புத்தகத்தின் உள்ளே ஒரு ஆறு அறிவியல் கட்டுரைகளின் தொகுப்பு.
✨யானை மடிந்தாலும் பொன்;ஐசான் மறைந்தாலும் பயன்.✨
இந்த நூற்றாண்டின் வால் நட்சத்திரம் என்று போற்றப்பட்ட ஐசான் வால் நட்சத்திரத்தின் மாயம் குறித்து விளக்குகிறது.
🦟மழையில் எப்படி கொசு பறக்கிறது?🦟
வானத்தில் இருந்து வீழ்கின்ற மழைத்துளியானது கொசுவைப் போல் ஐம்பது மடங்கு எடை கொண்டிருந்த போதும் பெய்கின்ற மழையினூடே எவ்வாறு கொசு பயணிக்கின்றது என்பதை பற்றி விளக்குகிறது.
🐆மீண்டெழும் வேங்கைகள் 🐆
இக்கட்டுரையை படிக்கும் வரை Cheetah என்பதை சிறுத்தை என நினைத்திருந்தேன்.ஆனால் உண்மை அதுவன்று.
Cheetah என்பது வேங்கையாகும்.Leapord தான் சிறுத்தை.
வேங்கை என்னும் விலங்கு சிங்கம்,புலி,சிறுத்தைப்புலி ஆகியவை அடங்கிய பெரும்-பூனை குடும்பத்தை சார்ந்த விலங்காகும்.
இந்திய நாட்டில் வேங்கைகள் இல்லை என்று நம் இந்திய அரசு 1952 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பு வெளியிட்டது.வேங்கை விலங்கின் உடலமைப்பு,அதன் சிறப்பு, முகாலய காலத்தில் வளர்ப்பு விலங்காக பழக்கப்பட்ட வேங்கை போன்றவற்றை பற்றி விவரிக்கின்றது.
🐈பூனை குடிக்கும் பால்🐈
பூனையிடம் வைக்கின்ற பாலானது தரையில் சிந்தாமல் சிதறாமல் பருகுகின்ற ஆற்றல் பூனைக்கு மட்டும் உள்ளது.ஆனால் நாய்க்கு இவ்வாற்றல் இல்லை.ஏன்? என்று கேள்விக்கு பதில் அளிக்கிறது இக்கட்டுரை.
🔍கண்ணாடியே!சுவர் கண்ணாடியே..!🔎
ஒரு மனிதன் தன் உடலை கண்ணாடியில் பார்க்கும் போது இது நான் தான் என்று அறுதியிட்டு கூற முடிவதைப் போல எந்தெந்த விலங்குகள் தன்னை கண்ணாடியில் பார்க்கும் போது இது நான் தான் என்பதை தன் உடல் அசைவுகள் மூலம் எவ்வாறு நிரூபிக்கச் செய்கின்றது பற்றி தெரிவிக்கின்றது.
🌴தென்னையின் தாயகம் எது?🌴
பல்வேறு நாடுகளில் காணப்படுகின்ற தென்னை மரம் மற்றும் தேங்காயின் அமைப்பு,ஏன் தேங்காய்க்கு “Coconut” என ஆங்கிலத்தில் பெயர் வந்த காரணத்தை பற்றி தெரிவிக்கின்றது.
ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான அறிவியல் பார்வையும் விளக்கத்தையும் கொண்டுள்ளன.
ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்.
வெளியீடு: புக்ஸ் ஃபார் சில்ட்ரன்.
₹ : 40/-