மழை
மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கிறது பூமி
மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன
உயிரினங்கள் ஊர்வன, பறப்பன, நடப்பன
மழைக்காக எப்பொழுதும் மகிழ்ச்சியாய் காத்திருக்கின்றன
மரம் செடிகொடிகள் தாவரங்கள்
மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன
ஆறு குளம் குட்டை ஏரி வாய்க்கால்கள், வயல்கள், கடல்கள்.
மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன
குடிநீர் வேண்டிய மனிதம்.
மழைக்காக எப்பொழுதும் காத்திருக்கின்றன
மௌனமாய் மலைகள்.
விசும்பின் விந்து மழை.
மழையைத் தான் எப்போதும் ஆவலாய்
எதிர்ப்பார்க்கிறது என் மனம்.
என்னை வாழ வைப்பது மழை.
உலகை வாழவைப்பது மழை.
மழை நம்பியே என் வாழ்க்கை.
மழை என் குடிநீர். மழை என் உயிர் நீர்.
ந க துறைவன் வேலூர்