மைக்ரோ ஆர்என்ஏ (Micro RNA) கண்டுபிடிப்புக்காக இருவருக்கு மருத்துவ நோபல்
பல்செல் உயிரினத்தின் ஒவ்வொரு செல்லிலும் அதே டிஎன்ஏ தான் இருக்கிறது. எனினும் ஒவ்வொரு செல்லும் ஒரு குறிப்பிட்ட கடமைமையை மட்டும் செய்வது எப்படி சாத்தியமாகிறது? எல்லாக் கடமையையும் செய்யும் சாத்தியம் எல்லா செல்களுக்கும் இருந்தாலும், அவையெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டு ஒவ்வொரு செல்லும் குறிப்பிட்ட கடமையை மட்டும் நிறைவேற்ற செய்யும் பொறியமைவு என்ன? இக்கேள்விக்கு விடையளித்த இரண்டு விஞ்ஞானிகளுக்கு இந்தாண்டு உடற்கூறியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல்பரிசு கிடைத்துள்ளது. ஒருவர் விக்டர் அம்ரோஸ், மற்றவர் கேரி ரூகுன்.
மரபணுக்களில், குறு ஆர்.என்.ஏ (Micro RNA) எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது பற்றி இவர்களின் ஆராய்ச்சி இருந்தது.எல்லாக் கடமையையும் செய்யும் சாத்தியம் எல்லா செல்களுக்கும் இருந்தாலும், அவையெல்லாம் கட்டுப்படுத்தப்பட்டு ஒவ்வொரு செல்லும் குறிப்பிட்ட கடமையை மட்டும் நிறைவேற்ற செய்யும் பொறியமைவு என்ன?
விக்டர் ஆர். அம்ப்ரோஸ் :

விக்டர் அம்ரோஸ் 1953ம் ஆண்டு அமெரிக்காவின் நியூஹாம்ஷயர் மாநிலத்திலுள்ள ஹனோவர் நகரில் பிறந்தார். புகழ்பெற்ற மச்சாசூசெட் தொழில்நுட்ப கழகத்தில் 1979ம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார், 1992-2007வரை டாட்மௌத் மருத்துவப் பள்ளியில் பேராசிரியாக பணியாற்றியிருக்கிறார். தற்போது மச்சாசூசெட் மருத்துவப் பள்ளியில் இயற்கை அறிவியலின் சில்வர்மேன் பேராசிரியாராக இருக்கிறார்.
கேரி ரூகுன் :
கேரி ரூக்குன் கலிஃபோர்னியாவின் பெர்க்லி நகரில் 1952ம் ஆண்டு பிறந்தார். 1982ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்முனைவர் பணியை மச்சாசூசெட் தொழில்நுட்ப கழகத்தில் 1982-85வரை செய்தார். 1985ம் ஆண்டு மச்சாசூசெட் பொது மருத்துவமனையிலும் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியிலும் முதன்மை ஆய்வாளராக பணியிலமர்ந்தார் தற்போது இதே நிறுவனங்களில் மரபணுவியல் பேராசிரியராக இருக்கிறார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

