மீனா
இப்போது நான் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருக்கிறேன் இரவு 9:30 மணி இருக்கும் வானத்தைப் பார்க்கிறேன் இருண்டுபோன பிரபஞ்சம். மீண்டும் வீட்டிற்குள் நுழைந்து டார்ச் லைட்டை எடுத்து தலையில் கட்டிக் கொண்டு மண்வெட்டியை தோளில் சுமந்து கொண்டோம் ஒரு கையில் முருகன் தந்த கட்டைப்பை எடுத்துக்கொண்டு வெளியே வருகிறான்.
இடுப்புப் பகுதியில் அரிப்பை சரி செய்து கொண்டிருக்கிறான் தன் பற்களால் மணி (நாய்)
நான் எப்போதெல்லாம் டார்ச் லைட்டை தலையில் கட்டுகிறேனோ அப்போதெல்லாம் எனக்கு முன்னாக கிளம்பி விடுவான்.
இன்றும் அப்படித்தான் கிளம்பி நிற்கிறான். நான் அடையவேண்டிய இடத்தை அவன் பத்துமுறை சென்று வருவான். என்னால் நடக்க இயலாமையை அவன் வாலை ஆட்டி கொண்டிருக்கு ஓடுவது எனக்கு வருத்தம் தான் அளிக்கும்.
முருகனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்று இப்போது கேட்கணும் போல தோணும் மனதிற்கு
மகள் ஆசைப்பட்டாள்
பொம்மைகள் உள்ளன வாங்கி தர வேண்டியது தானே இப்படி பால் குடிக்கும் ஆட்டுக்குட்டியை வாங்கி இறக்க செய்து விட்டாரே. கட்டைப்பையில் இருப்பது நேற்றோ அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு பிறந்த குட்டியோ தெரியவில்லை.
ஊத்துப்பாலுக்கு ஏற்றுக் கொள்ளாத உயிர்.
காற்றில் கலந்துவிட்டது.
மண்ணை பெரிய அளவில் எதுவும் தோண்ட தேவையில்லை போதுமான அளவு தோண்டியவுடன் கட்டைப் பையிலிருந்து குட்டியை அடக்கம் செய்து விட்டு வீடு திரும்புகிறேன்.
என் வீட்டு வாசலில் முருகனும் முருகனின் மகளும் நின்று கொண்டிருக்கிறார்கள்.
மணியோ குலைத்துகொண்டு அவர்களை நோக்கி ஓடுகிறான்
நானும் அவன் பின் டேய் டேய் கம்முனு இரு கம்முனு இரு என்று சொல்லிக்கொண்டே ஓடுகிறேன்.
தாத்தா மீனா எங்க தாத்தா
செத்துப் போயிட்டாளாமா?
அப்பா சொல்றார்.
ஆமாஞ் சாமி
அழுகை தீவிரமானது மகளுக்கு
ஆறுதல் படுத்திக் கொண்டே முருகன் செல்லுகிறான் வீட்டிற்கு.
– மணவை கார்னிகன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகுந்த மகிழ்ச்சி எண்ணற்ற நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்