. அத  மறக்கலாமாமா? ! அவ நாளக்கி நம்ம வூட்ல வாக்கபட்டா, உனக்கு பொண்ணுக்கு பொண்ணா இருந்து உதவியா இருப்பாளேண்ணுதான் அப்படி சொன்னேம்மா!

அவ என்ன மயக்கவும் இல்ல! பசப்பவும் இல்ல! பாவம் அந்த வாய்செத்த பொண்ண கண்டபடி திட்டாதம்மா” என்று அடிதொண்டையில் துக்கம் அடைக்க கூற  “அதுக்காக அவள எப்டி நீ கட்டிக்க முடியும்?” என மேலும் கோபமாகி…

“எனக்கு எதிரா, அவளுக்காக பரின்ஜி பேசற அளவுக்கு விஷயம் அவ்ளோ தூரத்துக்கு முத்தி போச்சோ? என்ன சொக்கு பொடி போட்டாளோ தெரியல்லியே?” என அவள் ஒப்பாரி வைத்து அழும் நிலைக்கு ஆயத்தமாக…

கந்தன் உடனே சமாளித்து கொண்டு”சரி! சரி! விடும்மா…நா எப்பண்ணா உன் சொல்ல மீறி இருக்கேனா… ? நீ எந்த பொண்ண சொல்றியோ அவள நா கட்டிக்க தயார்.. போதுமாம்மா! நீதாம்மா எனக்கு எல்லாம்”என்று அடங்கிபோக அவள் ஒரு வழியாக சமாதானம் ஆகி, பெண் பார்க்கும் படலத்தை தொடங்கினாள்.. ஆனால் அவன் தன்மாமன் மகள் மீராவின் அழகிய ஆதரவற்ற அப்பாவி முகத்தை பார்க்கும் போதெல்லாம்… “தான்  ஒரு ஏழை விவசாயி ஆக இருந்திருக்க கூடாதோ.?.எதுக்கு இந்த பெரிய டாக்டர் பட்டம்!!

அப்படி இருந்திருந்தா  அவள கட்டிக்கொள்ள தடை ஏதும் இருந்திருக்காதே ! இந்த பாவப்பட்ட பெண்ண கடவுளே நீ தான் காப்பாத்தனும்!”என்று எண்ணி எண்ணி ஏங்கி வருந்துவான்.

ஓரிரு மாதங்களில்..  அவள் எப்படியோ கஷ்டபட்டு பாண்டிச்சேரியில் ஒரு பணக்கார பெண்ணை, சம்மதம் பேசி முடித்துவிட்டு .. மகனிடம் மெல்ல “நைனா நீ ரொம்ப  அதிர்ஷ்டக்காரண்டா..ஒரே பொண்ணு, பேரு நாகவள்ளி.. பி.எஸ்சி படிச்சிர்க்கா! வசதியுள்ள பெரிய இடம்டா?

நம்ம அந்தஸ்தே உயரபோகுதுடா!”என மகிழ்ச்சி பொங்க கூற, அவன் “சரிம்மா உன் இஷ்டபபடி செய்ம்மா!” என்று உணர்ச்சியற்று, விரக்தியாக சம்மதம் தெரிவிக்க, தன்தாய் வீட்டு சீதன அற்பசொற்ப நகைகளையும் விற்று, மாப்பிள்ளை பங்குக்கான தங்க தாலி பட்டுபுடவை, நகை நட்டு என பெண்ணுக்கு சீர் செய்து இனிதே திருமணத்தை நடத்தி முடிக்கிறாள்.

நாகவள்ளி மாநிறத்தில் பல்லெடுப்பா.. சுமாரான ஒரு பெண்..

ஒரே பெண் என்பதால் கர்வம் அதிகம், வாய் அதைவிட அதிகம். கந்தனுக்கு நேர்மாறான குணம். மணமகன் மருவீட்டுக்கு வந்த முதல் நாளே, மாமியாரை எடுத்தெறிந்து பேச.. விக்கித்து நின்றாள் வேலம்மாள். அவளுக்கு மாமியாரை கண்டாலே பற்றி கொண்டு எரிச்சல் வந்தது. தாயின் மந்திராலோசனைப்படி அவளை எதிரி போல் பார்க்க தொடங்கினாள்!

மருமகனை உள்ளங்கையில் தாங்கி, எல்லா சவரஷனைகளும் செய்து, பாண்டி அரசு ஆஸ்பத்திரியில், மாமனார் வேலை வாங்கி தர …மெல்ல மெல்ல வீட்டோடு மாப்பிள்ளை ஆனான் கந்தன்.  நாகவள்ளி அவன் மீது அதீத அன்பு செலுத்தி முந்தானையில் முடிந்து கொள்ள, அவன் மனதிலிருந்து தாயின் நினைவு மெல்ல மெல்ல அகல தொடங்கியது!

நாகவள்ளியின் தாய் “மகளே!  ஆத்தாளையும் மகனையும் அண்டவிடாம பிரிச்சிடு, மாமியாரை மதிக்கவே மதிக்காத,… இல்லன்னா என் மாமியார் மாரி, உன்னய அவ ஆட்டிப் படைப்பா! மாப்பிள கிட்ட அன்பா நடந்து வசியம் பண்ணி வச்சுக்கோ! என்ன நான் சொன்னதெல்லாம் புரியுதா? ” என தாய் தந்த , நஞ்சிகலந்த போதனைகளை, சிரமேற்கொண்டு ஒழுகி!கணவனை கைக்குள் போட்டுக் கொண்டு.. தாயும் மகனையும் பிரித்து  சந்தோஷித்தாள் நாகவல்லி.

நாட்கள் ஓடி மறைய, கந்தன் தன் அதீத திறமையாலும்,  பொறுமையாலும், கைராசியாலும் பேரும் புகழும் பெருக! சிறந்த டாக்டராக வலம்வர துவங்குகிறான். மனைவியிடம் பணம் உட்பட அனைத்து பொறுப்புகளையும் ஒப்படைத்துவிட்டு, தன் முழு கவனத்தையும் டாக்டர் தொழிலுக்கு அற்பணிக்கிறான். தாயை பற்றியோ, மீராவை பற்றியோ நினக்க கூட அவனுக்கு நேரமில்லை… தாய் போடும் கடுதாசி அனைத்தும் அவன் பார்வைக்கு போகாமல் கிழித்து குப்பை கூடையில் தஞ்சமடைகிறது..

வேலம்மாள்… அவன் முதல் குழந்தைக்கு தொட்டில் போடும் போது வந்து அவர்களிடம்,  கேவலப்பட்டு அவமானப்பட்டு அழுதுகொண்டே வீடு திரும்பிய நிகழ்வே அவன் தன் தாயை கடைசியாக கண்ட நிகழ்ச்சி.

வேலம்மா தனிமையில் துவள்கிறாள்… இருந்த சொத்தெல்லாம் புள்ள படிப்புக்கு வாரி இறைத்துவிட்டு, இப்போ கைல கால்நா கூட  இல்லாம, உழைக்க உடம்புல தெம்புமில்லாம… அந்த ஒலை குடிசையில் முடங்கி போகிறாள்! போதாத குறைகு டீ பி நோய் வேறு தொற்றிகொள்ள, தினம் தினம்  வாழ்க்கையே சித்ரவதையாய் மாறுகிறது.. நல்ல வேளை…

வறுமையால் திருமணம் ஆகாமல், குடியால்  குடல்வீங்கியே அப்பன் போய் சேர .. மீராதான்… இன்று அத்தையே கதி என்று அவளுக்கு உறுதுணை ஆகிறாள் . . அந்த அழகு தேவதை மீராதான், பயிர் வேலைக்கு போய் தினக்கூலி பெற்று, தன்னை சுமந்து பெறாத… அந்த தாய்க்கு, அரைவயிறு கஞ்சி ஊத்துகிறாள்!

பிள்ளையோ பெண்டாட்டிதாசனாக, முழுதுமாய் மாறி… தாயை கண்டுகொள்வதே இல்லை. ஊர் பக்கம் திரும்பிகூட பார்ப்பது இல்லை. தாயிடம் பேச்சு வார்த்தையே வைத்து கொள்ளாத கல் நெஞ்சனாக மாறிப்போகிறான்….

மீராவின் அப்பாவியான அழகு முகத்தை  பார்க்கும் ஒவ்வொரு நொடியும் , மனசாட்சி அணுஅணுவாய் அவளை சித்ரவதை செய்ய “தாயே உன்ன உதாசீனப்படுத்தி, உன் அரும தெரியாம உனக்கு துரோகம் பண்ணி புட்டேனே! எனக்கும் என் மகனுக்கும் மாடாய் உழச்ச உன்னிய  ஏமாத்திப்புட்டேனே!

என் அரும மவன எவகிட்டயோ தாரவாத்து கொடுத்து என் ராசாவ இழந்துட்டேனே?  உன்ன கட்டிக்க அவன் எவ்ளோ ஆசப்பட்டானே! அவன் ஆசைலேயும் ,உன் ஆசையிலேயும் மண்ண வாரி போட்டுட்டேனே! என் பையன்  எவ்ளோ எடுத்து சொல்லியும் இந்த இராட்சசி முண்ட கேக்கலையே…?? இன்னிக்கி நிரா தரவா நிக்கரேனே! “என்று அவள் அழுது அரற்றும் போதெல்லாம்,மீரா மறைவிடத்துக்கு போய், அத்தைக்கு தெரியாமல் குலுங்கி குலுங்கி அழுவாள், .. அவன் தன்னை விரும்பியதை நினைக்கும் போதெல்லாம் அவளுக்கு ஒரு சோகமான சுகம் கிடைக்கும்.. கண்ணனை விரும்பிய மீராவுக்கு மோட்சம் கிடைத்தது..

ஆனால் கந்தனை விரும்பிய இந்த மீராவுக்கோ அழுகையே மிஞ்சியது..?? ஒரிரு மாதங்களில் கந்தன் குடும்பத்துடன் மேல்படிப்புக்காக லண்டன்   செல்கிறான். நோய் முற்றி, மருத்துவ வசதி இன்றி வேலம்மாள்… பிள்ளையின் நினைவிலேயே தினம் தினம் ஏங்கி ஏங்கி உயிர் விட..  நிர்கதியாய்..

யாருமற்ற அனாதையாய் மீரா தனிமரமாய் நிற்கிறாள்..!.  ஊர் மக்கள் பரிதாபப்ட்டு.. பாண்டிக்கு  செய்தி அனுப்ப… கந்தன் லண்டனுக்கு சென்று விட்டதாக பதில் செய்தி வருகிறது. ஊரார் ..”யார் அவளுக்கு கொள்ளி போடுவது?”என கேள்வி எழுப்ப… மீரா முன்வந்து ஈம சடங்கு செய்கிறாள்.இறுதில்… பிள்ளை இருந்தும் … அனாதை பிணமாய் ஆகிப்போன அந்த தாய்..

மயானத்தில் சிதையில்  கிடத்தப்பட்டு, “வாய்க்கரிசி போட்டு  கட்சியா முகம் பாத்துக்கோங்கோ! மூடப்போறேன்” என வெட்டியான் கட்டியம் கூற, மீரா அந்த தாயின் சலனமற்ற முகத்தை உற்றுப்பார்க்கிராள் .. வேலம்மாவின் கண்கள் சட்டென்று திறந்து விழிநீர் பெருக்கி “என்ன மன்னிச்சிடு தாயே” என கெஞ்சுவது போல் பிரமை உண்டாக…

மீராவின் வெம்மையான  கண்ணீர்த்துளிகள் சடலத்தின் முகத்தில் பட்டு தெரிக்கிறது.. “சுடலைல யாரும் அழுவக்கூடாது! அது தெய்வக்குத்தமாகிப்போய்..  செத்தவங்க ஆத்மா சாந்தியடையாம போயிடும்”என வெட்டியான் “மயான போதனை” செய்து எச்சரிக்க. எல்லாம் முடிந்து போகிறது.

தன் குடிசைக்கு திரும்பிய மீரா “கண்ணா!  பிறந்ததும் தாயை பிரித்தாய்!  கந்தனின் அன்பை  கானல் நீராக்கி  கண்ணாமூச்சி காட்டி,அவனையும் பிரித்தாய்..!  குடிகாரனாயினும் அப்பனாய் எனக்காக கண்ணீர் சிந்திய  தந்தையையும் பிரித்தாய்.!  கடைசியாக ஒரே ஆதரவாய்  இருந்த என் அத்தையையும் இப்போது பிரித்தாய்..!!.

என்னை இந்த உலகை விட்டு எப்போதடா பிரிப்பாய்?? “என எண்ணியவாறு, மௌனமாய் சுவற்றில் தலை சாய்த்து தேம்பி தேம்பி அழுவதை…,  அங்கு  மாட்டியிருந்த பழைய.. வண்ணம் மங்கிப்போன  கேலண்டர் படத்தில்.. ராதையுடன் காதலாய் இணைந்து குழலூதும் கண்ணன்,  இவளை எதுவுமே நடவாததுபோல், மங்காத புன்சிரிப்புடன் தொடர்ந்து கண்கொட்டாமல் பார்த்து கொண்டிருந்தான்.

பி கு: இந்த கதையை இவ்வளவு சோகமாக முடிக்க எனக்கும் தான் மிகவும் கஷ்டமாக உள்ளது. ஏதாவது டுவிஸ்ட் வைத்து சுபமாக முடிக்கலாம் என்று கூட சிலபலமுறை யோசித்ததுண்டு!  ஆனால், பாசத்தை கொட்டி, உழைப்பை கொட்டி, மகனை உயிருக்குயிராய் வளர்க்கும் எண்ணிலடங்கா  தாய்மார்களின் இன்றைய நிதர்சன நிலைமை  இதுவாகத்தான் உள்ளது என்பதே கசப்பான உண்மை. சில முக்கிய முடிவுகள் தவறாய் போனால் விளைவுகள் படு பயங்கரமான சோகமாய் அமைவது உண்மையிலும் உண்மையே!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். Latest

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய...

திரைவிமர்சனம் : விடுதலை – ம.செல்லமுத்து

படம் : விடுதலை நான் பார்த்து ரசித்த படங்களில் மிக நீண்ட வருடங்களுக்குப்...

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

கவிதை : பட்டாம்பூச்சி – ச. இராஜ்குமார்

பட்டாம்பூச்சி  *************** தகிக்கின்ற வெயிலில் எதன் மீதும் அமரவில்லை பட்டாம்பூச்சி.... மலர்களை தேடி அலைந்து கொண்டேயிருக்கிறது பசியாறவில்லை சிறு ஓடையிலும் நீர் பாய்ச்சுகின்ற நிலத்தின் வரப்புகளிலும் நீர் பருகிவிட்டு மீண்டும் மலர்களை தேடியலைகிறது .. உழைப்பின் களைப்பில் மரத்தின் நிழலில் சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த என் மனதில் பல வண்ணங்களைத் தூவிச் சென்றது அந்த பட்டாம்பூச்சி ....!! ச. இராஜ்குமார் திருப்பத்தூர்...

கவிதை : நிராகரிப்பு நிஜங்கள் – சே கார்கவி கார்த்திக்

நிராகரிப்பு நிஜங்கள் _____ தூண்களை பற்றிய படி படரும் வெற்றிலைக்கொடி குழந்தைகளின் தீண்டலில் நிலைகுளைவதில்லை கிள்ளியெறியப்பட்ட காம்பில் சிறு பச்சையமும் துளிர்விட்ட வித்தின் மொத்த பச்சையமும் நிரம்பியுள்ளன ஆள்காட்டி விரல் நீட்டும் தூரத்தில் வேண்டிய நிலமும் உண்டு வேண்டாத நபரின் பயணமும் உண்டு அண்ணனிடம் தம்பியின் மரியாதையையும் தம்பியிடம் அண்ணனின் பாசத்தையும் வரப்பில்லாமல் பிரிக்கிறது கம்பிகள் வளைந்தாடும் அப்பாவின்...

கவிதை : பிரிவு – மஹேஷ்

பிரிவு!   பிரிவுக்கு முந்தைய கேளிக்கைகள் இறந்தகாலத்தின் தொலைதூரப்புள்ளியில்!    காலத்தால் நெய்யப்பட்டது பயணம்!  நொடிகளின் பின்னே  ஓடுவது சாத்தியமின்றி  நோய்வாய்ப்பட்டுக் கைபிசைகிறது  நிதர்சனம்!    இரவும் பகலும் நிமிட நொடிகளும்  ஒன்றையொன்று  விழுங்கிக் கொள்கின்றன!    சடுதியில் சத்தமின்றி நரைத்துப்போன  வயதின் பின்னணி  அறிய முற்பட  காலமில்லை!   உருமாற்றப்பட்ட  சந்திப்புகளைக்கடந்தபடி  ஓடுகிறது நிகழ்காலம்!    அறிய முற்பட்டு பிரிவுக்கான பிடிபடாத காரணங்கள்  பலவாயின!  தொடர்கதைகளில் இணைகின்றன வேறு வேறு சிறுகதைகளும் கவிதைகளும்!  ......   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here