புத்திசாலிக் காக்கா…
தண்ணீர் தேடிக் காக்கா ஒன்று அங்கும் இங்கும் அலைந்தது
கோடைக் காலம் ஆனாதலே தண்ணீர் எங்கும் கிடைக்கலை
தாகத்தோடு அந்தக் காக்கா குடிசைப் பக்கம் வந்தது
குடிசையிலே காக்கா தண்ணீர் பானை ஒன்றைப் பார்த்தது
ஆவலோடு நீர் குடிக்கப் பானை மேலே அமர்ந்தது
காக்கையோட அலகு அந்தப் பானை வாயில் நுழையலை
புத்திசாலிக் காக்கா கொஞ்சம் கல் எடுத்து வந்தது.
கல்லை எல்லாம் பானைக்குள்ளே மெது மெதுவாய் போட்டது
கல்லை எடுத்து போடப்போட தண்ணீர் மேலே வந்தது
தாகத்தோடு இருந்த காக்கா தாகம் தீரக் குடிச்சுது

