எறும்பிற்கு உதவிய கிளி
ஆற்றங்கரையில் ஊர்ந்த எறும்பு
தவறி ஆற்றில் விழுந்தது
கரையேறும் வழி தேடி
அங்கும் இங்கும் அலைந்தது.
மரத்தில் இருந்த கிளியொன்று
எறும்பின் நிலை பார்த்தது.
இலையொன்றை பறித்துக் கிளி
எறும்பின் அருகில் போட்டது
நீரில் மிதந்த இலைஏறி
எறும்பு கரை சேர்ந்தது
உயிர் கொடுத்த கிளிக்கு
நன்றி சொல்ல துடித்தது
மறைந்திருந்த வேடன் ஒருவன்
கிளியைக் குறி வைத்தான்
எறும்பு அவன் கால்கடித்து
அம்பு தவறிச் சென்றது
உயிர் பிழைத்த கிளி
அழகாய் வானில் பறந்தது
உதவி செய்யும் நல்லோர்க்கு
என்றும் உதவி கிடைக்கும்
**********************
K.N.Swaminathan
98410 94270
[email protected]