மழை கவிதை – சூர்யநிலா

Mazhai Poem By Suryanila சூர்யநிலாவின் மழை கவிதை
இந்த நதிகளுத்தான் எத்தனை கோபம்
பெய்த மழையெல்லாம் தன் மீதே
பொழிவதாக.
அது
ஆவேசத்தில் உருண்டு, மிரண்டு
பெரும் பாறைகளில் மோதிக் கொண்டு
உடைந்துப் போகிறது.
மழை,
நதிகளுக்காக பெய்வதில்லை.
சாக்கடைகளில் விழவும்
அவதானிப்பதில்லை.
அது எல்லோருக்குமாக பெய்கிறது.
நிலங்களை தழுவிப் பயிராகிறது.
மரங்களை புணர்ந்து கனியாகிறது
மானிடத்தில் நுழைந்து உயிர் நீராகிறது.
மழை,
தூய்மையானது
மண்ணில் விழுந்துதான்
அது அழுக்காகிப் போகிறது
மழை,
எல்லோருக்குமானது
அதை அவரவர் சுயத்தில்
மாற்றிக் கொண்டு
வைகிறார்கள்..
நொய்கிறார்கள்..
கொண்டாடுகிறார்கள்..
மழை,
எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் பொழியத் தொடங்குகிறது.
மழைக்கு,
எல்லாம் ஒன்றுதான்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.